Posts

Showing posts from 2016

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பக்கவிளைவு !

Image
பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பக்கவிளைவு !

சிறுமிகள் கடத்தல் தொழில் முற்றிலுமாக முடங்கியுள்ளது. இந்த தொழிலின் மதிப்பு ஆண்டுக்கு சுமார் 20,000 கோடி ரூபாய்.

சிறுமிகள் வயது 10 முதல் 12 வயது வரை இருந்தால் அவர்கள் விலை 5 லட்சம், வயது 13 முதல் 15 வரை இருந்தால் விலை 4 லட்சம்.

இதில் கடத்தல்காரர்களுக்கு ஒரு சிறுமிக்கு போக்குவரத்து, போலீஸ் மற்றும் அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் என சுமார் 20,000 வரை செலவு ஆகிறது. இன்று அவர்களிடம் செலவு செய்ய ரொக்க பணமில்லை - நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யாத்ரி.
படிக்க: http://www.livemint.com/Politics/p9VrQTy6jY4Cs4H6CqpbZO/Note-ban-breaks-the-backbone-of-Rs20-trillion-trafficking-in.html

Side Effect of Demonetization !

Girl Trafficking business worth 20000 crore a year is completely shut down due to demonetization.

Girl aged 10-12 cost Rs. 5 Lakh in market whereas age group of 13 to 15 cost Rs 4 Lakh. For transporting, grooming & bribing local police & politicians, 20000 was spent for each girl child. Now the entire network is down because of demonetization - Nob…

பெர்லின் தாக்குதலும் விளைவும்

Image
அனைத்து ஐரோப்பிய நாடுகளும் தங்கள் எல்லைகளை ராணுவத்தை கொண்டும் முள் வேலிகளை கொண்டும் அடைத்த பொழுது ஜெர்மனி மட்டும் சிரிய அகதிகளை அரவணைத்தது.

ஆனால் பெர்லின் நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த டிரக் தாக்குதல் ஜெர்மனியின் அகதிகள் பற்றிய  நிலைப்பாட்டை கடுமையாக மாற்றியமைக்கும் !

ஏற்கனவே ஜெர்மனியின் வலதுசாரிகளுக்கும் அகதிகளுக்கும் ஆங்காங்கே கைகலப்பு ஏற்பட்டதாக செய்திகள் வந்தன (படிக்க : https://www.washingtonpost.com/news/worldviews/wp/2016/09/15/tensions-escalate-after-violent-clashes-between-germans-and-refugees/?utm_term=.92c0b1b349c6)


மக்களிடம் அகதிகள் பற்றிய வெறுப்புணர்வை தூண்டும் பிரச்சாரங்கள் இனி வரும் காலங்களில் அதிகமாக நடக்கும் ! டிரம்ப் போன்றவர்கள் தங்கள் இத்தனை நாள் கூறிவந்த வெறுப்பு பிரச்சாரங்கள் சரி என்று மார்தட்ட ஆரம்பித்து விடுவார்கள் ! இதன் போக்கு நல்லதாக இராது !

உள்நாட்டில் குழப்பம் ஏற்படுத்துவதன் மூலம் மக்களை பிளவு படுத்துவது ஐஎஸ்ஐஎஸ் குழுவின் திட்டமாக இருந்தால் அதில் அவர்கள் வெற்றி பெறுவதாகவே நான் கருதுகிறேன் !

ஆண்டவன் தான் அமைதிக்கு வழிசொல்லவேண்டும் !

மேலும் படிக்க:

http:/…

புத்தக விமர்சனம் - இனியவை இருபது (கலைஞர் திரு. கருணாநிதி)

Image
கலைஞர் திரு. கருணாநிதி அவர்களின் எழுத்துகளை படிக்க இன்றுதான் சந்தர்ப்பம் வாய்த்தது!

புத்தகத்தின் பெயர் : இனியவை இருபது கலைஞர் அவர்கள் தான் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் பற்றி எழுதிய பயண குறிப்பு புத்தகம்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எதர்ச்சியாக கண்ணில்பட்டது இந்த புத்தகம். பயண குறிப்பாக மட்டுமல்லாமல் அவர் சென்று வந்த இடங்களின் வரலாற்றை சொன்னவிதம் அருமை !


உதாரணமாக இத்தாலி பயணத்தை பற்றி குறிப்பிடும் பொழுது ஜூலியஸ் சீசர் மற்றும் கிளியோபட்ரா காதல் மற்றும் ஆண்டனி - கிளியோபட்ரா காதல்  (ஆம் ஷேக்ஸ்பியர் நாடகத்தில் சீசர் கொல்லப்பட்டபின் பிரமாதமான உரை நிகழ்த்தி மக்களை ப்ரூட்டஸ் மற்றும் அவரது கூட்டாளிகளிக்கு எதிராக திருப்பிய அதே ஆண்டனி தான்) பற்றி விவரித்த விதங்கள் அருமை !

கண்டிப்பாக திரு. கலைஞர் அவர்களின் மற்ற எழுத்துக்களையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உருவாவதை தவிர்க்க முடியவில்லை !

அவர்தம் எழுத்துகளை படித்தவர்கள் உங்கள் மனம் கவர்ந்த புத்தக பெயர்களை சிபாரிசு செய்தால் உதவியாக இருக்கும் !

ஆவலுடன் !
விக்கி

Cashless Economy சாத்தியமா?

Image
இந்தியாவில் cashless economy ஊக்குவிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்ததும் (கவனிக்கவும் ஊக்குவிக்க மட்டுமே  நிர்பந்தபடுத்தப்பட போவதில்லை) இதெல்லாம் தேவையா சாத்தியமா என்று பலவாறான விமர்சனம் எழுப்பப்படுகிறது.

அவர்களுக்கு ஒரு குட்டி கதை

ராஜிவ் காந்தி 1986 ஆம் ஆண்டு IT புரட்சி பற்றி பேசிக்கொண்டிருந்தார், IT இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றும் என்றார். இங்கே விவசாயிகள் பிரச்சனை இத்தனை இருக்கும் பொழுது நம் பிரதமர் கம்ப்யூட்டர் கிம்ப்யூட்டர் என்று உளறிக்கொண்டு இருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தார்கள்!

இன்னும் சில கட்சிகள் கம்ப்யூட்டர் அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது கம்ப்யூட்டர் ஒரு ரோபோட் அது தொழிலார்களின் வேலைவாய்ப்பை பறித்து விடும் இந்தியா அவ்வளவு தான் என்று போராட்டமே நடத்தினார்கள்.

