Posts

Showing posts from March, 2014

வரலாற்றின் பக்கங்கள் - பழைய புத்தக கடை

Image
பழைய புத்தக கடை , சென்னை மூர் மார்க்கெட் கல்லூரி முடிந்ததும் சுற்றுலா செல்வது போல அனைவரும் செல்லும் ஒரு இடம் பழைய புத்தக கடை. அப்பொழுது கல்லூரி தேர்வுகள் முடியவில்லை. எனவே அவ்வளவாக அந்த கடையில் கூட்டமில்லை.  கூட்டம் இல்லாததால் பொழுது போக்கிற்கு வானொலி கேட்டுகொண்டிருந்த கடைக்காரர் யாரோ தன் கடைக்கு வந்திருப்பதை உணர்ந்து திரும்பி பார்த்தார். இளம் வயதுடைய இளைஞன், கண்ணில் சோகம், பை நிறைய புத்தகம் என நின்றான்.எப்பொழுதுமே பொறியியல் புத்தங்களுக்கு அங்கே கடும் கிராக்கி. வந்திருப்பவன் பொறியியல் மாணவன் என்று தெரிந்ததும் கடைகாரனுக்கு ஏக குஷி. பையையில் உள்ள புத்தகங்களை பார்த்தார். புத்தகத்தின் முனைகள் கூட மடங்காமல் பத்திரமாக படித்திருந்தான் அந்த இளைஞன். வந்தவன் முகத்தில் இருக்கும் சோகத்தை கடைக்காரர் கவனித்தார். ஆனால் அவனிடம் பேச்சு கொடுக்கவில்லை. ஒருபுத்தகத்தை பிரித்து பார்த்த பொழுது அதிர்ச்சி அடைந்தார் .அந்த புத்தகத்தில் எழுதி இருந்த வரிகள் " Awarded for excellence in academics in the first year of engineering at the Madras Institute of Technology by the Vice- Chance

வரலாற்றின் பக்கங்கள் - ஆபரேஷன் பூமாலை

Image
இடம்: க்வாலியர் (Gwalior)   காலை சூரியனின் ஒளி இன்னும் முற்றாக பரவவில்லை. அரை தூக்கத்தில் இருந்த அஜித் பவ்னானியின் காதுக்கு தன் அறையின் கதவு வேகமாக தட்டப்படும் சத்தம் கேட்டது . அஜித் பவ்னானி இந்திய விமான படையின் மூத்த அதிகாரி. இத்தனை காலையில் அவரது அறை கதவு தட்டப்பட்ட பொழுதே ஏதோ முக்கிய செய்தி வந்திருக்கிறது என்று அவருக்கு தெரிந்து விட்டது . கதவை திறந்த பொழுது  மூச்சு வாங்கிபோய் நின்ற அவரது படை வீரன் தன்னை ஆசுவாச படுத்த கூட நேரம் தராமல் ஒரு காகிதத்தை நீட்டினான் அந்த காகிதம் இந்தியாவின் தலைநகரில் இருந்து வந்திருந்தது . " உடனே 5 விமானிகளுடன் மிராஜ் 2000 ரக விமானத்தில் பெங்களூரின் ஹால் (Hal) விமான நிலையத்திற்கு வரவும் " மிராஜ் 2000 பதிலேதும் பேசவில்லை அவர் . தன் படையின் 5 சிறந்த விமானிகளுடன் பெங்களூருக்கு பறந்தார் . நேரம் மத்தியத்தை நெருங்கிவிட்டது. அஜித் பவ்னானிக்கு குழப்பமாக இருந்தார் காரணம் தன்னை பெங்களூருக்கு அழைக்கபட்ட காரணம் இன்னும் சொல்லப்படவில்லை. An 32 ரக விமானம் அதேநேரம் இந்தியாவின் தாஜ்மஹால் நகரான ஆக்ராவில் இருந்து  ஐந்து An 32 ரக விமான

அபத்தமான தவறு

Image
நாம் அம்மா என்பதை ஆங்கிலத்தில் குறிப்பிட Mummy என்ற சொல்லை அதிகம் பயன்படுத்துகிறோம். ஆனால் Mummy என்பது தவறான சொல் என என் நண்பன் குறிப்பிட்ட பொழுது ஆர்வத்தில் இன்டர்நெட்டில் தேடினேன். கிடைத்த விடை கொஞ்சம் அதிர்ச்சி தான், Mummy என்பதற்கு ஆங்கில அகராதியான oxford dictionary ல் இறந்தவரின் பதப்படுத்தப்பட்ட உடல் என்று பொருள் இருந்தது.( எகிப்தில் இறந்தவரின் உடல்கள் பிரமிடுகளில் பதப்படுத்துவதை குறிப்பிடும் சொல், மம்மி என்ற ஆங்கில படம் இப்பொழுது தான் பொறி தட்டுகிறது ) விக்கிபீடியாவும் oxford dictionary யையே வழிமொழிகிறது. அம்மா என்பதை சரியாக குறிப்பிடும் சொல் Mommy அல்லது Mom என்பதே. [ நான் இத்தனை நாட்களாக செய்து வந்த அபத்தமான தவறை சுட்டிக் காட்டிய என் நண்பர் இளமாறனுக்கு நன்றி   ]

