Posts

Showing posts with the label மூன்றாவது கோணம்

ஸ்டாலினுக்கு பொன்னான வாய்ப்பு !

Image
தமிழகம் சந்தித்த வித்தியாசமான தேர்தல் இது ! அ.தி.மு.க விற்கு இரண்டாவது முறை ஆட்சி செய்ய வாய்ப்பு கொடுத்த அதேநேரம் தி.மு.க விற்கு 90 உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தமிழகமக்கள் கொடுத்துள்ளார்கள்.    குறிப்பாக ஜெயலலிதா போல் தனித்து இயங்க விரும்பும் தி. மு.க பொருளாளர் ஸ்டாலினுக்கு இது அறிய வாய்ப்பு என்றுதான் சொல்லவேண்டும். சென்னை மேயராக செயல்பட்டதை தாண்டி ஸ்டாலின் நிர்வாக திறமையை வெளிப்படுத்த பெரிதாக வாய்ப்புகள் தரப்படவில்லை. இந்த தேர்தலிலாவது ஸ்டாலின் முதலமைச்சராக முன்னிறுத்தப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் எனக்கு பின் ஸ்டாலின் என ஒரே போடாக போட்டார் 93 வயதான கருணாநிதி. ஆனால் கருணாநிதியின் பேராசையில் மக்கள் மண்ணை தூவி விட்டனர். தி.மு.கவின் தோல்வியிலும் ஸ்டாலினுக்கு சாதகமான அம்சம் ஒன்று நடந்துள்ளது எனில் அது அவர்கள் பெற்ற 90 உறுப்பினர் எண்ணிகையை தான் சொல்லவேண்டும். கருணாநிதி வரும் 5 வருடங்களில் கையெழுத்து போடுவதை தவிர வேறு எதற்கும் சட்டசபை இருக்கும் வடக்கு பக்கம்  தலைவைத்து கூட படுக்கமாட்டார். எனவே ச...

இதில் யார் பலவீனமானவர் ?

மாநிலம் முழுவதும் நமக்கு நாமேன்னு சுத்தியாச்சு ! 18 கோடி செலவு செஞ்சு எல்லா பத்திரிக்கையிலும் முதல் பக்கம் விளம்பரம் கொடுத்தாச்சு ! பழைய நண்பர் காங்கிரஸ் உடன் கூட்டணி மீண்டும் வச்சாச்சு ! இதில் தே.மு.தி.க வும் கூட்டணிக்கு வந்தால் மட்டுமே ஜெயலலிதாவை வீழ்த்தி  ஆட்சியை பிடிக்க முடியும் என்று விழிமேல் விழி வைத்து காத்திருந்து பல்பு வாங்கிய தி. மு. க ! கடந்த கால தவறுகள் மீண்டும் செய்யாமல் சொந்த பலத்தில் தனித்து தேர்தலில்  போட்டி - விஜயகாந்த், பா.ம.க , பா.ஜ.க  கட்சிகள் ! இதில் யார் பலவீனமானவர் ? 

என் Support மல்லையாவுக்கு ! உங்களோடது ?

Image
அரசு வங்கிகளில் 9000 கோடி கடன் வாங்கிய விஜய் மல்லையா வெளிநாட்டிற்கு தப்பி ஓட்டம் ! டிராக்டர் வாங்க 3.5 இலட்சம் கடன் பெற்று அதில் கடைசி இரண்டு தவணை செலுத்தாத விவசாயியை போலீஸ் துணையுடன் அடித்து இழுத்து சென்றது தனியார் நிறுவனம் ! இதில் கூர்ந்து கவனிக்க வேண்டியது,   விஜய் மல்லையாவிற்கு எந்த தனியார் நிறுவனமும் கடன் கொடுக்கவில்லை காரணம் விஜய் மல்லையாவின் கிரெடிட் மதிப்பு அவர்களுக்கு தெரியும் ! விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் கடன்கொடுக்க இந்த விளங்காத அரசு வங்கிகள் தயார் இல்லை ! சரி இதெல்லாம் நமக்கு எதுக்கு ரெண்டு மாசத்துல IPL வருது ! சிவப்பு ஜெர்சி போட்டுட்டு சத்தமா கத்துறோம் RCB ! RCB ! நான் மல்லையா அண்ணன் டீம Support பன்றேன் ! நீங்க ?

