Posts

Showing posts from 2021

நிதி தருவது மத்திய அரசு ! பெயர் வாங்குவதோ மாநில அரசு ! தூங்கி வழியும் காங்கிரஸ் & பாஜக

ஒரு மருத்துவ கல்லூரி கட்டினால் அதில் 60 சதவீத நிதி மத்திய அரசு தருகிறது. மாநில அரசு பங்களிப்பு 40%. ஏற்கனவே இருக்கும் மருத்துவ கல்லூரியை தரம் உயர்த்த ஆகும் செலவில் மத்திய அரசு 80% நிதியை தருகிறது. மாநில அரசு பங்களிப்பு 20% குன்றத்தூர் - ஸ்ரீபெரும்புதூர் நான்கு வழிச்சாலை - பணிகளை மேற்கொள்வது தமிழக மாநில நெடுஞ்சாலை துறை. ஆனால் நிதி மொத்தமும் மத்திய அரசு தருகிறது தாம்பரம் - செங்கல்பட்டு 8 வழிச்சாலை - பணிகளை மேற்கொள்வது தமிழக மாநில நெடுஞ்சாலை துறை. ஆனால் நிதி மொத்தமும் மத்திய அரசு தருகிறது சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு அளிக்கவிருக்கும் நிதி - Rs 63000 கோடி இப்படி பல முக்கிய திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பு அதிக அளவில் இருக்க (காங்கிரஸ்/பாஜக யார் ஆட்சி செய்தாலும்), எல்லாமே மாநில அரசு நிதியில் தமிழக அரசு தனி ஒருவனாக சாதித்ததை போன்ற ஒரு மாய பிம்பத்தை திமுக, அதிமுக இருவருமே வெற்றிகரமாக உருவாக்கி வைத்துள்ளார்கள்.. இந்த பிம்பத்தை உடைக்காத வரை காங்கிரஸ்/பாஜக இரண்டும் தமிழகத்தில் தேவை இல்லாத ஆணிகளாகத்தான் பார்க்கப்படும்...