நோட்டா ஓட்டு

Image
செப்டம்பர் 27, 2013 இந்தியாவின் உயரிய நீதிமன்றமான உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில் இனி ஓட்டு போடும் எந்திரத்தில் நோட்டா ( NATO - None Of The Above) என்று அழைக்கப்படும் யாருக்கும் ஓட்டு போடா விருப்பம் இல்லை என்று குறிக்கும் பட்டனை கட்டாயம் இடம் பெற செய்யவேண்டும் என்று தீர்பளித்தது. இது அரசியல் கட்சிகளுக்கு பெருத்த அடி என்றும் , வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்றும் பலர் கொண்டாடுகின்றனர். இதில் இருவேறு கருத்துகள் இருக்கமுடியாது. ஆனால் இந்த முடிவு இந்திய அரசியலை தலைகீழாக புரட்டிவிடும் என்று நான் நினைக்கவில்லை. தேர்தல் என்றால் காந்தி ஜெயந்தி போல ஒரு அரசாங்க பொது விடுமுறை தினம் என எண்ணி வீட்டிலே படம் பார்க்கும் தோழர்களும், சமுதாயத்தில் உயர் இடத்தில் இருப்பவரும்,  யாருக்கு ஒட்டு போட்டால் என்ன நடக்க போகிறது என்று  ஓட்டே போடாதவருக்கும் பஞ்சமில்லை இந்த நாட்டில். அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை இழந்த பலர் ஒட்டு போடுவதில்லை என்பதும் ஒரு கருத்து. இத்தகைய மக்களை ஒட்டு சாவடிக்கு இழுத்து வரும் ஒரே வழி நோட்டா தான் என்கிறது ஒரு தரப்பு. இந்திய வாக்களர்களுக்கு நோட்ட பற்றிய விழிப்புணர்வ

வரலாற்றின் பக்கங்கள் - பழுத்த மரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யும்

Image
( வரலாற்று  நிகழ்வுகளை அனைவருக்கும் எடுத்து செல்ல ஒரு முயற்சி ) இந்தியாவின் இரும்பு பெண்மணி இந்திரா காந்தி அக்டோபர் 31 ஆம் தேதி  தனது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டு கொல்லப்பட்ட நிகழ்வுகளின் பதிவு பாரதத்தின்  முதல் பெண் பிரதமரை நோக்கி சுடப்பட்ட குண்டுகள் மட்டும் 33. அந்த இரும்பு பெண்ணை துளைத்த குண்டுகள் மட்டும் 30, அதில் 7 குண்டுகள் அவரது உடலிலேயே தங்கிவிட்டன பாசத்துடன் . 3 வது குண்டு துளைத்த பொழுதே சாய்ந்து விட்டது அந்த பெண் ஆலமரம்  சரிந்தாலும் குறையவில்லை கொலையாளிகளின் வெறி.தரையில் கிடந்தவரை நோக்கி சுடப்பட்டன 30 குண்டுகள் . எங்கே பிழைத்து கொள்வாரோ என்ற பயத்திலோ ? ஆலமரம் சரிந்தது ஆனால் அதிர்வுகள் குறையவில்லை. இந்திராவை கொன்ற சீக்கிய இனத்தை பழிவாங்க களமிறக்கப்பட்டனர் காங்கிரஸ் தொண்டர்கள் . டெல்லியில் ரேஷன் கார்டை வைத்துகொண்டு அடையாளம் காணப்பட்டனர் சீக்கியர்கள்.  இலவச வேட்டி சேலை வழங்கவா ?? இல்லை இந்திரா சென்ற இடத்துக்கே அவர்களையும் அனுப்பிவைக்க . ரத்த களமானது தலைநகர் . இந்தியாவின் அடுத்த பிரதமர் ராஜீவ் இந்த சீக்கிய படுகொலை குறித்து உதிர்த்த வரிகள் " When a g

How we create stress by ourselves - 3 'P's Formula

Image
In a research by a Psychologist, he revealed three 'P's which we used to disturb ourselves.  Personalising: Some of us take things personally. For example, a wife said to her husband, "The air conditioner is not working, have it fixed. Her husband got anger and shouted at her saying, "Do you mean that I don't take care of things properly ?". Such people are hypersensitive to others comments. They pick on what others say and construct an unproductive meaning of self based on what is said to them. Permanent:   This is about seeing negative things and creating a permanent scare in life. Some people feel that one failure will have a permanent impact in their life. Someone not getting selected in an interview perhaps believes everything is lost. Though ancient wisdom says "This too shall pass", we seem to cling onto unfortunate experience in life and lose our inner peace. Pervasive: The third P is believing that any negative impac