Cashless Economy சாத்தியமா?

இந்தியாவில் cashless economy ஊக்குவிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்ததும் (கவனிக்கவும் ஊக்குவிக்க மட்டுமே  நிர்பந்தபடுத்தப்பட போவதில்லை) இதெல்லாம் தேவையா சாத்தியமா என்று பலவாறான விமர்சனம் எழுப்பப்படுகிறது.

அவர்களுக்கு ஒரு குட்டி கதை

ராஜிவ் காந்தி 1986 ஆம் ஆண்டு IT புரட்சி பற்றி பேசிக்கொண்டிருந்தார், IT இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றும் என்றார். இங்கே விவசாயிகள் பிரச்சனை இத்தனை இருக்கும் பொழுது நம் பிரதமர் கம்ப்யூட்டர் கிம்ப்யூட்டர் என்று உளறிக்கொண்டு இருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தார்கள்!

இன்னும் சில கட்சிகள் கம்ப்யூட்டர் அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது கம்ப்யூட்டர் ஒரு ரோபோட் அது தொழிலார்களின் வேலைவாய்ப்பை பறித்து விடும் இந்தியா அவ்வளவு தான் என்று போராட்டமே நடத்தினார்கள்.

படிக்க ஆதாரம் : http://pazhayathu.blogspot.in/2010/04/anti-computer-protests-1980-by-commun.html

ஆனால் ராஜிவ் உறுதியாக இருந்தார் ! IT யை ஊக்குவித்தார் ! விளைவு இன்று IT துறை இந்திய பொருளாதாரத்தில் 8 % சதவீத பங்களிப்பை அளிக்கிறது. இந்தியாவில் 29 லட்சம் பேர் நேரடியாகவும் 90 லட்சம் பேர் மறைமுகவாகவும் IT துறையில் பணிபுரிகிறார்கள் !

இதே கதை cashless economy க்கும் பொருந்தும். சூரிய ஒளி மின்சார திட்டங்களுக்கும் பொருந்தும் !

Source (மூலம்) : கூகிள் இமேஜ் சர்ச் 
உண்மைதான் இந்தியாவை நாளைக்கோ அடுத்த  ஒரு வருடத்திலோ ரொக்கப்பணமில்லா(cashless) பொருளாதாரமாக மாற்றிவிட முடியாது தான். குறைந்தது 10 வருடங்கள் ஆகலாம்.

ஆனால் இன்றைக்கு ஊக்குவித்தால் இன்றிலிருந்து 10 வருடத்தில் செயல்படுத்தலாம். நாளைக்கு என்றால் இன்னும் ஒரு நாள் அதிகம் அடுத்த 5 வருடம் கழித்து என்றால் பயனும் 5 வருடம் கழித்துதான் கிடைக்கும்!

மாற்றங்கள் என்றுமே சந்தேகத்திற்கு இலக்காகும் ! எதிர்க்கப்படும் ! ஆனால் பயன் வெளிப்படும் பொழுது கொண்டாடப்படும் !

மாற்றங்களை செயல்படுத்த தேவை வெறும் தலைவர்கள் அல்ல அது தி மு க போன்ற கட்சிகளிலேயே கூட்டம் கூட்டமாக இருக்கிறார்கள் ! தேவை தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைவர்கள் !

Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)