படிக்க ஆதாரம் : http://pazhayathu.blogspot.in/2010/04/anti-computer-protests-1980-by-commun.html

ஆனால் ராஜிவ் உறுதியாக இருந்தார் ! IT யை ஊக்குவித்தார் ! விளைவு இன்று IT துறை இந்திய பொருளாதாரத்தில் 8 % சதவீத பங்களிப்பை அளிக்கிறது. இந்தியாவில் 29 லட்சம் பேர் நேரடியாகவும் 90 லட்சம் பேர் மறைமுகவாகவும் I…

அமைதி தந்த பரிசு !

Image
காவேரி பிரச்சனை காரணமாக கர்நாடகத்தில் கலவரம் நடந்த பொழுது தமிழகத்தில் பெரிய அளவிலான வன்முறை ஏதும் நடைபெறவில்லை.

தமிழக வாழ்வுரிமை கட்சி போன்ற லெட்டர் பேடு கட்சிகள் சில இடங்களில் வன்முறையில் ஈடுபட்டு தமிழகத்தின் பெயரை கெடுத்தன. ஆனால் தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான தி மு க மற்றும் அ தி மு க இரண்டும் பொறுப்புள்ள கட்சிகளாக செயல்பட்டு தமிழகத்தில் பெரிய வன்முறை சம்பவங்கள் செயல்படாமல் பார்த்துக்கொண்டன.

அன்று அரசியல் வியாபாரிகள் ஏற்படுத்திய வன்முறை ஆட்டத்துக்கு தமிழகம் துணை போகாததன் விளைவு இன்று தமிழகத்துக்கு சாதகமாக மாறியுள்ளது.

இது பற்றி இன்று தமிழ் ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரையில் இருந்து சில மேற்கோள்கள் கீழே.

ஏற்கெனவே வேறு சில நெருக்கடிகளால் தேக்கமடைந்திருந்த பெங்களூரு ஐடி நிறுவனங்களுக்கு சமீபத்திய கலவரம் அவற்றின் வளர்ச்சிக்கு பெரும் சவாலாக இருக்கும். இதனால், பெரும் முதலீட்டில் இயங்கி வரும் ஐடி நிறுவனங்கள் சில பெங்களூருவை காலி செய்துவிட்டு, அமைதி தவழும் தமிழகத்திற்கு தங்களது நிறுவனத்தை மாற்றிவிடலாமா என்று யோசித்து வருகின்றன.கலவர நேரத்தில் கர்நாடகாவில் உற்பத்தி செய்த பொருட்களை …

தீபாவளி கசக்கிறது !

Image
இன்று தீபாவளி என்று சன் டிவி சிறப்பு நிகழ்ச்சி பார்த்தால்தான் தெரியும் போல ! ஊரு அவளோ அமைதியா இருக்கு !
விவசாயம் பொய்தது, மழையை காணும், பேண்ட் சட்டை எடுக்க குறைந்தது 1500 ரூபாய் வேண்டும், வெடி, இனிப்புகளின் விலை 200 ஐ கடந்து விட்டது.. எவர் வீட்டு போர் குழாயிலும் தண்ணீர் இல்லை... அரசாங்கம் 5000 செலவில் மழைநீர் சேமிப்பு தொட்டி கட்ட சொன்னபொழுது 4 செங்களை நட்டு வைத்து அரசாங்கத்தை ஏமாற்றிய நாம் இன்று 40000 முதல் 100000 வரை செலவு செய்து போர் குழாய் ஆழத்தை அதிகப்படுத்துகிறோம்.. வறட்சி அதன் கோரா முகத்தை காட்ட தொடங்கி விட்டது.. இதுதான் திருவாரூரின் இன்றைய நிலை...

குடிநீர் லாரிகளை இதுவரை பார்க்காத திருவாரூர் மக்கள் வெகு விரைவில் குடிநீர் லாரிக்கு பின்னால் ஓடப்போகிறார்கள்.. விழித்துக்கொண்டோர் பிழைத்து கொண்டார்.. திருவாரூர் மக்களே நாம் எப்போது விழிக்கப் போகிறோம்.. ? செலவோடு செலவாக மழைநீர் சேமிப்பு தொட்டி கட்டுவீர் ! வரும் டிசம்பர் மாத மழை உங்களை போர் குழாய் ஆழப் படுத்தும் செலவில் இருந்து காக்கட்டும்... பெற்றோரிடம் எதை எதையோ அடம் பிடித்து வாங்கும் நாம் மழை நீர் சேமிப்பு தொட்டி கட்ட சொல்லி கேட்போமே…

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)

Image
டேவிட் பிரவுன் ஆராய்ச்சி முடிவுகள் 
டேவிட் பிரவுன் Ganesh: Studies of an Asian God என்ற தனது புத்தகத்தில் மிக விரிவாக வாதாபி விநாயகர் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு  திருவாரூர் மற்றும் திருச்செங்காட்டங்குடி விநாயகர் சிலைகளின் படத்தை ஒப்பிட்டு ராபர்ட் பிரவுன் என்ற ஆராய்ச்சியாளரின் கருத்தையும் பதிவிட்டுள்ளார். 
புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள குறிப்புக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன 
The Vatapi Ganapathi is still in worship at the Ganapatheswara Temple, Thiruccengattangudi. That It is a seventh century Chalukyan image, the one brought back by Cirutondaa from Badami appears, however, unlikely. Judging by the photograph, the image fits best stylistically with 10th 11th century Chola representation of Ganesha...
The copy from Thiruvarur is even further stylistically from the supposed Chalukyan prototype though it is difficult to draw the precise conclusion with the photograph.
முழுவதும் படிக்க Ganesh: Studies of an Asian God - Google Books தளத்திலுருந்து பக்கம் எண் 143.

காஞ்சி பெரியவர் கருத்து…

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)

Image
வாதாபி கணபதியின் கதை : பல்லவர்களுக்கும் (காஞ்சியை தலைமையிடமாக கொண்ட தமிழ் மன்னர்கள்) சாளுக்கிய மன்னனா புலிகேசிக்கும் (கர்நாடக மன்னர்கள்) கி.பி 642ல் சாளுக்கிய தலைநகரான வாதாபியில் போர் நடைபெற்றது.பல்லவர்கள் படைக்கு பரஞ்ஜோதி என்ற சோழநாட்டு வீரர் தளபதியாக செயல்பட்டு போரை நடத்தினார். போரில் புலிகேசி கொல்லப்பட, பல்லவ படைகள் பெரு வெற்றியடைந்தன. போர் முடிவில் சாளுக்கிய தலைநகர் வாதாபி சூறையாடப்பட்டது.

