கருத்தாக்கம் (opinion) மக்களிடம் எப்படி உருவாகிறது ?
ஒரு விஷத்தை பற்றி கருத்தாக்கம் (opinion) மக்களிடம் எப்படி உருவாகிறது என்று ஆராயவேண்டும் என்று ஆர்வம் எனக்கு அதிகம் உண்டு. உதாரணமாக மூன்று வித்தியாசமான நிகழ்வுகளை நான் அலச விரும்புகிறேன் : உதாரணம் #1: புலி படத்தை எடுத்துக்கொள்ளலாம். புலி படம் ப்ளாப் என்பது படம் பார்க்காத எனக்கும் இப்பொழுது மனதில் பதிந்து விட்டது. காரணம் தெரியவில்லை. எல்லாரும் சொல்றாங்க எனக்கும் அப்படியே ! உதாரணம் #2: சரி இன்னொரு சீரியஸான நிகழ்வை அலசுவோம். விஜயகாந்த் வெறும் நடிகராகவும், நடிகர் சங்க தலைவராகவும் இருந்த வரை அவரை தலையில் வைத்து கொண்டாடியது தி.மு.க வின் குடும்ப சேனலான சன் டிவி. நடிகர் சங்க கடன்களை அடைக்க வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்தும் ஐடியாவை புகழ்ந்து விஜயகாந்தை உச்சத்துக்கு எடுத்து போனதில் சன் டிவி பங்கு கனிசமானது. சரி அதே விஜயகாந்த் அரசியலுக்கு வந்துவிட்டார் . அசுர வேகமாக வளர்ந்தார். எதிர்கால முதல்வர் வேட்பாளர் பட்டியலில் இடம் பெரும் அளவுக்கு மக்கள் நம்பிக்கையை பெற்றார். ஆனால் கலைஞர், ஜெயலலிதா இருவர் மட்டுமே எப்பொழுதும் தமிழக முத...