வரலாற்று பிழையா ? அல்லது சதியா ?

ஒருநாள் பொழுது போகாமல் விக்கிபீடியாவில் நேரம் செலவிட்ட பொழுது கிடைத்த தகவல் என்னை மிரளவைத்தது.

நான் படித்தது ராஜேந்திர சோழனை பற்றி .

ராஜேந்திர சோழன் ராஜராஜனின் மகன் கங்கை கொண்ட சோழபுரத்தை கட்டியவன் என்பதெல்லாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால் அவனது போர் வெற்றிகள் பேசப்பட்டதா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்று கூறலாம்.

அவன் பெற்ற வெற்றிகள் இவை 
  • இலங்கை தீவு முழுவதும் வெற்றி கொள்ளப்பட்டது.
  • பாண்டியர்களும், சேரர்களும் ஓட ஓட விரட்டப்பட்டார்கள் .
  • ஆந்திரா, ஒரிசாவை ராஜ்யமாக கொண்ட சாளுக்கியர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்.
  • கங்கை நதி வரை சோழர்களால் கைப்பற்றப்பட்டது .
  • கங்கையில் இருந்து எடுத்து வந்த நீரை கொண்டு கங்கை கொண்ட சோழபுரம் கோவில் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.
கூகுள் மேப் உதவியுடன் தேடியபொழுது கிடைத்த தகவல் கங்கை நதிக்கும் கங்கை கொண்ட சோழபுரத்துக்கும் உள்ள தொலைவு 2648 கீ . மீ .

ganges to gangai konda cholapuram

  • ஸ்ரீவிஜய நாடு (தற்போதைய மியன்மார் ) தோற்கடிக்கப்பட்டது.
  • சுமத்ரா தீவு தோற்கடிக்கப்பட்டது.
  • சீனாவிடம் வியாபார தொடர்பு மேற்கொள்ளப்பட்டது , சீனாவின் தூதர்கள் இராஜராஜன் மற்றும் ராஜேந்திரனை தொடர்பு கொண்டனர். 
  • தஞ்சாவூர் கல்வெட்டுகளின் படி கம்போஜாவின் அரசன் அங்கோர் நாட்டை பிடிக்க ராஜராஜனின் உதவியை நாடியதாக செய்தி உள்ளது.
( பலவற்றை வெற்றிகொண்ட ராஜேந்திரசோழன் செய்த தவறு அதை நேரடியாக ஆட்சி செய்யாமல், தோற்ற மன்னனை கப்பம் கட்டுமாறு ஒப்பந்தம் செய்து அவர்களிடமே நாட்டை திரும்ப கொடுத்ததே.

கீழே கொடுக்கப்பட்ட மேப்பில் ராஜேந்திரனின் நேரடி ஆட்சி பகுதி மற்றும் அவன் வெற்றி கொண்டபின் சோழர்களுக்கு அடிமைகளாக கப்பம் கட்டிய தேசங்கள் தனி தனி நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. )


இவை அனைத்தும் விக்கிபீடியாவில் உள்ளது

https://en.wikipedia.org/wiki/Rajendra_Chola_I

ஆனால் நான் எந்த வரலாற்று புத்தகத்திலும் ராஜேந்திர சோழனை பற்றி பெரிதாக குறிப்பிட்டு இருபதுபோல் பார்த்ததில்லை . ஒரே ஒரு போரில் வெற்றி பெற்ற அசோகரை கொண்டாடும் இந்திய வரலாறு, ராஜேந்திரனை கொண்டாட மறந்தது ஏன் என்று தெரியவில்லை .

ஒருவேளை அசோகர் புத்த மதத்தை பரப்பினர் என்பதால் வரலாற்றில் இடம் பிடித்தார் என்று நீங்கள் நினைத்தால் அதுவும் தவறே.

காரணம் சோழர்கள் காலத்திலும் புத்த மதத்திற்கு பெரிய மரியாதையை செய்யப்பட்டது. நகையிலும், வேதாரணியத்துக்கு அருகிலும் புத்த கோவில்கள் (சூடாமணி விஹரங்கள் ) கட்ட ராஜராஜன், ராஜேந்திரன்  இருவருமே உதவியவர்கள்.

இதை படிக்கவும் https://en.wikipedia.org/wiki/Chudamani_Vihara

இது வரலாற்று பிழையா ? அல்லது வரலாற்று சதியா ?

Comments

Post a Comment

Post ur comments and help us to improve

Popular posts from this blog

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Download Tamil books free in PDF format - Project Madurai

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்

சங்கதாரா புத்தக விமர்சனம்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)