Posts

Showing posts from June, 2019

ஐரோப்பாவில் அனல் காற்று

ஐரோப்பா முழுவதும் அனல் காற்று வீசுகிறது. பாரீஸ் நகரில் அதிகபட்சமாக வெப்பம் 45.9 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது. அனல் காற்று காரணமாக 4000 பள்ளிகளை மூடியுள்ளது பிரான்ஸ் அரசு ! ஏற்கனவே 2003 ஆம் ஆண்டு அடித்த அனல் காற்றில் பிரான்சிஸ் மட்டும் 15,000 பேர் பலியாகினர் . இந்த ஆண்டு பலி எண்ணிக்கையை குறைக்க பிரான்ஸ் அரசு தீவிரமாக செயல்பட்டுவருகிறது.. இதே போல் அனல் காற்று தான் ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் வீசி வருகிறது... - தினமலர் செய்தி எல்லாமே இந்தியாவில் தான் தவறாக நடக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் சந்தோஷ கடலில் குதிப்பதாக சிலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த செய்தி சமர்ப்பணம்..

ஐநாவில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா !!

செய்தி: வரலாற்றில் பெரிய திருப்பமாக பாலஸ்தீனத்துக்கு எதிராக இஸ்ரேல் முன்மொழிந்த ஐநா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது... விளக்கம்: ஹமாஸ் இயக்கத்தின் ஆதரவு  கொண்ட ஷஹீத் (Shahed) என்கிற அமைப்பு ஐநாவில் பார்வையாளராக செயல்படுவதற்கு எதிராக இஸ்ரேல் ஐநாவில் தீர்மானம் கொண்டுவந்தது. இந்த தீர்மானம் 28-14 என்கிற ஆதரவு-எதிர்ப்பு ஓட்டுக்களுடன் நிறைவேறியது. இதில் கவனிக்கதக்க செய்தி இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்ததே இந்தியாவிற்கு உலக அரங்கில் உதவி தேவைப்பட்டால் முதலில் ஓடிவரும் நாடுகள் என்றால் பிரான்சும், இஸ்ரேலும் தான் கார்கில் போரில் முக்கிய பங்காற்றிய லேசர் குண்டுகள் துவங்கி,  விவசாயத்தில் சொட்டு நீர் பாசனம் என பலதுறைகளில் இஸ்ரேல் இந்தியாவிற்கு உதவி செய்கிறது. ஆனால் நேரு காலம் துவங்கி பல பத்தாண்டுகளாக இஸ்ரேலுக்கு எதிராகவே இந்தியா ஐநாவில் செயல்பட்டு வந்திருக்கிறது. இதற்கு காரணம் மிக எளிதானது உலக அரங்கில் இஸ்ரேலுக்கு எதிரான மனநிலை முஸ்லிம் நாடுகள்/மக்களிடம் அதிகம் உள்ளது. அதற்கு பல வரலாற்று காரணங்கள் உண்டு எனவே இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா எடுக்கும் எந்த நடவடிக்கையும் இந்தி

நிறுவனங்கள் Form 16 வழங்க கடைசி தேதி நீட்டிப்பு

செய்தி : நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு Form 16 வழங்க கடைசி தேதியை 10 ஜூலை வரை நீடித்து வருமான வரித்துறை உத்தரவு... விளக்கம் : பொதுவாக நிறுவனங்கள் Form 16 படிவத்தை ஜூன் 15 ஆம் தேதிக்குள் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது விதி. அதன் பின் ஜூலை 31 ஆம் தேதிக்குள் ஊழியர் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். இந்தமுறை Form 16 படிவத்தின் வடிவத்தை வருமான வரித்துறை சமீபத்தில் மாற்றியமைத்தது. எனவே புதிய வடிவத்தில் Form 16 தயாரித்து வழங்க நிறுவனங்களுக்கு 25 நாட்கள் (ஜூன் 15ல் இருந்து ஜூலை 10க்கு) காலக்கெடு நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.. இந்த அறிவிப்பால் நமக்கு என்ன பிரச்சனை ? பொதுவாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31. ஜூன் 15 க்குள் Form 16 வழங்கப்பட்டுவிடும் என்பதால் நமக்கு வருமான வரி தாக்கல் செய்ய 45 நாள் அவகாசம் இருக்கும். இந்த முறை ஜூலை 10 வரை Form 16 வழங்க காலக்கேடு நீடிக்கப்பட்டுள்ளதால் நமக்கு வருமான வரி தாக்கல் செய்ய வெறும் 20 நாள் காலக்கெடுவே மிச்சமிருக்கும். எனவே ஆடிட்டர்கள்/மற்றும் நேரடியாக வரி செலுத்துபவர்கள் பாடு கஷ்டம். எனினும் வருமான வரித்துறை கணக்கு தாக்