பல்லவ தளபதி பரஞ்சோதி (பின்னர் சிறுத்தொண்டர் என அழைக்கப்பட்டார்) போர் வெற்றியின் நினைவாக வாதாபியில் இருந்து விநாயகர் சிலை ஒன்றை கொணர்ந்து தனது ஊரான திருச்செங்காட்டங்குடியில் பிரதிஷ்டை செய்ததாக கர்ணபரம்பரையாக சொல்லப்படுகிறது. (இந்த கதைக்கு வரலாற்று சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை)

இதே கதையை கொஞ்சம் மாற்றி பரஞ்சோதி தான் கொண்டுவந்த விநாயகர் சிலையை திருவாரூர் கோவிலில் பிரதிஷ்டை செய்ததாக சொல்லப்படுகிறது.

இதில் எது உண்மை ? 
பல்லவ சாளுக்கிய போரை மையப்படுத்தி எழுதப்பட்ட சிவகாமியின் சபதம் நூலில் எழுத்தாளர் கல்கி வாதாபி கணபதி திருச்சங்காட்டங்குடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவே குறிப்பிடுகிறார்.

ஆனால் ஆராய்ச்சி…

முரண்பாட்டின் மொத்த உருவமே நாம்தானோ ?

Image
திருடனோ தீவிரவாதியோ சுட்டு கொல்லப்பட்டால் ஓடிவரும் எந்த மனித உரிமை அமைப்பும், திருடன் அல்லது தீவிரவாதியால் போலீஸ்காரர்கள் மடியும் பொழுது வரமாட்டார்கள்.

பீப் சாங் போட்டால் பற்றிக்கொண்டு கொண்டு வரும் மாதர் சங்கம் எதுவும், பெண்களுக்கு ஆண்களை விட ஊதியம் குறைவாக தரப்படும்பொழுதோ, ஸ்வாதி போன்றவர்கள் வெட்டி கொல்லப்படும் பொழுதோ எங்கே போவார்கள் என்று தெரியாது.

கோவில்பட்டியில் 15 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் வரும் அதுவும் விடியற்காலை மூன்று மணிக்கு. ஆனால் அதே ஊரிலிருந்து 25 கி.மீ தொலைவில் பெப்சி மற்றும் கோலா நிறுவனம் தினமும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் எடுத்து குளிர்பானம் தயாரித்து விற்றால் சொரணை இல்லாமல் காசு கொடுத்து வாங்கி குடிக்கும் நாம்.முரண்பாட்டின் மொத்த உருவமே நாம்தானோ என எண்ண தோன்றுகிறது !

கண்முன்னே நடக்கும் இந்த நிகழ்வுகளை சேர்த்து பார்ப்பதில் தான் நமது கல்வி அறிவு மண்ணை கவ்வுகிறது

தவறு என்று தெரியும் ஆனால் நான் மாறினால் எல்லாம் மாறிவிடுமா என்று படித்த மேதாவிகள் தான் கேட்கிறார்கள். நாம் மேதாவிகள் அல்ல பன்னாட்டு நிறுவன ஆய்வகத்தின் எலிகள் !

இறுதியாக ஒரு வார்த்தை மாற்றம் தனி மனி…

கல்வி கடன்கள் தனியாருக்கு தாரைவார்ப்பு

Image
ஸ்டேட் பேங்கில் வாங்கப்பட்ட கல்வி கடனில் வசூல் செய்வது கடினம் என்று முடிவு செய்யப்பட்ட கடன்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்றுள்ளது ஸ்டேட் பேங்க் நிர்வாகம்.

தமிழகத்தில் 10 லட்சம் மாணவர்கள் வாங்கிய கடன் தொகை 17000 கோடி. இதில் 1875 கோடி கடன் மோசமான நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டு 381 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் நிறுவனத்திடம் விற்கப்பட்டுள்ளது.

இனி இந்த கடனை மாணவர்களிடம் இருந்து ரிலையன்ஸ் நிறுவனம் வசூல் செய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தனியார் நிறுவனங்கள் பொதுவாக கடனை வசூல் செய்ய எத்தனை தூரத்திற்கு செல்லும் என்பதற்கு  குண்டர்கள் வைத்து மிரட்டுவது முதல் போலீஸை ஏவி விவசாயியை தாக்கிய வரை பல உதாரணங்கள் உண்டு.

ஊரே என்ஜினீயரிங் படித்து இன்று அதில் பாதிப்பேருக்கு மேல் சரியான வேலைவாய்ப்பின்றி தவிக்கும் நிலையில் மாணவர்கள் எப்படி கடனை திருப்பி செலுத்துவார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

விஜய் மல்லையாவை பிடிக்க துப்பில்லாத இந்த அரசாங்கமும் அரசு வங்கிகளும் சாமானியர் பாக்கெட்டில் கைவைக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். நமது மோசமான கல்வித்திட்டத்தில் இருந்தும் சாமானியரை சுரண்டும் அரசுகளிடம்…

உமேஷ் சச்தேவுக்கு நமது வாழ்த்துக்கள் !

Image
டைம் இதழ் வெளியிட்ட ஆயிரம் ஆண்டுகளில் உலகத்தில் மாற்றத்தை நிகழ்த்தக் கூடிய 10 இளைஞர்கள் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்தியன் சென்னையை சேர்ந்த உமேஷ் சச்தேவ்.

இவர் தனது நண்பர் ரவி சாரோகியுடன் இணைந்து சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் யூனிபோர் சாப்ட்வேர் சிஸ்டம்ஸ் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

இவர் உருவாக்கியுள்ள தொழில்நுட்பம் ஒரு மொழியில் பேசப்படும் தகவலை 25 மொழிகளில் மொழிபெயர்கவும், 150 பேச்சு வழக்குகளில் கேட்கும் வசதியுடன் மாற்றித்தரும் தன்மை கொண்டது.இவரை பற்றிய செய்தி அனைத்து ஆங்கில நாளிதல்களிலும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வெளியிடப்பட தமிழ் ஊடக உலகமோ வழக்கம் போல் கலைஞர் இராமதாஸ் வெற்று அறிக்கைகளையும், கபாலி பட அப்டேட்களையும் ஒரு பக்க அளவுக்கு வெளியிட்டு தங்கள் தரத்தை நிரூபித்துள்ளன.

