Posts

Showing posts from April, 2019

இனி டீசல் கார்கள் விற்பனை செய்வதில்லை - மாருதி துணிச்சல் முடிவு

இந்தியாவில் அதிக கார்களை விற்கும் மாருதி நிறுவனம் ஏப்ரல் 1, 2020 முதல் டீசல் கார்களை விற்பதில்லை என அறிவித்துள்ளது. BS-VI எனப்படும் மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகள் அடுத்த ஏப்ரல் 1 முதல் அமலில் வரவுள்ளன. ஏற்கனவே மாருதி வசம் இருக்கும் டீசல் என்ஜின்களை BS-VI விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க அதிக செலவு பிடிக்கும் என மாருதி கருதுகிறது. மாருதியின் மொத்த கார் விற்பனையில் 23% டீசல் கார்கள் என்பதை கொண்டே மாருதி எடுத்திருக்கும் முடிவின் வீரியத்தை புரிந்துகொள்ளலாம். பெட்ரோல் மற்றும் டீசல் இடையே விலை வேறுபாடு பெரிய அளவில் இல்லாததால் டீசல் கார்களை விரும்புபவர்கள் பெட்ரோல் காருக்கு மாறுவார்கள் என மாருதி நம்பியிருக்கலாம். வரும் ஆண்டுகளில் CNG மற்றும் எலெட்ரிக் கார்கள் விற்பனையில் மாருதி கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

தீவிரவாதத்தை ஒடுக்கும் பொறுப்பு அரசை விட குடும்ப அமைப்புக்கே அதிகம்

இலங்கையில் நடத்த தீவிரவாத தாக்குதல் பலவகையில் இந்தியாவிற்கு கவலையளிக்கும் செய்தியாகும். கோவையில் சமீபத்தில் ISIS அமைப்புடன் தொடர்புள்ளதாக கைதுசெய்யப்பட்ட 6 பேரிடம் NIA அமைப்பு நடத்திய விசாரணையில் இலங்கையில் தீவிரவாத தாக்குதல் நடக்கயிருப்பதை பற்றி தகவல் கிடைக்க அதை வைத்தே இந்திய அரசு இலங்கை அரசுக்கு பல முறை எச்சரிக்கை செய்தி அனுப்பியது தெரியவந்துள்ளது. ஆனால் இலங்கை அரசு அந்த எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்தியுள்ளது... ISIS தீவிரவாத இயக்கம் மனிதகுலத்துக்கே எதிரானது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அதன் கொடூர கொலை கரங்கள் இந்தியாவிற்கு குறிப்பாக தமிழகத்திற்கு அருகில் வரை வந்துவிட்டது கவலையளிக்கிறது.. ஒரு நக்ஸல் தீவிரவாதி உருவாவதற்கு அவனது வறுமை, அரசின் ஒடுக்குமுறை, சுரண்டல், கல்லாமை போன்றவற்றை காரணமாக சொல்லப்படுவதுண்டு. ஆனால் இலங்கையில் தாக்குதல் நடத்திய எவருக்கும் அப்படியான மோசமான சமூக சூழலோ, கல்வி குறைபாடோ, பொருளாதார பிரச்சனைகளோ இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். உதாரணமாக தாக்குதல் நடத்திய ஒரு தீவிரவாதி தனது கல்லூரி படிப்பு முழுவதையும் மேலைநாடுகளில் கற்றுள்ளார் எனில் கல

Decathlon கடையில் ஏன் Puma, Adidas ஷூக்கள் கிடைப்பதில்லை ?

Image
#Decathlon கடைக்கு செல்லும் பலரும் அடிக்கடி கூறும் ஒரு குறை அங்கே Decathlon னின் சொந்த தயாரிப்பு/பிராண்ட் பொருட்கள் மட்டுமே கிடைக்கிறது. வேறு பிராண்ட் பொருட்களை அவர்கள் விற்பதில்லை என்பது இதன் காரணத்தை விளக்க இந்த சின்ன பதிவு ! Decathlon ஒரு பிரெஞ்சு நிறுவனம். இந்தியாவில் கடை திறக்கும் எந்த ஒரு அந்நிய நிறுவனமும் Multi Brand Retail எனப்படும் பல பிராண்ட் பொருள்களை விற்கும் கடையை திறக்க அனுமதி இல்லை வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் சில்லறை விற்பனை கடை திறந்து இங்கே இருக்கும் கோடிக்கணக்கான சில்லறை வியாபாரிகளின் வியாபாரத்தை பாதிக்காமல் இருக்க இப்படி ஒரு சட்டம் அமலில் உள்ளது. ஆனால் சட்டம் கொண்டுவரும் பொழுது வால்மார்ட் கடை திறக்க கூடாது என்று கொண்டுவர முடியாதே. எனவே இந்த சட்டம் எல்லா அந்நிய நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த சட்டப்படி அந்நிய நாட்டு நிறுவனம் இந்தியாவில் மொத்த வியாபாரம் செய்யலாம் (Whole sale) அல்லது தங்களின் பிராண்ட் பொருட்களை மட்டும் கடை வைத்து (Single Brand Retail) விற்பனை செய்யலாம் இதே விதி Van Heusen, Puma, Adidas, Jockey, Rolex, IKEA, Dominos, Samsung போன்ற நிறுவனங்கள

