Posts

Showing posts with the label இஸ்ரோ

இஸ்ரோ விஞ்ஞானி உளவாளியாக, திருடர்கள் முதல்வர்களாக !

வெளிநாட்டுக்கு இஸ்ரோ வின் ரகசியங்களை விற்க முயன்றதாக போலியாக குற்றம்சாட்டப்பட்டு கொடுமைசெய்யப்பட்ட இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களுக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நம்பி நாராயணன் இஸ்ரோ வின் கிரையோஜெனிக் (Cryogenic) என்ஜின் தயாரிப்பு பிரிவின் தலைவர். அப்துல்கலாம் மற்றும் விக்ரம்சாராபாயுடன் இணைத்து பணியாற்றியவர். நம்பி நாராயணன் கைதால் இஸ்ரோ வின் GSLV ராக்கெட் தயாரிப்பு பணிகள் 19 வருடம் தாமதமானது. இது நமது நாட்டுக்கு எத்தனை பெரிய இழப்பு. இஸ்ரோ இன்றும் GSLV ராக்கெட்டில் பெரிய வெற்றியை பெறவில்லை. தொலைதூரம் அனுப்பவேண்டிய செயற்கைகோள்களுக்கு நாம்இன்னும் ஐரோப்பாவின் ஏரியான் ராக்கெட்டுகளை வாடகைக்கு பயன்படுத்துகிறோம்.  ஒருவேளை நம்பி நாராயணன் பொய்வழக்கில் கைது செய்யப்படாமல் இருந்திருந்தால் இந்நேரம் பெரிய செயற்கைகோள்களை நாம் நமது GSLV ராக்கெட்டிலேயே செலுத்திக்கொண்டிருப்போம். எத்தனை கோடி நமக்கு மிச்சமாகியிருக்கும் என்று யோசித்து பாருங்கள் ??? எனவே நம்பி நாராயணன் கைதால் இந்தியாவும் இஸ்ரோவோம் இழந்தது பல.. ஆனால் இந்த வழக்கால் பயனடைத்தவர்களும...

இஸ்ரோவும் 104 செயற்கைகோளும்

Image
இஸ்ரோ ஒரே செலுத்துதலில் (launch) 104 செயற்கைகோள்களை பிப்ரவரி 15 அன்று செலுத்த உள்ளது. இதற்கு முன் ரஷ்யா 37 செயற்கைகோள்களை ஒரே launch ல் செலுத்தியது தான் உலகசாதனையாக உள்ளது. ரிஸ்க் நிறைந்த இந்த திட்டத்தை இஸ்ரோ கையில் எடுக்க காரணம் இல்லாமல் இல்லை. இன்று உலகம் முழுவதும் தனியார் நிறுவனங்கள் தங்கள் தொழிலுக்கு பயன்படும் செயற்கைகோள்களை தயாரித்து விண்ணில்செலுத்துவது அதிகரித்துள்ளது. செயற்கோள்களை நிறுவனங்களே தயாரித்துகொண்டாலும் அதை விண்ணில் செலுத்த ராக்கெட் அவர்களிடம் இல்லை. அதிலும்  ராக்கெட் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடியது எனவே நிறுவனங்கள் ராக்கெட் ஏவுதலில் சிறந்து விளங்கும் மற்ற நிறுவனங்களிடம் பணம் செலுத்தி தங்கள் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் புதிய தொழில் வாய்ப்பு உலகம்முழுவதும் பெருகிவருகிறது. இதில் நிறுவனங்களுக்கு இரண்டே எதிர்பார்ப்பு தான் குறைந்த செலவு மற்றும் வெற்றிக்கான சாத்தியம் அதிகம் உள்ள ராக்கெட். இஸ்ரோ இது இரண்டிலுமே கில்லாடி ! இஸ்ரோவின் PSLV ராக்கெட் விராட் கோஹ்லி போன்று வெற்றி நாயகன் என்று உலகம் முழுவதும் அறியப்படுகிறது. இதுவ...

ஜிபிஎஸ் (GPS) இருக்கும் பொழுது ஐஆர்என்எஸ்எஸ் (IRNSS) தேவையா ?

Image
ஒரு ரூபாய் ரூபாயல்ல இரண்டு ரூபாயல்ல ஐஆர்என்எஸ்எஸ் திட்டத்திற்கு சுமார் 1420 கோடி ரூபாய் செலவிட்டு 3 வருடத்தில் 7 செயற்கைகோள்களை ஏவியுள்ளது இந்திய விண்வெளி ஆய்வு நிலையம் (இஸ்ரோ). குடிப்பதற்கு கூட கஞ்சி இல்லாமல் பலர் இருக்கும் நாட்டில் ஐஆர்என்எஸ்எஸ் திட்டத்திற்கு 1000 கோடிகளில் செலவிட வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. ஐஆர்என்எஸ்எஸ் பற்றி எல்லோருக்கும் எழும் சில முக்கியமான கேள்விகளுக்கு விடை காணவே இந்த பதிவு. ஐஆர்என்எஸ்எஸ் திட்டம் தேவையா ? கண்டிப்பாக தேவை ! இன்றைய தலைமுறைக்கு இந்திய பாகிஸ்தான் போர் என்றால் சற்றென்று நினைவுக்கு வருவது கார்கில் போர்தான் , கார்கில் போரின் பொழுது பாகிஸ்தான் பக்கம் இருந்த அமெரிக்கா இந்தியா இராணுவத்திற்கு ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் தராமல் ஏமாற்றியது. இலக்கை குறிவைத்து தாக்கும் ஏவுகணைகளுக்கான தேவை அதிகரித்துள்ள இந்த சூழலில் பிறரை நம்பாமல் நமக்கான தொழில்நுட்பத்தை வைத்திருப்பது எதிர்காலத்தில் கைகொடுக்கும். ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் ஏற்கனவே உலகம் முழுவதிற்கும் பயன்படுத்தப்படும் பொழுது எதற்காக ஐஆர்என்எஸ்எஸ் என்ற இ...