இன்று எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின், உமேஷ் சச்தேவ் பற்றி  முகநூலில் பதிவிட்ட பிறகே தமிழ் நாளிதழ்கள் உமேஷ் சச்தேவ் பற்றிய செய்திகளை வெளியிடத்தொடங்கியுள்ளன.

தமிழ் செய்தி தொலைகாட்சிகள் வெட்டி அரசியல் பேசும் சீமான், நாஞ்சில் சம்பத் போன்றவர்களின் பேட்டிகளை தவிர்த்து சுந்தர் பிச்சை, உமேஷ் சச்தேவ் போன்ற சாதன…

2016 சென்னை புத்தக கண்காட்சி

Image
சென்னை தீவு திடலில் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் 39 வது புத்தக கண்காட்சிக்கு சென்று வந்த அனுபவத்தை பகிர்கிறேன் !மெரினா வழியாக ப்ராட்வே திசையில் செல்லும் எல்லா பேருந்துகளும் தீவு திடலில் நின்று செல்கின்றன !

சுமாரான கூட்டம் !

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது பெரிய பிளஸ் !

60 வருடங்களை கடந்தும் இன்னும் பொன்னியின் செல்வன் தான் பல புத்தக கடைகளின் முகப்பில் முதல் புத்தகமாக நம்மை வரவேற்கிறது !

விகடன், கிழக்கு பதிப்பாக புத்தகங்களை பல கடைகளில் பார்க்கமுடிந்தது. ஆங்கில புத்தக கடைகளில் சிவா முத்தொகுதி (Shiva Trilogy) புத்தகத்தை பரவலாக பார்க்கமுடிந்தது !

பொன்னியின் செல்வன், முகலாயர்கள் எழுச்சியும் வீழ்ச்சியும், கோபிநாத், அப்துல் கலாம், ஜி. ராமகிருஷ்ணன், தமிழர் வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு, சுஜாதா புத்தகங்கள், யவன ராணி, சென்னையின் கதை இன்னும் விரல் விட்டு எண்ணக்கூடிய புத்தகங்கள் தோரயமாக 90 சதவீத கடைகளில் நீங்கள் பார்த்து சலித்து போக வாய்ப்புண்டு !

பல கடைகள் வெளியே இருந்து பார்த்தாலே இந்த புத்தகங்கள் தான் பரவலாக பார்வைக்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

கார…

கலைஞரின் காமெடி அறிக்கை

Image
ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் ஸ்டாலினை முன் வரிசையில் அமரவைக்கவில்லை

சொல்வது 93 வயதிலும் ஸ்டாலினுக்கு கட்சி தலைமை பதவியும் தராமல் முதல்வர் நாற்காலியும் தராமல் அவமதிக்கும் கலைஞர் !


குறிப்பு: தி.மு.க கட்சி ஸ்டாலினை எதிர்கட்சி தலைவராக கூட இன்னும் அறிவிக்கவில்லை. நாளை நடக்கும் கட்சி கூட்டத்தில் பேசி முடிவு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்கள். ஒருவேளை எதிர் கட்சி தலைவராகவும் கலைஞரே அமரலாம் யார் கண்டது !

ஸ்டாலினுக்கு பொன்னான வாய்ப்பு !

Image
தமிழகம் சந்தித்த வித்தியாசமான தேர்தல் இது !

அ.தி.மு.க விற்கு இரண்டாவது முறை ஆட்சி செய்ய வாய்ப்பு கொடுத்த அதேநேரம் தி.மு.க விற்கு 90 உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தமிழகமக்கள் கொடுத்துள்ளார்கள்.   

குறிப்பாக ஜெயலலிதா போல் தனித்து இயங்க விரும்பும் தி. மு.க பொருளாளர் ஸ்டாலினுக்கு இது அறிய வாய்ப்பு என்றுதான் சொல்லவேண்டும்.

சென்னை மேயராக செயல்பட்டதை தாண்டி ஸ்டாலின் நிர்வாக திறமையை வெளிப்படுத்த பெரிதாக வாய்ப்புகள் தரப்படவில்லை. இந்த தேர்தலிலாவது ஸ்டாலின் முதலமைச்சராக முன்னிறுத்தப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் எனக்கு பின் ஸ்டாலின் என ஒரே போடாக போட்டார் 93 வயதான கருணாநிதி.

ஆனால் கருணாநிதியின் பேராசையில் மக்கள் மண்ணை தூவி விட்டனர்.

தி.மு.கவின் தோல்வியிலும் ஸ்டாலினுக்கு சாதகமான அம்சம் ஒன்று நடந்துள்ளது எனில் அது அவர்கள் பெற்ற 90 உறுப்பினர் எண்ணிகையை தான் சொல்லவேண்டும்.


கருணாநிதி வரும் 5 வருடங்களில் கையெழுத்து போடுவதை தவிர வேறு எதற்கும் சட்டசபை இருக்கும் வடக்கு பக்கம்  தலைவைத்து கூட படுக்கமாட்டார். எனவே சட்டசபையில் தி.மு.க வின் முகமாக இருக்கப்போவது ஸ்டாலின் மட்டும்தான்.

சங்கதாரா புத்தக விமர்சனம்

Image
ஆதித்த கரிகாலன் கொலைக்கான காரணம் பற்றிய புத்தகம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்புடன் சங்கதாரா என்ற புத்தகத்தை வாங்கி படித்தேன்

ஆனால் ஏன் இந்த புத்தகத்தை படித்தோம் என்று ஆகிவிட்டது. புத்தகம் அத்தனை அபத்தமான கற்பனை.

பொன்னியின் செல்வன் கட்டிவித்த மாயா பிம்பத்தை உடைக்கிறேன் என்ற ஒரே முடிவில் பொன்னியின் செல்வனில் புகழப்பட்ட அனைத்து கதாப்பாத்திரங்களையும் கொச்சை படுத்தி எழுதியுள்ளார் ஆசிரியர் நரசிம்மா என்பதே என் மனதில் படும் எண்ணம்.