கோஷம் ஆரம்பம் !

கடந்த ஆண்டு பீகார் மாநில தேர்தலுக்கு முன்னால் மிகச்சரியாக எழுப்பப்பட்ட நாட்டில் சகிப்புதன்மை குறைந்து விட்டது என்ற மீடியாக்களின் கோஷம் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பல எழுத்தாளார்கள் தாங்கள் பெற்ற விருதுகளை திருப்பி வழங்கி சகிப்புத்தன்மையின்மை கோஷத்துக்கு உரமூட்டினர். பீகார் தேர்தலுக்கு பிறகு இந்தியா மீண்டும் தான் இழந்த சகிப்பு தன்மையை மீட்டுவிட்டதாக மீடியாக்கள் முடிவு செய்துவிட்டனர் போலும், அதன் பின் எந்த மீடியாவும் அதைப்பற்றி பேசவில்லை, எழுத்தாளர்களின் விருதுகளும் பத்திரமாக அவரவர் வீடுகளில் உறங்குகின்றன. இந்த ஆண்டு அஸ்ஸாம், தமிழகம், கேரளா என பல மாநிலங்கள் தேர்தலை சந்திக்கின்றன. அஸ்ஸாம் தேர்தலுக்கு பிரச்சாரமும் தொடங்கிவிட்ட நிலையில் இப்பொழுது ஹைதராபாத் பல்கலைகழக மாணவர் தற்கொலைக்கு தலித் சாயம் பூசி அடுத்த பிரச்சனையை எதிர்கட்சிகளும் மீடியாக்களும் தொடங்கிவிட்டன. நன்றாக கவனித்து பாருங்கள், எல்லா செய்தி ஊடகமும் இறந்த மாணவரை தலித் அடையாளமாக மாற்ற மிகவும் முனைந்துள்ளதும், ஹைதராபாத் பல்கலைகழகம் அமைந்துள்ள தெலுங்கானா மாநில அரசை பற்றி கண்டுக...

மழைதான் 2016 தேர்தலின் துருப்புசீட்டு

Image
ஜெயலலிதா ஆட்சியில் எப்பொழுதுமே அவரது கடைசி 6 மாதங்கள் அவருக்கு சவாலாக அமைந்துவிடும். இந்த முறை எதிர் கட்சிகள் சிதறிக்கிடக்க, தாங்கள் செய்த நல திட்டங்கள் மற்றும் இலவசங்கள் எப்படியும் கைகொடுக்கும் என்ற துணிச்சலில் 234ம் நமதே என கோஷமிடுகிறது அதிமுக. ஆனால் ஜெயலலிதாவின் உண்மையான சவால் இந்த முறை எதிர் கட்சிகள் அல்ல வடகிழக்கு பருவமழை தான் ! நான்கரை வருடம் எதிர்கட்சிகளை வளரவிடாமல் அரசியல் செய்து அதில் வெற்றியும் பெற்ற ஜெயலலிதா வருண பகவானை எப்படி எதிர்கொள்ள போகிறார் என்பதே அவரது 2016 வெற்றியை தீர்மானிக்கப்போகிறது. ! குறிப்பாக திமுகவின் கோட்டை என்று சொல்லப்படும் சென்னையை 2011 ல்  அதிமுக வசமாக்கினார் ஜெயலலிதா. ஆனால் இன்று மூழ்கி கிடக்கும் சென்னையை கரைசேர்க்காவிட்டால்  2016ல் அதிமுக மூழ்குவதை அவரால் வேடிக்கை மட்டும் தான் பார்க்கமுடியும்.  

2015 திரும்பி பார்க்கிறோம் !

