Posts

Showing posts from December, 2016

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பக்கவிளைவு !

Image
பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பக்கவிளைவு ! சிறுமிகள் கடத்தல் தொழில் முற்றிலுமாக முடங்கியுள்ளது. இந்த தொழிலின் மதிப்பு ஆண்டுக்கு சுமார் 20,000 கோடி ரூபாய். சிறுமிகள் வயது 10 முதல் 12 வயது வரை இருந்தால் அவர்கள் விலை 5 லட்சம், வயது 13 முதல் 15 வரை இருந்தால் விலை 4 லட்சம். இதில் கடத்தல்காரர்களுக்கு ஒரு சிறுமிக்கு போக்குவரத்து, போலீஸ் மற்றும் அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் என சுமார் 20,000 வரை செலவு ஆகிறது. இன்று அவர்களிடம் செலவு செய்ய ரொக்க பணமில்லை - நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யாத்ரி. படிக்க : http://www.livemint.com/Politics/p9VrQTy6jY4Cs4H6CqpbZO/Note-ban-breaks-the-backbone-of-Rs20-trillion-trafficking-in.html Side Effect of Demonetization ! Girl Trafficking business worth 20000 crore a year is completely shut down due to demonetization. Girl aged 10-12 cost Rs. 5 Lakh in market whereas age group of 13 to 15 cost Rs 4 Lakh. For transporting, grooming & bribing local police & politicians, 20000 was spent for each girl child. Now the entire network is down because

பெர்லின் தாக்குதலும் விளைவும்

Image
அனைத்து ஐரோப்பிய நாடுகளும் தங்கள் எல்லைகளை ராணுவத்தை கொண்டும் முள் வேலிகளை கொண்டும் அடைத்த பொழுது ஜெர்மனி மட்டும் சிரிய அகதிகளை அரவணைத்தது. ஆனால் பெர்லின் நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த டிரக் தாக்குதல் ஜெர்மனியின் அகதிகள் பற்றிய  நிலைப்பாட்டை கடுமையாக மாற்றியமைக்கும் ! ஏற்கனவே ஜெர்மனியின் வலதுசாரிகளுக்கும் அகதிகளுக்கும் ஆங்காங்கே கைகலப்பு ஏற்பட்டதாக செய்திகள் வந்தன (படிக்க : https://www.washingtonpost.com/news/worldviews/wp/2016/09/15/tensions-escalate-after-violent-clashes-between-germans-and-refugees/?utm_term=.92c0b1b349c6 ) மக்களிடம் அகதிகள் பற்றிய வெறுப்புணர்வை தூண்டும் பிரச்சாரங்கள் இனி வரும் காலங்களில் அதிகமாக நடக்கும் ! டிரம்ப் போன்றவர்கள் தங்கள் இத்தனை நாள் கூறிவந்த வெறுப்பு பிரச்சாரங்கள் சரி என்று மார்தட்ட ஆரம்பித்து விடுவார்கள் ! இதன் போக்கு நல்லதாக இராது ! உள்நாட்டில் குழப்பம் ஏற்படுத்துவதன் மூலம் மக்களை பிளவு படுத்துவது ஐஎஸ்ஐஎஸ் குழுவின் திட்டமாக இருந்தால் அதில் அவர்கள் வெற்றி பெறுவதாகவே நான் கருதுகிறேன் ! ஆண்டவன் தான் அமைதிக்கு வழிசொல்லவேண்டும் ! மேலும

புத்தக விமர்சனம் - இனியவை இருபது (கலைஞர் திரு. கருணாநிதி)

Image
கலைஞர் திரு. கருணாநிதி அவர்களின் எழுத்துகளை படிக்க இன்றுதான் சந்தர்ப்பம் வாய்த்தது! புத்தகத்தின் பெயர் : இனியவை இருபது கலைஞர் அவர்கள் தான் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் பற்றி எழுதிய பயண குறிப்பு புத்தகம். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எதர்ச்சியாக கண்ணில்பட்டது இந்த புத்தகம். பயண குறிப்பாக மட்டுமல்லாமல் அவர் சென்று வந்த இடங்களின் வரலாற்றை சொன்னவிதம் அருமை ! உதாரணமாக இத்தாலி பயணத்தை பற்றி குறிப்பிடும் பொழுது ஜூலியஸ் சீசர் மற்றும் கிளியோபட்ரா காதல் மற்றும் ஆண்டனி - கிளியோபட்ரா காதல்  (ஆம் ஷேக்ஸ்பியர் நாடகத்தில் சீசர் கொல்லப்பட்டபின் பிரமாதமான உரை நிகழ்த்தி மக்களை ப்ரூட்டஸ் மற்றும் அவரது கூட்டாளிகளிக்கு எதிராக திருப்பிய அதே ஆண்டனி தான்) பற்றி விவரித்த விதங்கள் அருமை ! கண்டிப்பாக திரு. கலைஞர் அவர்களின் மற்ற எழுத்துக்களையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உருவாவதை தவிர்க்க முடியவில்லை ! அவர்தம் எழுத்துகளை படித்தவர்கள் உங்கள் மனம் கவர்ந்த புத்தக பெயர்களை சிபாரிசு செய்தால் உதவியாக இருக்கும் ! ஆவலுடன் ! விக்கி