புத்தகத்தில் வரும் 1000 அபத்த கற்பனைகளில் ஒன்று உங்கள் கருத்துக்காக சொல்கிறேன். ஆதித்த கரிகாலனை கொன்றது குந்தவை. காரணம் அவரது மகன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக. இதில் கொடுமை என்னவெனில் குந்தவையின் மகன் தான் அருண்மொழி. குந்தவை வந்தியதேவருடன் முன் காலத்தில் கொண்ட தவறான உறவால் பிறந்தவன் தான் அருண்மொழி.

இதற்கு மேல் சங்கதாரா புத்தகத்தை படிக்கவேண்டுமா என்பதை உங்கள் கருத்துக்கு விட்டுவிடுகிறேன்....

படித்ததில் பிடித்தது - 2 (உங்க ஊர் பெயருக்கு என்ன அர்த்தம் ?)

Image
தமிழக ஊர் பெயர்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள்
குடி, புரம் , பேட்டை, பாளையம், நகர், ஊர், கோயில், குளம், பாக்கம், பாடி, பட்டி, துறை ஆகியன.
குடி என்பது ஒரே சமூக மக்கள் வாழும் இடமாகும். உதாரணம் மன்னார்குடி, ஆலங்குடி, காரைக்குடி புரம் - பெரிய கிராமம் அல்லது தலைநகரங்கள் என்பதை குறிக்கும். உதாரணம் காஞ்சிபுரம், இராமநாதபுரம்.பாளையம் - இது உள்ளூர் தலைவர்கள் வாழும் இடத்தை குறிக்கும் உதாரணம் இராஜபாளையம், குமாரபாளையம்.பேட்டை - தொழிற்கூடங்கள் அமைந்த பகுதி. உதாரணம் ராணிப்பேட்டை பட்டி - பாண்டிய நாட்டில் அமைந்துள்ள பல ஊர்களுக்கு இந்த பெயர் வழங்கப்பட்டுள்ளது உதாரணமாக ஆன்டிப்பட்டி..குப்பம் - கடற்கரை கிராமம்பட்டினம் - கடற்கரை நகரம் உதாரணம் நாகப்பட்டினம். பாக்கம் - குப்பத்திற்கு அருகில் அமைந்திருக்கும் இடம். உதாரணம் துறைப்பாக்கம்.  துறை - ஆற்றங்கரையில் அமைந்திற்கும் ஊர். உதாரணம் மயிலாடுதுறை.   
- மே 6, 2016 தி ஹிந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்ட "Glimpsing history through etymology" கட்டுரையிலிருந்து ....

citizen திரைப்பட கிளைமாக்ஸும் - இராஜராஜ சோழனும்

சிட்டிசன் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அஜித் வில்லன்களுக்கு வித்தியாசமான ஒரு தண்டனையை அறிவிப்பார்.

அதன்படி வில்லன், அவரது குடும்பத்தார்,அவர்தம் குடும்பத்துடன் திருமண உறவு செய்துகொண்டவர்கள் என அனைவரது குடியுரிமை மற்றும் சொத்துகளும் பறிக்கப்பட்டு சொந்தநாட்டிலேயே அகதிகளாக ஆக்கப்படுவர்.

புதுமையான தண்டனை என்று சொல்லப்பட்ட இந்த தண்டனை சுமார் 1000 வருடங்களுக்கு முன்னரே வழங்கியுள்ளார் இராஜராஜ சோழன் !

சோழ சரித்திரத்தில் அவிழ்க்க முடியாத ரகசியமான ஆதித்ய கரிகாலன் கொலை பற்றிய மர்மத்தை தனது சிற்றப்பா உத்தம சோழரின் ஆட்சிக்கு பின் பதவியேற்ற ராஜராஜ சோழர் கண்டுபிடிக்க முயல்கிறார்.

தனது இரண்டாவது ஆட்சியாண்டில் (கி. பி 986-987) பாண்டிய ஆபத்துதவிகளின் தலைவரான ரவிதாசன் மற்றும் அவரது சகோதரர்களே அதித்ய கரிகால சோழரின் கொலைக்கு காரணம் என்பதை கண்டுபிடித்த ராஜராஜர் அவர்களுக்கு வழங்கிய தண்டனை வித்தியாசமானது.

அதாவது ரவிதாசன் அவர்தம் சகோதர்கள் மட்டுமல்லாது அவரது குடும்பத்தார், உற்றார் உறவினர் (சிறு குழந்தைகள் உட்பட) என அனைவரின் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டதோடு  அவர்கள் சோழ நாட்டில் வாழ தகுதி அற்றவர்கள…

ஒபாமா கூட நடந்து போவாரு ! நம்ம தலைவர்கள் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்ட்டர்ல தான் போவாங்களாம்

Image
உலகின் அதி சக்தி வாய்ந்த அதிபரான ஒபாமா தனது பயணத்திற்கு VVIP ஹெலிகாப்ட்டர் வாங்கும்பொழுது அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்ட்டரில் ஒன்றுதான்வாங்கினார்.

காரணம் அதன் விலை ! ஒரு ஹெலிகாப்ட்டர் சுமார் 18.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

ஆனால் வளர்ந்து வரும் நாடான இந்தியா 2010 ஆம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் ஒரே ஆர்டரில் 12 ஹெலிகாப்ட்டர்கள் கேட்டது. காரணம் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் இந்திய இராணுவ அதிகாரிகளுக்கும், சோனியா மற்றும் அவரது காங்கிரஸ் அமைச்சர்களுக்கும் கொடுத்த லஞ்சப்பணம்.


இந்திய விமானப்படை தாக்குதல் ஹெலிகாப்ட்டர்கள் வாங்க பண பற்றாக்குறை என்று சொன்ன அதே காலகட்டத்தில் தான் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்ட்டர்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

இன்று காங்கிரஸ் கட்சிக்கு பேரிடியாக இறங்கியிருக்கும் ஹெலிகாப்ட்டர் ஊழல் வழக்கு எப்படியும் கொஞ்சநாளில் 2G ஊழல், சொத்து குவிப்பு வழக்கை போல் இழுத்தடிக்கப்பட்டு மறக்கடிக்கப்படும் என்பது மட்டும் உறுதி.

நாட்டு மக்கள் பாதுகாப்பை விட காசு முக்கியம் என்று எண்ணிய காங்கிரஸ் வாழ்க ! காசு வாங்கிய இந்திய விமானப்படை அதிகாரிகளும் வாழ்க !