2015 ல் இதுவரை நடந்த நிகழ்வுகள் அதற்கு இந்திய மக்கள் கொடுத்த ரியாக்சன்கள் (Reactions) ஆகியவற்றின் தொகுப்பு 2015 திரும்பி பார்க்கிறோம் தோனி ஓய்வு   வருந்தினோம், மறந்தோம் ஜனவரி 26 ஒபாமா வருகை வரவேற்றோம், மறந்தோம் அக்னி ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை பெருமைபட்டோம் மறந்தோம் டெல்லியில் அரவிந்த் கெஜர்வால் வெற்றி ஆச்சர்யப்பட்டோம் , மறந்தோம் உலகமே திணறிய பொழுது , ஏமன் மண்ணில் இருந்து நமது சகோதரர்கள் வெற்றிகரமாக மீட்பு கர்வம் கொண்டோம் , மறந்தோம் உலக கோப்பை தோல்வி கோலி , அனுஷ்காவை திட்டி தீர்த்தோம் மறந்தோம் 20 தமிழகர்கள் ஆந்திரா வனப்பகுதியில் சுட்டுக்கொலை செய்தியை படிக்க மறந்தோம் IPL பார்த்தோம் நேபாள் பூகம்பம் கண்ணீர் விட்டோம் மறந்தோம் ஜெயலலிதா விடுதலை குமாரசாமிக்கு கும்பிடு போட்டோம் மறந்தோம் மியான்மார் எல்லையில் இந்திய இராணுவம் அதிரடி தாக்குதல் மீசையை முருக...

அப்துல் கலாமுக்கு என்ன வேலையோ ?

Image
தமிழக மக்களை குறிப்பாக இளைஞர்களை மீளா துயரத்தில் ஆழ்த்தியது அப்துல் கலாம் மறைவு ! அப்துல் கலாம் சொன்ன வழியில் நடந்து நாட்டைத்தான் உருப்புட செய்யப்போவதில்லை அட்லீஸ்ட் Whatsapp குரூப்களுக்கு அவரது படத்தையும் பெயரையும்வைப்போம் என நாங்கள் மனதை ஆறுதல் படுத்திக்கொண்டோம். இனி வருடாவருடம் ஜூலை கடைசியில் Facebook, Whatsapp குரூப்களில் தவறாமல் கலாம் புகைப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்துவோம்  அவ்வளவுதான் தமிழக இளைஞர்கள் சக்தி. புலி படமோ தல 56 வது படமோ வெளிவந்தால் அப்துல் கலாமுக்கு Facebook,Whatapp ல் என்ன வேலையோ ? #RIPAbdulKalamQuotes #RIPAbdulKalamDreams - விக்கி 

இந்திய செய்தி சேனல் பார்க்க போறிங்களா ? எச்சரிக்கை !

Image
யாகூப் மேமன் குற்றவாளி என பலமுறை தனது தீர்ப்பில் சுட்டிகாட்டிய உச்ச நீதிமன்றம் அவருக்கு எந்த கருணையும் காட்டாமல் தீர்ப்பை உறுதி செய்த பின்னரே யாகூப் மேமன் தூக்கு நிறைவற்றப்பட்டது ! இதை பற்றி செய்தி வெளியிட்ட தமிழ் ஹிந்து நாளிதழின் இணைய தளம், யாகூப் மேமன் தூக்கு நிறைவற்றப்பட்டது என்ற செய்திக்கு கீழேயே யாகூப் மேமன் நல்லவர் என்பது போன்றதொரு கட்டுரையையும் பிரசுரித்தது.. எனில் நீங்கள் நாட்டுமக்களுக்கு என்ன சொல்லவருகிறீர்கள் ? யாகூப் மேமன் என்ற ஒரு நல்லவன் உச்சநீதிமன்றத்தின் தவறான தீர்ப்பால் தூக்கில் இடப்பட்டார் என்றா ??  மீடியாவின் TRP பசி TRP வெறியாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியில் கையாளப்பட்ட ஹிந்து முஸ்லிம் பிரிவினை அரசியலை விட மோசமான பிரிவினை அரசியலை இப்பொழுது தங்கள் பிழைப்புக்காக மீடியாக்கள் கையாள்கிறார்கள் . இந்திய மக்கள் மதங்களை தாண்டி என்றுமே நல்லவர்களை கொண்டாடவே செய்கிறார்கள். அதற்கு திரு. அப்துல் கலாம் ஐயா ஒரு சிறந்த உதாரணம். மீடியா விளையாடும் ஹிந்து முஸ்லிம் விளையாட்டில் நாம் விழுந்து விடக்கூடாது. மீடியாவின் செய்திகளை எச...

