வங்கிகள் இணைப்பு அறிவிப்பு - வங்கித்தேர்வுக்கு படிப்போர் உஷார்

தேனா வங்கி, பேங்க் ஆப் பரோடா, விஜயா பேங்க் மூன்றையும் இணைக்க அரசு முடிவு செய்துவிட்டது.

தேனா வங்கி மோசமான நிதி நெருக்கடி மற்றும் வாரக்கடன் பிரச்னையில் உள்ளது. பேங்க் ஆப் பரோடா மற்றும் விஜயா வங்கி ஓரளவுக்கு நல்ல நிதிநிலையில் உள்ளன..

எனவே இந்த இணைப்பு சரியாகவேபடுகிறது.

ஏற்கனவே SBI வங்கியுடன் அதன் 5 துணை வங்கிகளும் இணைக்கப்பட்டது நினைவிருக்கலாம். இப்பொழுது அடுத்த 3 வங்கிகள் இணைக்கப்படுகிறது. இந்த trend தொடரத்தான் போகிறது. இன்னும் சில வங்கிகளை இணைக்கும் எண்ணமும் அரசாங்கத்துக்கு இருக்கிறது.

இந்த இணைப்புகளில் ஒரே side effect புதிய வேலைவாய்ப்புகள்..

உதாரணமாக ஒரே ஊரில் தேனா, விஜயா, பரோடா வங்கிகளுக்கு கிளைகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இணைப்புக்கு பிறகு இவைமூன்றும் ஒரே வங்கி தான். ஒரே வங்கிக்கு ஒரு ஊரில் எதற்கு மூன்று கிளைகள் ??  எனவே சில கிளைகள் மூடப்படும்

ஏற்கனவே இருக்கும் 3 வங்கி ஊழியர்களை இணைக்கப்பட்ட புதிய வங்கியில் ஏதாவது பணியில் அமர்த்தவே வங்கிகள் திண்டாடும். இதில் எங்கே புதிய ஆட்கள் எடுக்க ??

வங்கி தேர்வே லட்சியமாக கொண்டு படிப்போர் இதைப்போன்ற நாட்டு நடப்புகளையும் படிக்கிறார்கள் என்று நம்புகிறேன். அவர்களுக்கு வாய்ப்புகள் மங்கிவருகின்றன. கோச்சிங் சென்டர்காரர்கள் செய்யும் விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம்...

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

நல்ல தமிழில் எழுதுவோம் - 1

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)