மருத்துவ நுழைவு தேர்வு - சில உண்மைகள்

Image
தேசிய அளவில் மருத்துவ நுழைவு தேர்வு பற்றிய ஒரு தவறான புரிதல் என்னவென்றால் அனைத்து மருத்துவ கல்லூரி இடங்களுமே நுழைவு தேர்வு மூலம் நிரப்பப்படும் என்பதே.

உண்மை என்னவெனில் மொத்த மருத்துவ இடங்களில் வெறும் 15 சதவீத இடங்கள் மட்டுமே மருத்துவ நுழைவு தேர்வு மூலம் நிரப்பப்படும்.

உதாரணமாக தமிழ்நாட்டில் ஒரு மருத்துவ கல்லூரியில் 100 இடங்கள் இருக்குமெனில் அதில் 15 சீட் மட்டுமே நுழைவு தேர்வு மூலம் நிரப்பப்படும் மீதி இடங்கள் வழக்கம் போல் மாநில தேர்வில் (+12 தேர்வில்)  பெற்ற மதிப்பெண்ணை கொண்டே நிரப்பப்படும்.


கிராமபுறங்களில் படித்தவர்களுக்கு பெரிய பாதிப்பு என்பதெல்லாம் தனியார் கல்லூரிகள் தங்கள் பண வேட்டை குறையும் என்பதற்காக கிளப்பி விடும் காரணங்கள் என்பதை நுழைவு தேர்வை எதிர்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.ஜிபிஎஸ் (GPS) இருக்கும் பொழுது ஐஆர்என்எஸ்எஸ் (IRNSS) தேவையா ?

Image
ஒரு ரூபாய் ரூபாயல்ல இரண்டு ரூபாயல்ல ஐஆர்என்எஸ்எஸ் திட்டத்திற்கு சுமார் 1420 கோடி ரூபாய் செலவிட்டு 3 வருடத்தில் 7 செயற்கைகோள்களை ஏவியுள்ளது இந்திய விண்வெளி ஆய்வு நிலையம் (இஸ்ரோ).

குடிப்பதற்கு கூட கஞ்சி இல்லாமல் பலர் இருக்கும் நாட்டில் ஐஆர்என்எஸ்எஸ் திட்டத்திற்கு 1000 கோடிகளில் செலவிட வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.

ஐஆர்என்எஸ்எஸ் பற்றி எல்லோருக்கும் எழும் சில முக்கியமான கேள்விகளுக்கு விடை காணவே இந்த பதிவு.ஐஆர்என்எஸ்எஸ் திட்டம் தேவையா ?

கண்டிப்பாக தேவை ! இன்றைய தலைமுறைக்கு இந்திய பாகிஸ்தான் போர் என்றால் சற்றென்று நினைவுக்கு வருவது கார்கில் போர்தான், கார்கில் போரின் பொழுது பாகிஸ்தான் பக்கம் இருந்த அமெரிக்கா இந்தியா இராணுவத்திற்கு ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் தராமல் ஏமாற்றியது.

இலக்கை குறிவைத்து தாக்கும் ஏவுகணைகளுக்கான தேவை அதிகரித்துள்ள இந்த சூழலில் பிறரை நம்பாமல் நமக்கான தொழில்நுட்பத்தை வைத்திருப்பது எதிர்காலத்தில் கைகொடுக்கும்.

ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் ஏற்கனவே உலகம் முழுவதிற்கும் பயன்படுத்தப்படும் பொழுது எதற்காக ஐஆர்என்எஸ்எஸ் என்ற இந்தியாவிற்கு மட்டுமான தொழில்நுட்பம் ?

ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் …

மதுவிலக்கு என்னும் மாய அஸ்திரம் !

Image
மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்தப்படும் இந்த வாசகம் இடம்பெறாத கட்சிகளின் தேர்தல் அறிக்கையே 2016 தேர்தலில் இல்லை.

தி.மு.க மற்றும் மக்கள் நல கூட்டணியினர் ஒரே கையெழுத்தில் மதுவிலக்கு என்றும், ஜெயலலிதா படிப்படியாக மதுவிலக்கு என்றும் அறிவித்துள்ளனர்.


மதுவிலக்கு கொண்டு வருவதினால் ஏற்படும் உடனடி பிரச்சனைகளான வருவாய் இழப்பு, மதுஅடிமைகளின் உடல் நலன், மது பழக்கத்திலிருந்து மீட்டலுக்கான மருத்துவ வசதி, கள்ள சாராய பிரச்சனைகள், கடத்தல் மது விற்பனையை தடுப்பது என பல சிக்கல்களை அரசு சமாளிக்க வேண்டிவரும்.

எனவே ஒரே கையெழுத்தில் மதுவிலக்கு என்பது தேர்தல் அறிக்கைக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் ஆனால் படிப்படியாக மதுவிலக்கு என்பதே நிஜத்தில் சாத்தியம்.

ஒரே கையெழுத்தில் மதுவிலக்கு கொண்டுவருவதற்கு நிதிஷ் குமாரை உதாரணம் காட்டுவோர் பீகார் ஜார்கண்ட் மாநில எல்லை பகுதியில்  சாராயக்கடை அமைக்க ஏலம் பல கோடி ரூபாய்க்கு நடைபெற்றதையும், புதுச்சேரி தேர்தலில்  மதுவிலக்கு பற்றி எந்த கட்சியும் (தி.மு.க, அ.தி.மு.க உட்பட) வாய்திறக்காததையும், பீகார் முதல்வர் கோயம்பத்தூர் வேளாண் பல்கலைகழகத்திடம் தரமான பதநீர் தயாரிப்புக்கு உ…

காணவில்லை !

Image
போலீஸ் வாகனங்கள் விடிய விடிய  சைரன் ஒலித்தபடி ரோந்து செல்கின்றன. ஊர்க்காவல் படை வீரர்கள் 24 மணிநேர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேவைபட்டால் மேலும் போலீஸ் படை குவிக்கப்படும் என அரசு சொல்கிறது.

வன்முறையை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐந்து பேருக்கு மேல் சேர்ந்து செல்லக் கூடாது என கூடுதல் உத்தரவு வேறு.

இது ஏதோ தேர்தல் நடக்கும் மாநிலத்தின் பதட்டமான வாக்குசாவடி பற்றிய செய்தி அல்ல. மகாராஷ்டிரா மாநிலத்தின் லதூர் மாவட்டத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க அங்குள்ள எரி, கிணறுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது பற்றிய செய்தி.அதே மாநிலத்தின் மற்றுமொரு மூலையில் 60 லட்சம் லிட்டர் தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்படும் கிரிக்கெட் ஆடுகளங்கள்.