சென்னை MTCக்கு ஆண்கள் சார்பாக ஒரு கோரிக்கை

Image
சென்னைக்கு வந்த பொழுது எனக்கு இரண்டு விஷயங்கள் ஆச்சர்யத்தை கொடுத்தது. முதலாவது பேருந்தில் இடது புறம் இருக்கை முழுவதும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது, இரண்டாவது பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில்  அமரும் ஆண்களை " எழுந்திரிங்க இது லேடீஸ் சீட் " என்று தங்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமையை விட்டுக்கொடுக்காமல் கேட்டுப்பெறுவது (நம்ம ஊர்ல பொண்ணுங்க தைரியமா இது லேடீஸ் சீட் எழுந்திரிங்க என்று குரல் கொடுத்து நான் பார்த்தது இல்லை). ட்ரைனிங் பீரியட் பொழுது ஆபீஸ் நடந்து போகும் தொலைவில் இருந்ததால் பேருந்தில் பயணம் என்பது ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான். சமீப மாதங்களில் பேருந்தில் ஆபீஸ் சொல்லவேண்டிய  சூழல்.ஆபீஸுக்கு பேருந்தில்  பயணிக்கும் பொழுது மற்றுமொரு ஆச்சர்யமான நிகழ்வு நடந்தது. இடது பக்கம் பெண்கள் இருக்கை பலவும் காலியாக இருக்க பெண்கள் வலது பக்கம் உள்ள இருக்கைகளை ஆக்கிரமித்து  இருந்தார்கள். ஆண்கள் பலர் நின்று கொண்டே பயணம் செய்தார்கள். அடுத்த அடுத்த பேருந்து நிறுத்தங்களில் காலியாக இருந்த பெண்கள் இருக்கைகளும் நிரம்பிவிட்டன. கடைசி வரை ஆண்கள் நின...

இந்திய கிரிக்கெட் அணி தேசிய அணியா ?

Image
சரிதா தேவி , இந்திய மகளிர் குத்து சண்டை போட்டியில் தங்கம் வெல்லும் வாய்ப்பு இருந்தும் நடுவரின் தவறால் அரையிறுதியில்  வெளியேற்றப்பட்டு வெண்கலம் வென்றார். பதக்க விழாவில் அவர் கதறி அழுது பதக்கத்தை வாங்கமறுத்தது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இந்திய போன்ற ஒரு நாட்டில் பிறந்து பல கட்ட ஊழல்கள், சிபாரிசுகள், அமைச்சர்கள், அதிகாரிகளின் தலையீட்டை எல்லாம் போராடி வென்று ஆசியா கோப்பை போன்ற ஒரு போட்டிக்கு செல்வதே பெரிய உலக சாதனையாகும். அப்படி போராடி கலந்து கொண்ட போட்டியில்  நடுவரின் அநீதியால் பதக்கத்தை பறிகொடுத்து, தங்கத்துக்கு பதிலாக வெண்கல பதக்கம் தரப்பட்ட பொழுது சரிதா தேவியின் மனம் எப்படி துடித்திருக்கும் என்பதை நினைப்பதற்கே கடினமாக உள்ளது. பதக்கங்களின் மதிப்பை நமக்கு உணர்த்திய நிகழ்வு அது. இங்கே மற்றொரு விளையாட்டு, இந்தியராகிய நாம் உயிராக கருதும் கிரிக்கெட். ஆசியா போட்டிகளிள் 2010 முதல் கிரிக்கெட் சேர்த்து கொள்ளப்பட்டது. இதுவரை இரண்டு ஆசிய போட்டிகளில் கிரிக்கெட் விளையாடப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அணி இருமுறையும் தங்கள் நாட்டின் சார்பாக எந்த வீரரையும...

