பட்ஜெட் 2018 : என் கருத்து

Source : Google image search

* பசுமை புரட்சிக்கு வித்திட்ட M S சுவாமிநாதன் தலைமையில் விவசாய பிரச்சனைகளை தீர்க்க அமைக்கப்பட்ட கமிட்டி (2004-06) தனது அறிக்கையை தயாரித்து வழங்கி பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிறது.

அதில் கூறப்பட்டுள்ள முக்கியமான தீர்வுகளில் ஒன்று விவசாய உற்பத்திக்கு அரசாங்கம் குறைந்தபட்ச ஆதார விலையை (Minimum Support Price - MSP) விட 1.5 மடங்கு அதிகம் விலை தரவேண்டும் என்பதே. இந்த அறிவுரையை மோடி இந்த முறை செயல்படுத்தியுள்ளார். இனி விவசாய பொருட்கள் MSP விலையை விட 1.5 மடங்கு அதிக விலைகொடுத்து அரசாங்கம் கொள்முதல் செய்யும்.

மேலே சொன்ன அறிவிப்பு விவசாயிகளுக்கு நல்ல விலை ஈட்ட உதவி செய்யும். அதே போல் விவசாய பதப்படுத்துதல் மற்றும் குளிர் சாதன வசதிக்கு அதிக தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. Sea food ஏற்றுமதிக்கு 10000 கோடி ஒதுக்கீடு வரவேற்கப்படவேண்டிய அம்சம். விவசாய கடன் தள்ளுபடி எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது நல்லவிஷயம்.

* பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. (குறையும் என்ற நடுத்தர மக்களின் கனவில் மண் விழுந்தது தான் மிச்சம்)

* 10 கோடி மக்களுக்கு 5 லட்ச ரூபாய் இன்சூரன்ஸ் என்பது எப்படி செய்யப்போகிறார்கள் என்று புரியவில்லை. (இது அதிக செலவு பிடிக்கும் சமாச்சாரம்)

* 250 கோடி வரை வருடத்திற்கு தொழில் செய்யும் நிறுவனங்களின் வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது Small & Medium Scale Industry என்றழைக்கப்படும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பெரிய பயனை தரும். ஆனால் பெரிய நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்கப்படவில்லை.

இதில் கவனிக்க படவேண்டியது மூன்று விஷயங்கள்

1. வரி தாக்கல் செய்யும் 6 லட்சம் நிறுவனங்களில் 7000 நிறுவனங்களை தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் 250 கோடி வரை மட்டுமே தொழில் செய்கின்றனர். எனவே அந்த 7000 பெரிய நிறுவனங்களை தவிர மற்ற அனைத்து நிறுவனங்களுக்கும் 5% வரி சலுகை கிடைக்கும்.

2. MSME நிறுவனங்களே நாட்டில் அதிக அளவில் வேலை வாய்ப்பை வழங்கிவருகின்றனர். மோடியின் மீதுள்ள குற்றச்சாட்டான வேலைவாய்ப்பு உருவாக்காமை என்பதை எதிர்கொள்ள இது உதவும் என்று மோடியின் கணக்கு

3. பெரிய நிறுவனங்களுக்கு இப்பொழுது வரிச்சலுகை வழங்கினால் அதை எதிர்க்கட்சிகள் மோடிக்கு எதிராக தேர்தலில் பயன்படுத்தக்கூடம் என்ற ஐயம் காரணமாகவே அந்த முடிவு தள்ளிப்போடப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள் (Suit Buit Ka Sarkar என்ற ராகுல் காந்தியின் குஜராத் பிரச்சாரத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது ஒரு உதாரணம்)

* பங்குசந்தையில் முதலீடு செய்து ஒரு வருடத்திற்கு பிறகு வரும் லாபம் 1 லட்சரூபாய்க்கு மேல் செல்லும் பொழுது 10 சதவீதம் வரி (Long Term Capital Gain - LTCG) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் சந்தையில் எதிரொலித்தது. Sensex மற்றும் Nifty இரண்டும் பெரிய அளவில் சரிந்தன.

budget 2018
Source : Google image search

இதில் கவனிக்கப்படவேண்டிய விஷயம்

LTCG வரி இந்தியாவில் புதிதல்ல. இதற்கு முன் LTCG நீக்கப்பட்ட பொழுது STT என்ற வரி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இன்று மீண்டும் பழைய LTCG வரியை கொண்டுவந்து விட்டு STTயை நீக்க முடியாது என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். இது சந்தையில் -ve வாகவே பார்க்கப்படுகிறது.

