பட்ஜெட் 2019 - என் புரிதல் (சரியாக செல்லாதவை)
வறுமையை ஒழிக்கவேண்டும், வளர்ச்சியை பெருக்கவேண்டும். அதற்கு திட்டங்கள் வேண்டும். திட்டங்களுக்கு செலவு செய்ய பணம் வேண்டும். பணத்திற்கு என்ன செய்யலாம் ?? இது வரை இருந்த எல்லா நிதியமைச்சரும் எதிர்கொண்ட பிரச்சனை இது தான்.. பணத்தை திரட்ட அரசு கடன் வாங்கலாம், பெட்ரோல் டீசல் வரியை உயர்த்தலாம், GST வரியை உயர்த்தலாம், பணக்காரனுக்கு அதிக வரி விதிக்கலாம், மத்திய அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்று நிதி திரட்டலாம். இறக்குமதிக்கு வரியை உயர்த்தலாம். இவைதான் தான் காலம் காலமாக எல்லா நிதியமைச்சரும் நிதி திரட்ட செய்துவரும் நடவடிக்கைகள்.. இதே பாணியை அச்சு பிசுங்காமல் காப்பி அடித்துள்ளார் நிர்மலா சீதாராமன் அவர்கள். இதில் இருந்து நமக்கு தெரிவது அவரிடமும், அவரின் நிதி அமைச்சகத்தின் அதிகாரிகளிடமும் Out of Box ஐடியாக்கள் எதுவும் இல்லை என்பதே..... ஒரு உதாரணம் சொல்கிறேன் : "5% customs duty on imported books, to promote the domestic publishing and printing industry" - பட்ஜெட் 2019 இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கு 5% வரி உயர்வு அறிவித்த நிர்மலா சீதாராமன், இந்த வரி உயர்...