மூன்றாவது கோணம் - யேசுதாஸின் குரல்

Image
காலையில் செய்தித்தாள் வாங்கலாம் என்று கடைக்கு சென்ற பொழுது கடைக்கு வெளியே தொங்க விடப்பட்டு காற்றில் ஆடிக்கொண்டிருந்த அனைத்து செய்திதாள்களின் தலையங்கத்திலும் தவறாமல் இருந்த ஒரு செய்தி என்னை ஈர்த்தது. "பெண்களுக்கு எதிரான கருத்து  யேசுதாஸ் பேச்சால் சர்ச்சை" நானும் ஆர்வமாக செய்தித்தாளை வாங்கி அவரது பேச்சு பற்றிய கட்டுரையை படித்தேன். அவரது முழு பேச்சும் கீழே தரப்பட்டுள்ளது. "பெண்கள் ஆண்களைப் போல் இருக்க முயற்சிக்கக் கூடாது. பெண்களின் அழகு அவர்கள் எளிமையில் இருக்கிறது. ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து மற்றவருக்கு பெண்கள் இடையூறு ஏற்படுத்தக் கூடாது. எதை மறைக்க வேண்டுமோ அதை மறைப்பது அவசியம்.  பெண்கள், தங்கள் உடையலங்காரத்தால் ஆண்களை தேவையில்லாத செய்கைகளில் ஈடுபடத் தூண்டக் கூடாது. ஆண்களை ஈர்க்கும் வகையில் உடைகளை அணியக் கூடாது.  ஜீன்ஸ் அணியும் பெண்ணைப் பார்க்கும் ஓர் ஆண் ஆடைக்குள் ஒளிந்திருக்கும் பெண்ணின் அங்கங்களையும் பார்க்கத் தூண்டப்படுகிறான். ஜீன்ஸ் - இந்திய கலாச்சாரத்திற்கு எதிரான உடை"  இதை படித்த பொழுது எனக்கு ஏற்பட்ட உணர்வு இது அவரது சொந்த கர...

பணம் தின்னி கழுகுகள்

Image
தமிழக தலைநகரத்தின் விடியல் வெடி சத்தத்துடன் துவங்கியது . காலை 7.20 மணிக்கு பெங்களூரில் இருந்து சென்னை வழியாக கவுஹாத்தி செல்லும் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் நின்று கொண்டு இருந்த பொழுது இரண்டு வெடிகுண்டுகள் வெடித்ததை செய்தி சேனல் வழியாக நாம் பார்த்தோம் . இந்த செய்தியை சேனல்கள் காட்டிய விதத்திலேயே அவர்களின் வியாபார உத்திகளையும் கீழ்த்தரமான குணத்தையும் உணர முடிந்தது . சுவாதி என்ற பெண்  ஒருவர் இறந்ததாக மட்டுமே உறுதி  செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு செய்தி சேனல் முதலில் 50 பேர் பலி எனவும் பின்னர் 15 பேர் இறந்ததாக தகவல் வந்துள்ளது எனவும் சக பயணிகளையும் சாக பயணிகளின் குடும்பத்தாரையும் பதைபதைக்க வைத்து அரசியல் லாபம் தேடுகிறது . சாகாத பலரை சாகடித்தது அரசியில் லாபம் தேடுவது தான் சமூக சிந்தனையா ? மற்றொரு தனியார் டிவி ஒருபடி மேலே சென்று சென்னை சென்ட்ரல் வெடிகுண்டு விபத்து Exclusive உங்கள் ***** டிவியில் மட்டும் என்று எதோ சினிமா பட விளம்பரம் போல குண்டுவெடிப்பின் கோரத்தை பணமாக்கி கொண்டு'இருக்கிறது . ஒருவேளை வெடிகுண்டு வெடித்தால் தீவிரவாதிகளை விட...