ஏன் வெற்றி பெறுகிறது பிஜேபி ?

ஹிந்துத்துவா கொள்கை மோசமானது, நாட்டை துண்டாடிவிடும், கலவரம் வரும், அதை வைத்துதான் மோடி ஒவ்வொரு மாநிலத்திலும் நுழைகிறார் என்று பல இடதுசாரிகள், பெரியாரியம் பேசுபவர்கள் பதிவிடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம் மேற்குவங்கத்தின் கதையை எடுத்து கொள்வோமே பிஜேபி இந்த முறை மேற்கு வங்கத்தில் கனிசமான தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிகிறது. பிஜேபி வெற்றி பெற்றதும் நமது லிபரல் போராளிகள் வழக்கம்போல் பாருங்க மோடி ஹிந்து முஸ்லீம் கலவரத்தை தூண்டி மேற்குவங்கத்தில் வெற்றி பெற்றுவிட்டார் என பதிவிடுவார்கள் ஆனால் அவர்கள் மம்தாவின் கடந்த கால செயல்பாடு தான் மோடிக்கு மேற்குவங்கத்தில் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது என்பதை ஒப்புக்கொள்ள அல்லது ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அது தான் அவர்களின் தோல்வியின் ஆரம்ப புள்ளி... பங்களாதேஷில் இருந்து சட்டத்துக்கு புறம்பான வகையில் இடம்பெயர்ந்து வரும் முஸ்லீம் மக்களுக்கு மம்தா பானர்ஜி அதீத சலுகை காட்டுதல், இடம்பெயர்ந்த மக்களுக்கு உடனடி ரேஷன் கார்டு, பிற அரசு சலுகை வழங்கப்படுவதல், அவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வைத்தால் என மம்தா முஸ்லீம்கள் வாக்குவங்கியை கவர பல

வாராக்கடன் மீட்பில் பின்னடைவு

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வாராக்கடன் பிரச்னையை கையாள பிப்ரவரி 12 ஆம் தேதி ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.. கடன் வாங்கியவர்கள், வங்கிகள் என பல நிலைகளில் சலசலப்பை ஏற்படுத்திய இந்த சுற்றறிக்கையை நேற்று உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.. ரிசர்வ் வங்கிக்கு இதுபோன்றதொரு சுற்றறிக்கையை அனுப்ப சட்டரீதியாக அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது... பிப்ரவரி 12 சுற்றறிக்கையின் சில முக்கிய பகுதிகள் கிழே * 2,000 கோடிக்கு மேல் கடன் பாக்கியுள்ள நிறுவனம் கடனை தவணையை கட்ட குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு நாள் தாமதமானாலும் அந்த நிறுவனத்தை திவால் சட்டத்தின் அடிப்படையில் NCLT எனப்படும் திவால் வழக்குகளை தீர்க்கும் நீதிமன்றதத்திக்கு எடுத்து செல்லவேண்டும் * அவ்வாறு எடுத்துச்செல்லப்படும் நிறுவனத்தை அடுத்த 180 நாட்களுக்குள்  கடனில் இருந்து மீட்க வழியிருக்கிறதா (Resolution plan) என ஆராய வேண்டும் * அப்படி வழி ஏதும் இல்லையெனில் அந்த நிறுவனத்தை திவால் என அறிவித்து நிறுவனத்தை ஏலம் விடுவதன் மூலமோ அல்லது பகுதியாக சொத்துக்களை விற்பதன் மூலமோ கடனை வங்கிகள் மீட்டுக்கொள்ளலாம் (500