இஸ்ரோ விஞ்ஞானி உளவாளியாக, திருடர்கள் முதல்வர்களாக !

வெளிநாட்டுக்கு இஸ்ரோ வின் ரகசியங்களை விற்க முயன்றதாக போலியாக குற்றம்சாட்டப்பட்டு கொடுமைசெய்யப்பட்ட இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களுக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நம்பி நாராயணன் இஸ்ரோ வின் கிரையோஜெனிக் (Cryogenic) என்ஜின் தயாரிப்பு பிரிவின் தலைவர். அப்துல்கலாம் மற்றும் விக்ரம்சாராபாயுடன் இணைத்து பணியாற்றியவர். நம்பி நாராயணன் கைதால் இஸ்ரோ வின் GSLV ராக்கெட் தயாரிப்பு பணிகள் 19 வருடம் தாமதமானது. இது நமது நாட்டுக்கு எத்தனை பெரிய இழப்பு.

இஸ்ரோ இன்றும் GSLV ராக்கெட்டில் பெரிய வெற்றியை பெறவில்லை. தொலைதூரம் அனுப்பவேண்டிய செயற்கைகோள்களுக்கு நாம்இன்னும் ஐரோப்பாவின் ஏரியான் ராக்கெட்டுகளை வாடகைக்கு பயன்படுத்துகிறோம். 

ஒருவேளை நம்பி நாராயணன் பொய்வழக்கில் கைது செய்யப்படாமல் இருந்திருந்தால் இந்நேரம் பெரிய செயற்கைகோள்களை நாம் நமது GSLV ராக்கெட்டிலேயே செலுத்திக்கொண்டிருப்போம். எத்தனை கோடி நமக்கு மிச்சமாகியிருக்கும் என்று யோசித்து பாருங்கள் ???

எனவே நம்பி நாராயணன் கைதால் இந்தியாவும் இஸ்ரோவோம் இழந்தது பல..

ஆனால் இந்த வழக்கால் பயனடைத்தவர்களும் இருக்கிறார்கள்.. இந்தவழக்கை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி  அப்போதைய கேரளா முதல்வர் கருணாகரனை பதவி விலக சொல்லி அவரது சொந்த கட்சியான காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களே பிரச்சனை செய்தனர். 

அவர்களில் முக்கியமானவர்கள் திரு AK ஆண்டனி (கருணாகரன் பதவி விலகியபின் கேரளாவின் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டவர் பின்னாளில் UPA அரசாங்கத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சராக பதவிவகித்தவர்) மற்றோருவர் கேரளத்தின் இன்னொரு முதல்வர் திரு உம்மன் சாண்டி. ஆமாங்க ரயிலில் ஸ்லீப்பர் கோச்சில் படுத்துக்கொண்டேஎளிமையாக பயணிக்கும் மக்களின் முதல்வர்ன்னு facebook போட்டோ போடுவாங்களே அந்த முதல்வர் தான்.

நம்பி நாராயணனுக்கு நீதி கிடைக்க 25 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இந்த வழக்கை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்திய அரசியல்வாதிகள் நல்ல நல்ல பதவிகள் அனுபவித்து இன்றும் அடுத்த தேர்தலில் வெற்றிபெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் சந்தோசமாக உலவருகிறார்கள். 

மக்கள் தான் எப்படியும் இந்த திருடர்களுக்கும் ஓட்டு போடுவார்களே, அவர்களுக்கு இஸ்ரோ பற்றியா கவலை ???

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

நல்ல தமிழில் எழுதுவோம் - 1

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)