மூன்றாவது கோணம் - ஸ்டாம்ப் பேட் சொல்லும் உண்மை

Image
நான்கு வருடம் கழித்து பள்ளி செல்லும் வாய்ப்பு . சுதந்திர இந்தியாவின் ஜனநாயக திருவிழாவில் என்னுடைய பங்களிப்பை செய்ய திருவாரூர் அரசு தொடக்க பள்ளிக்கு சென்றிருந்தேன். நேர்முகத் தேர்விற்கு செல்வது போல் சொல்லமுடியாத பதட்டம் என்னை தொற்றிகொண்டது. இத்தனைக்கும் திருவாரூர் வாக்குசாவடி பதட்டமான வாக்குசாவடி பட்டியலில் கூட இல்லை ஆனால் எனக்கு ஏனோ பதட்டத்தை தவிர்க்க முடியவில்லை. கூட்டம் கொஞ்சம் இருந்தது . எனது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் ஸ்லிப் இரண்டையும் நீட்டினேன். எனது பெயரை சரி பார்த்த பின்னர் கையெழுத்திட சொன்னார்கள். கையெழுத்து போடும் பொழுதுதான் கவனித்தேன் பக்கத்தில் இருந்த ஸ்டாம்ப் பேடை . கையெழுத்து போடா தெரியாதவர்கள் கைநாட்டு வைப்பதற்கு  . சுதந்திரம் கிடைத்து 67 வருடம் முடிந்த பின்னும் எல்லா இந்தியர்களுக்கும்  கல்வியை நம்மால் வழங்க முடியவில்லை. வளர்ச்சி எல்லா தரப்பு மக்களையும் சென்றடையவில்லை என்பதன் சாட்சியாக ஸ்டாம்ப் பேட்  தெரிந்தது. -  விக்கி 

மூன்றாவது கோணம் - ஏர்டெல் சூப்பர் சிங்கர்

Image
இந்திய மக்களை ஒரு வார்த்தையில் குறிப்பிடச் சொன்னால் என் பதில் "உணர்ச்சிவயப்பட்டவர்கள்".  ஆம் உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் அதீத முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு கலாச்சாரம் நம்முடையது. இதை யார் புரிந்து கொண்டார்களோ இல்லையோ அதை நன்கு புரிந்தவர்கள் மீடியாவும், அரசியல்வாதிகளும் தான் . இதற்கு பல உதாரணங்களை காட்டமுடியும் இன்று தமிழகத்தில் அதிகம் பார்க்கப்படும் விஜய் டிவியின்  " ஏர்டெல் சூப்பர் சிங்கர் " நிகழ்ச்சி . பலரின் வாழ்கையை மாற்றிய நிகழ்வு என்ற வகையில் மிக பெரிய வெற்றிபெற்ற நிகழ்ச்சி. ஆனால் அதைவிட அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணம் அதிலே கட்டப்படும் உணர்சிகரமான காட்சி அமைப்புகள். ஒரு பையன் தோல்வியால் அழுவது போலவும் அவன் குடும்பத்தினர் அவனை தேற்றுவது, நடுவர்கள் அவர்கள் பங்குக்கு கண்ணீர் என பார்க்கும் நம்மையும் உணர்ச்சி வயப்பட வைத்ததாலேயே அது இன்றும் வெற்றிகரமான நிகழ்ச்சியாக உள்ளது என்பது என் கருத்து. 

மூன்றாவது கோணம் - பூனை குறுக்கே போனால் சகுனத் தடை

Image
பூனை குறுக்கே போனால் சகுனத் தடை என்ற எண்ணம் இன்னும் பரவலாக இருப்பதாய் காணலாம். இது எப்படி ஏற்பட்டது என்று தேடியபொழுது கிடைத்த சுவையான தகவல் பூனை மனித நாகரிகத்தோடு தொடர்புடையது. பொதுவாகவே மனிதன் வசிப்பிடத்தில் தான் அவையும் வசிக்கும். அந்த காலத்தில் படை வீரர்கள் இன்னொரு நாட்டுக்கு படையெடுத்து செல்லும் பொழுது பூனை குறிக்கிட்டால் மனித நடமாட்டம் இருக்கும் இடத்துக்கு வந்துவிட்டதை உணர்வார்கள். எனவே அதன் பின் மிக ஜாக்கிரதயாகவே செல்வார்கள். எனவே வேகமாக முன்னேறும் படை பூனையை கண்டால் தயக்கத்துடனே செல்வதால் அதை சகுனத் தடையாக கருதினார்கள். அதுவே இன்றும் தொடர்கிறது.... !