Posts

Showing posts with the label பயண குறிப்புக்கள்

2016 சென்னை புத்தக கண்காட்சி

Image
சென்னை தீவு திடலில் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் 39 வது புத்தக கண்காட்சிக்கு சென்று வந்த அனுபவத்தை பகிர்கிறேன் ! மெரினா வழியாக ப்ராட்வே திசையில் செல்லும் எல்லா பேருந்துகளும் தீவு திடலில் நின்று செல்கின்றன ! சுமாரான கூட்டம் ! சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது பெரிய பிளஸ் ! 60 வருடங்களை கடந்தும் இன்னும் பொன்னியின் செல்வன் தான் பல புத்தக கடைகளின் முகப்பில் முதல் புத்தகமாக நம்மை வரவேற்கிறது ! விகடன், கிழக்கு பதிப்பாக புத்தகங்களை பல கடைகளில் பார்க்கமுடிந்தது. ஆங்கில புத்தக கடைகளில் சிவா முத்தொகுதி (Shiva Trilogy) புத்தகத்தை பரவலாக பார்க்கமுடிந்தது ! பொன்னியின் செல்வன், முகலாயர்கள் எழுச்சியும் வீழ்ச்சியும் , கோபிநாத், அப்துல் கலாம், ஜி. ராமகிருஷ்ணன், தமிழர் வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு , சுஜாதா புத்தகங்கள், யவன ராணி, சென்னையின் கதை  இன்னும் விரல் விட்டு எண்ணக்கூடிய புத்தகங்கள் தோரயமாக 90 சதவீத கடைகளில் நீங்கள் பார்த்து சலித்து போக வாய்ப்புண்டு ! பல கடைகள் வெளியே இருந்து பார்த்தாலே இந்த புத்தகங்கள் தான் பர...