கிரிக்கெட்டை வேறு மாநிலத்துக்கு மாற்ற சொன்னால் நாங்கள் வேண்டுமானால் கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்தி கொள்கிறோம் ஆனால் பணம் கொழிக்கும் IPL போட்டியை மாற்றும் எண்ணமில்லை என்று அலட்சியமாக சொல்லும் பிசிசிஐ.பாருங்கள் பிசிசிஐ கழிவு நீரைதானே பயன்படுத்தப்போகிறது இதில் மக்களுக்கு என்ன பிரச்சனை Lets Cheer …

படித்ததில் பிடித்தது - 1 (எழுத்தாளர் கல்கி பற்றிய குறிப்புக்கள்)

Image
கல்கி தன்னுடைய சொந்த பெயரில் பத்திரிகையைத் தொடங்கிய நேரம் அதன் நிர்வாக தலைவர் சதாசிவத்திற்கு பெரிய கவலை காரணம் காகிதத் தட்டுப்பாடு.

இதை பற்றி கேள்விப்பட்ட கல்கி கிண்டலாக சிரித்தார், "கவலைபடாதிங்க,  நான் ஒரு  தமிழ்நாட்டுச் சரிந்திர நாவல் எழுதப்போகிறேன். அதை அதிகம் பேர் படிக்கமாட்டாங்க. நமக்கு காகிதம் நிறையத் தேவைபடாது" என்று வேடிக்கையாக சொன்னார்.

1941 ல் தொடங்கிய அந்த சரித்திர நாவல் தான் 'பார்த்திபன் கனவு'. பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் தான் எழுத தொடங்கினார் கல்கி ஆனால் அவரது எழுத்து லாவகம் கல்கி விற்பனையை கிடுகிடுவென உயர்த்தியது. பார்த்திபன் கனவு தந்த வெற்றி உற்சாகத்தில் கல்கி 1944ல் அடுத்த எழுதிய நாவல் "சிவகாமியின் சபதம்".

ஆறு வருடம் கழித்து "பொன்னியின் செல்வன்" நாவலை கல்கி எழுதத் தொடங்கினார். தொடர்ந்து மூன்றரை ஆண்டு காலம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற  பொன்னியின் செல்வன் வெளிவந்து 60+வருடங்கள் ஆகியும் இன்று வரை புத்தக விற்பனையில் முன்னணியில் உள்ளது.
- என். சொக்கன், புக் மார்க்ஸ் புத்தகத்திலிருந்து...

இதில் யார் பலவீனமானவர் ?

மாநிலம் முழுவதும் நமக்கு நாமேன்னு சுத்தியாச்சு ! 18 கோடி செலவு செஞ்சு எல்லா பத்திரிக்கையிலும் முதல் பக்கம் விளம்பரம் கொடுத்தாச்சு ! பழைய நண்பர் காங்கிரஸ் உடன் கூட்டணி மீண்டும் வச்சாச்சு ! இதில் தே.மு.தி.க வும் கூட்டணிக்கு வந்தால் மட்டுமே ஜெயலலிதாவை வீழ்த்தி  ஆட்சியை பிடிக்க முடியும் என்று விழிமேல் விழி வைத்து காத்திருந்து பல்பு வாங்கிய தி. மு. க !

கடந்த கால தவறுகள் மீண்டும் செய்யாமல் சொந்த பலத்தில் தனித்து தேர்தலில்  போட்டி - விஜயகாந்த், பா.ம.க , பா.ஜ.க  கட்சிகள் !

இதில் யார் பலவீனமானவர் ?

என் Support மல்லையாவுக்கு ! உங்களோடது ?

Image
அரசு வங்கிகளில் 9000 கோடி கடன் வாங்கிய விஜய் மல்லையா வெளிநாட்டிற்கு தப்பி ஓட்டம் !

டிராக்டர் வாங்க 3.5 இலட்சம் கடன் பெற்று அதில் கடைசி இரண்டு தவணை செலுத்தாத விவசாயியை போலீஸ் துணையுடன் அடித்து இழுத்து சென்றது தனியார் நிறுவனம் !

இதில் கூர்ந்து கவனிக்க வேண்டியது,  விஜய் மல்லையாவிற்கு எந்த தனியார் நிறுவனமும் கடன் கொடுக்கவில்லை காரணம் விஜய் மல்லையாவின் கிரெடிட் மதிப்பு அவர்களுக்கு தெரியும் !

விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் கடன்கொடுக்க இந்த விளங்காத அரசு வங்கிகள் தயார் இல்லை !

சரி இதெல்லாம் நமக்கு எதுக்கு ரெண்டு மாசத்துல IPL வருது ! சிவப்பு ஜெர்சி போட்டுட்டு சத்தமா கத்துறோம் RCB ! RCB !

நான் மல்லையா அண்ணன் டீம Support பன்றேன் ! நீங்க ?


ஸ்டிக்கர் மட்டும் தான் புதுசு நண்பர்களே !

Image
சினிமா பார்த்துவிட்டு நண்பர்களுடன் அரட்டை அடித்த படியே ECR - OMR இணைப்பு சாலையில் நடத்து சென்று கொண்டிருந்தோம்.

சாலையோரத்தில் ஜெயலலிதாவிற்கு புதன்கிழமை வரப்போகிற பிறந்தநாளுக்கு இன்றே வைக்கப்பட்ட பிறந்தநாள் ப்ளக்ஸ் பேனர்கள் பற்றி நண்பர் ஒருவர் கமெண்ட் அடிக்க மற்றொரு நண்பர் ஸ்டிக்கர் கலாச்சாரம் பற்றி குறிப்பிட அ.தி.மு.க அரசின் ஸ்டிக்கர் அரசியலை கலாயித்து தீர்த்தது நண்பர் பட்டாளம்.

இடம் : Dr. கலைஞர் கருணாநிதி சாலை, சோழிங்கநல்லூர். 

படிக்க தலைப்பு ! 


கர்நாடக இசையின் பிறப்பிடம் திருவாரூர் - திருவாரூர் நீங்கள் அறிய வேண்டிய தகவல்கள் 3

Image
இந்தியாவில் சங்கீதம் என்றால் இரண்டை முக்கியமாக குறிப்பிடுவர். ஒன்று ஹிந்துஸ்தானி சங்கீதம் மற்றொன்று கர்நாடக சங்கீதம்.

