Posts

Showing posts with the label காதல்

அவளும் ! நானும் ! நீங்களும் !

Image
ஆண்டு 2011 வீட்ல பொண்டாட்டி தொல்லை போல அதான் வீட்டுக்கு போக மனசில்லாம வண்டிய நிப்பாட்டிவச்சுருக்கான் என்றார் எதிரில் இருந்தவர், பாவம் அவருக்கு தெரியாது கடவுள் ஏன் திருச்சி ரயில்நிலையத்தில் அரைமணிநேரமாக ரயிலை நிறுத்திவச்சுருக்கார்னு ! என் ஹெட்போனில் ஜி வி பிரகாஷ் கத்திக்கொண்டு இருந்தார் ! யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ !   அந்த ஆரஞ்சு கலர் சுடிதார் போட்ட தேவதை அவள் அப்பா அம்மாவுடன் வந்து எனக்கு எதிர்சீட்டில் அமர்ந்தாள். சீட் கிடைத்த சந்தோஷத்தில் ஆயாசமாக அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள். ஒரு நொடி ஒரு சிறு பார்வை என் பக்கம் வீசினாள். ஜி வி பிரகாஷின் தொடர்ந்து பாடினார். அடி வெள்ளாவி வச்சுதான் வெளுதான்களா ! உன்னை வெயிலுக்கு காட்டாம வளத்தாய்ங்களா ! நா தலகாலு புரியாம தர மேல நிக்காம தடு மாறி போனேனே நானே நானே ! ஆடுகளம் பாட்டுக்கும், அவளின் ஒரே நொடி காந்தப்பார்வைக்கும் கூட தொடர்பு உண்டு என மேற்கத்திய Choas தியரிக்கு கிழக்கில் நான் புதுவிளக்கம் கொடுத்துக்கொண்டேன் ! அந்த நொடியே அவள் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அவளை அடிக்கடி பார்த்துக்கொண்டே...

கல்யாணமாம் கல்யாணம் - சிறுகதை

Image
தட புடலாக நடந்தது திருமண ஏற்பாடுகள். மைக் செட்டுகளும் தோரணங்களும் மண்டபத்தை அலங்கரித்தன. மாடர்ன் பிளக்ஸ் போர்டுகளில்  வருங்கால மாப்பிள்ளைகளின் முகங்கள் போட்டோஷாப் மென்பொரு ளின் கருணையில் ஜொலித்தன . திருமணம், அதுவும்  சாதி மத பேதங்களில் மூழ்கிப்போன தமிழகத்தில் இருவீட்டு பெற்றோரும் ஏற்றுக்கொண்ட கலப்பு திருமணம். போனவாரம் வரை இந்த திருமணம் நடக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. கூச்சல்கள் நிறைந்த இந்திய பாராளமன்றம் போல இருவர் வீட்டிலும் எதிர்ப்புகளுக்கும்  கூச்சல்களுக்கு பஞ்சமில்லை. ஒருவழியாக இருவீட்டாரும் சம்மதித்து திருமண ஏற்பாடுகள் ஜாம் ஜாம் என்று அரங்கேறின. நாளை காலை திருமணம் , இன்று இரவு மாப்பிள்ளை பெண் ஊர்வலம் என திட்டமிடப்பட்டு ஊர்வலத்துக்கான நேரம் குறிக்கப்பட்டது. நான் தயாராக இருந்தேன். அலங்கரிக்க ப் பட்ட ஊர்வல வண்டியில் ஊர்வலம் ஏற, ஆராத்தி எடுத்து முடித்ததும் நல்ல நேரம் கார்ல ஏறுங்க என்று யாரோ சொல்ல, அலங்கரிக்க பட்ட வண்டியில் ஏறி இருவரும் அமர்ந்தோம் ..! எனக்கு முன்னால் பேண்டு வாத்தியங்கள் முழங்கின. சினிமா நடிகரை பார்ப்பது போல் போவோர் வருவோர் ஊர்வல வண...

ஒரு Doubt - என் சிறுகதை

Image
மூச்சுவாங்கித்தான் போனேன்,  வேகம் வேகம் இன்னும் சில மணித்துளிகளே ! நான் தங்கம் வாங்க ஒலிம்பிக்கில் ஓடவில்லை, கல்லூரிக்கு செல்ல அரசு பேருந்தின் பின்னால் ஓடினேன். கோவில்வெண்ணி செல்லும் பேருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகரதொடங்கிய பொழுது எப்படியோ ஏறிவிட்டேன் . கூட்டம் குறைவுதான் உட்கார இடமும் கிடைத்தது. பேருந்து திருவாரூர் நகர் எல்லையை  தாண்டி சென்று கொண்டிருந்தது, அரசு பேருந்துக்கே உரித்தான மித வேகத்தில். எனக்கு பின் சீட்டில் இருவர் தங்கள் குடும்ப கதையை ஊர் அறியும் வண்ணம் உரக்க பேசிவர எனக்கும் என் வாழ்கை குறித்த எண்ண ஓட்டம் மனதில் எழ தொடங்கியது. பேருந்தின் ஜன்னலை திறந்தேன் தென்றல் காற்று உள்ளே வர அப்பொழுது யாருடைய செல்போனோ ஒலித்தது " செந்தாளம் பூவில் வந்தாடும் தென்றல் ..." இசைஞாநியின் கீதம். எனக்கு benz கார் மீது ஆர்வம் உண்டு. படித்து முடித்து சம்பாதிக்கும் காலத்தில் கண்டிப்பாக வாங்கவேண்டும் என்று முடிவெடுத்திருந்தேன். நான் நன்றாகவே படித்தேன். கல்லூரி வாழ்கை  நண்பர் பட்டாளத்துடன் மிக இனிமையாக சென்றது. படித்து முடித்ததும் சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் ப...