* ராணுவத்திற்கு ஒதுக்கீடு பெரிய அளவில் அதிகரிக்கப்படவில்லை. Direct Tax பொறுத்த Standard Deduction அறிவிப்பை தவிர பெரிய மாற்றம் ஏதும் இல்லை.

* கல்விக்கு 1 லட்சம் கோடி, 24 புதிய மருத்துவ கல்லூரிகள், வருட வருடம் 1000 BTech மாணவர்கள் IITயில் Ph.D படிக்க ஏற்பாடு போன்றவை கல்வி சார்ந்த பெரிய அறிவிப்புகள். (அப்படியே யாராச்சும் தமிழ்நாட்டில் AIIMS மருத்துவமனை எப்பொழுது அமைக்கப்படும் என்று கேட்டு சொன்னால் தேவலை)

* Education Cess 3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமா உயர்த்தி இருப்பது பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. (இன்னும் எத்தனை வரிதான் நடுத்தர வர்க்கம் கட்டவேண்டும் என்ற கேள்வி எழாமல் இல்லை)

* ரயில்வே துறைக்கு நிதி 1.31 லட்சம் கோடியில் இருந்து 1.48 லட்சம் கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது நல்லவிஷயம். ரயில் டிக்கெட் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆள் இல்லா ரயில்வே கேட் அனைத்தும் மாற்றப்படும் என்று இன்னும் எத்தனை பட்ஜெட்டில் அறிவிப்பார்கள் என்று தெரியவில்லை.

* டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு ஒதுக்கீடு இரண்டு மடங்காக 3000 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் இந்த பட்ஜெட் 2019 தேர்தலையும் 2017 குஜராத் தேர்தல் முடிவையும் மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. இந்த பட்ஜெட் வாசிக்கப்பட்ட அதே நாளில் ராஜஸ்தானில் நடத்த நாடாளமன்றத்துக்கான இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான BJP 3 தொகுதிகளில் மண்ணை கவ்வியுள்ளது கவனிக்கப்படவேண்டிய விஷயம்.

Demonetisation, Surgical Strike, GST என்று அடுத்தடுத்த risk எடுத்த மோடி இந்தமுறை corporate மற்றும் நடுத்தர மக்களை கண்டு கொள்ளாமல் அடித்தட்டில் இருக்கும் விவசாயிகளை மட்டும் மனதில் வைத்து பட்ஜெட் வெளியிட்டு இன்னுமொரு risk எடுத்துள்ளார். பார்ப்போம் அவர் எடுத்திருக்கும் இந்த risk பயனளிக்கிறதா என்று

2019 வேகமாக நெருங்குகிறது ..

உதவிய குறிப்புகள்

* Open இதழ் Feb வெளியீடு - பட்ஜெட் 2018 சிறப்பு கட்டுரை

* இந்தியா டுடே இதழ் Feb வெளியீடு - பட்ஜெட் சிறப்பு கட்டுரை

* http://www.livemint.com/Home-Page/lwJfasRkbJdVmaadzgW4aI/Budget-2018-Its-all-about-politics-politics-politics.html

* http://www.livemint.com/Politics/zz7NOxslQR3F3EV1tjTt3I/Budget-2018-promises-to-fix-crop-support-prices-at-50-over.html

* http://indianexpress.com/article/business/budget/union-budget-2018-arun-jaitley-interview-fiscal-slippage-is-theoretical-govt-committed-to-glide-path-5048526/

* https://economictimes.indiatimes.com/news/economy/policy/davos-forgotten-modi-is-turning-make-in-india-into-protect-in-india/articleshow/62774560.cms

Comments

Popular posts from this blog

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Download Tamil books free in PDF format - Project Madurai

சங்கதாரா புத்தக விமர்சனம்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)

குட்டி தகவல்: "பிங்க் சிட்டி" ஜெய்ப்பூர் - பெயர் வந்த கதை