இதில் கர்நாடக சங்கீதம் தென் இந்தியாவை மையமாக கொண்டதாகும். சரி கர்நாடக சங்கீதத்துக்கும் சோழ நாட்டில் உள்ள திருவாரூருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா ?

கர்நாடக சங்கீதத்திற்கு மிகப்பெரிய பங்களிப்புகளை அளித்த  மூன்று இசை மேதைகள் தியாகராசர், சியாமா சாஸ்திரிகள், முத்துச்சாமி தீட்சிதர். இவர்களை கர்நாடக இசை மும்மூர்த்திகள் என்று அழைப்பர்.

இவர்கள் மூவருக்கும் ஒரு அதிசயக்கதக்க ஒற்றுமை உண்டு. மூவருமே பிறந்தது திருவாரூரில் தான்.

மூவர் பிறந்த வீடுகளும் திருவாரூரில் இன்றும் அவர்களின் நினைவாக போற்றி பாதுகாக்கப்படுகின்றன

பல கர்நாடக இசை மேதைகளும், சுற்றுலா பயணிகளும் இந்த இடங்களை பார்த்து செல்கின்றனர்.

மூன்று இடங்களுமே திருவாரூர் கோவிலில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் தான் அமைந்துள்ளது.

தியாகராஜா சுவாமிகள் வீடு - புது தெரு, திருவாரூர்
ஷ்யாமா சாஸ்திரிகள் நினைவு வீடு - மேட்டுத் தெரு, திருவாரூர்
முத்துசுவாமி தீட்சிதர்பிறந்த இடம் - வடக்கு வடம்போக்கி தெரு, திருவாரூர்

தி.மு.க காங்கிரஸ் கூட்டணி

Image
தி.மு.க காங்கிரஸ் கூட்டணி என்பது எதிர்பார்த்த கூட்டணி தான்.

சரி, பழைய தி.மு.க காங்கிரஸ் கூட்டணி யை சற்று திரும்பிபார்போம் !

19 மார்ச் 2013, இலங்கை தமிழர் பிரச்சனையை காரணம் காட்டி தி. மு. க UPA 2 கூட்டணி மற்றும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியது.

ஜூன் 2013, கனிமொழியை மீண்டும் ராஜ்ய சபாவிற்கு தேர்ந்தெடுக்க காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்பதால் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் கதவை தட்டியது தி. மு. க. அதுவும் கூட்டணி முறிந்த இரண்டரை மாதத்தில்.

காங்கிரஸ் போட்ட நிபந்தனை நீங்கள் உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு ஆதரவு தாருங்கள் நாங்கள் கனிமொழிக்கு ஆதரவு தருகிறோம் என்பது.

குடும்பமே கழகம் என்பதால் கழக நன்மை கருதி குடும்ப உறுப்பினர் கனிமொழிக்கு ராஜ்ய சபை எம்.பி பதவி வாங்கித்தந்தார் கலைஞர். ஆகஸ்ட் மாதம் 2013, ஏற்கனவே போட்ட ஒப்பந்தப்படி உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு ஆதரவும் அளித்தார்.

ஆதாரம்:
http://www.ndtv.com/south/congress-to-support-kanimozhi-for-a-second-term-in-rajya-sabha-526497

மார்ச் மாதம் கூட்டணி பிளவு ! ஜூன் மாதம் கனிமொழிக்காக மீண்டும் கூட்டணி உறவு.

இன்றைய நிலையில் காங்கிரஸ…

கோஷம் ஆரம்பம் !

கடந்த ஆண்டு பீகார் மாநில தேர்தலுக்கு முன்னால் மிகச்சரியாக எழுப்பப்பட்ட நாட்டில் சகிப்புதன்மை குறைந்து விட்டது என்ற மீடியாக்களின் கோஷம் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பல எழுத்தாளார்கள் தாங்கள் பெற்ற விருதுகளை திருப்பி வழங்கி சகிப்புத்தன்மையின்மை கோஷத்துக்கு உரமூட்டினர்.

பீகார் தேர்தலுக்கு பிறகு இந்தியா மீண்டும் தான் இழந்த சகிப்பு தன்மையை மீட்டுவிட்டதாக மீடியாக்கள் முடிவு செய்துவிட்டனர் போலும், அதன் பின் எந்த மீடியாவும் அதைப்பற்றி பேசவில்லை, எழுத்தாளர்களின் விருதுகளும் பத்திரமாக அவரவர் வீடுகளில் உறங்குகின்றன.

இந்த ஆண்டு அஸ்ஸாம், தமிழகம், கேரளா என பல மாநிலங்கள் தேர்தலை சந்திக்கின்றன. அஸ்ஸாம் தேர்தலுக்கு பிரச்சாரமும் தொடங்கிவிட்ட நிலையில் இப்பொழுது ஹைதராபாத் பல்கலைகழக மாணவர் தற்கொலைக்கு தலித் சாயம் பூசி அடுத்த பிரச்சனையை எதிர்கட்சிகளும் மீடியாக்களும் தொடங்கிவிட்டன.

நன்றாக கவனித்து பாருங்கள், எல்லா செய்தி ஊடகமும் இறந்த மாணவரை தலித் அடையாளமாக மாற்ற மிகவும் முனைந்துள்ளதும், ஹைதராபாத் பல்கலைகழகம் அமைந்துள்ள தெலுங்கானா மாநில அரசை பற்றி கண்டுகொள்ளாமல் மோடியை குறிவைத்து எதிர்ப்…

இது தேர்தல் காலம் மக்களே

எப்பொழுதுமே வழக்குகளில் நேரில் ஆஜராவதில் வயது மூப்பு காரணமாக விலக்கு அளிக்க கோரி மனு செய்யும் தி.மு.க தலைவர் கருணாநிதி அவர்கள் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் தாமே முன்வந்து இன்று நேரில் ஆஜராக போவதாக தெரிவித்துள்ளார். 
இந்த வயசுல மனுஷன் இப்படி கோர்ட்க்கு அலைஞ்சு கஷ்டப்பட்ரார்னு மக்கள் நெனச்சு அனுதாப படுவாங்கன்னு ஒரு கணக்கு தான். இது தேர்தல் காலம் மக்களே !