வரலாற்றின் பக்கங்கள் - பழுத்த மரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யும்

( வரலாற்று  நிகழ்வுகளை அனைவருக்கும் எடுத்து செல்ல ஒரு முயற்சி )

இந்தியாவின் இரும்பு பெண்மணி இந்திரா காந்தி அக்டோபர் 31 ஆம் தேதி  தனது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டு கொல்லப்பட்ட நிகழ்வுகளின் பதிவு


digitalnative  digital native


பாரதத்தின்  முதல் பெண் பிரதமரை நோக்கி சுடப்பட்ட குண்டுகள் மட்டும் 33. அந்த இரும்பு பெண்ணை துளைத்த குண்டுகள் மட்டும் 30, அதில் 7 குண்டுகள் அவரது உடலிலேயே தங்கிவிட்டன பாசத்துடன் .

3 வது குண்டு துளைத்த பொழுதே சாய்ந்து விட்டது அந்த பெண் ஆலமரம்  சரிந்தாலும் குறையவில்லை கொலையாளிகளின் வெறி.தரையில் கிடந்தவரை நோக்கி சுடப்பட்டன 30 குண்டுகள் . எங்கே பிழைத்து கொள்வாரோ என்ற பயத்திலோ ?

ஆலமரம் சரிந்தது ஆனால் அதிர்வுகள் குறையவில்லை. இந்திராவை கொன்ற சீக்கிய இனத்தை பழிவாங்க களமிறக்கப்பட்டனர் காங்கிரஸ் தொண்டர்கள் .

டெல்லியில் ரேஷன் கார்டை வைத்துகொண்டு அடையாளம் காணப்பட்டனர் சீக்கியர்கள்.  இலவச வேட்டி சேலை வழங்கவா ?? இல்லை இந்திரா சென்ற இடத்துக்கே அவர்களையும் அனுப்பிவைக்க .

ரத்த களமானது தலைநகர் .

இந்தியாவின் அடுத்த பிரதமர் ராஜீவ் இந்த சீக்கிய படுகொலை குறித்து உதிர்த்த வரிகள்

"When a giant tree falls, the earth below shakes." ( பழுத்த மரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யும் )

இந்திரா காந்தி இறுதியாக கலந்து கொண்ட கூட்டத்தில் கூறிய வார்த்தைகள் 

"I am alive today, I may not be there tomorrow. I shall continue to serve till my last breath and when I die every drop of my blood will strengthen India and keep a united India"  - Indira on 30th October 1984 (One day before her assassination)

வங்கிகளை தேசியமயமாக்கிய தீர்க்கதர்சிக்கு தன் கடைசி நிமிடமும் தெரிந்து தான் இருந்தது .



Comments

  1. what here you are trying to convey....not getting correctly ...

    by Lakshmanan R

    ReplyDelete
  2. felt bitter to remember that incident...she serves to us till her last breath...inspirational person...

    ReplyDelete

Post a Comment

Post ur comments and help us to improve

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)