மிச்சங்களும் எச்சங்களும் - ( தமிழ் புத்தாண்டு சிறப்பு கட்டுரை )

கொல்கத்தா வில்லியம் கோட்டை

அன்று கிழக்கிந்திய கம்பெனியின் முக்கிய கூட்டம் நடந்து கொண்டிருந்தது. கூட்டத்தின் தலைவர் மிஸ்டர் மெக்காலே இன்னும் வரவில்லை. அவருக்காக காத்திருக்காமல் கூட்டம் தொடங்கியது.

இல்லை உங்கள் கூற்றை ஒப்பு கொள்ளவே முடியாது என்றார் திரு. வில்சன்

நீங்கள் ஒப்பு கொள்ளாவிட்டால் என்ன? இது மெக்காலேயின் முடிவு என்றது எதிர் தரப்பு குரல்.

வில்சனுக்கு கோபம் தலைக்கு ஏறியது. அவரது வெள்ளை நிற மூக்கு சிவந்து அவரது கோபத்தை கூட்டத்திற்கு அப்பட்டமாக காட்டியது.

வில்சன் இந்திய மொழிகள் பலவற்றை நன்றாக கற்றவர். இந்தியர்களுக்கு கல்வி இந்திய மொழிகளில் தான் கற்று தரப்படவேண்டும் என்று உறுதியாக நம்பியவர்.

இதற்காக விரிவான ஆய்வு செய்து அவர் சமர்ப்பித்த ஆய்வு அறிக்கையை பற்றித்தான் காரசாரமான விவாதம் நடைபெற்று கொண்டிருந்தது. தனது கோபத்தால் பயன் இல்லை என்பதை உணர்ந்த வில்சன் பின்வருமாறு கூறினார் .

"உங்கள் மெக்காலே இந்தியாவிற்கு புதியவர், அவருக்கு இந்தியாவை பற்றி ஒன்றும் தெரியாது. இந்திய மக்களின் தேவை அவருக்கு தெரியாது .ஆங்கிலம் மட்டுமே போதும் என்பது அடி முட்டாள் தனம்"

digitalnative digital native
 திரு. மெக்காலே 

மெக்காலேவை பற்றி வில்சன் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே மெக்காலே உள்ளே நுழைந்தார். அதற்கு மேல் வில்சன் பேசவில்லை. சரியாக சொன்னால் யாருமே பேசவில்லை மெக்காலேவை தவிர .

இந்தியாவில் கிழக்கு இந்திய கம்பெனிக்கு குழப்பான நிலை. பல ராஜீயங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தாயிற்று. செல்வத்திற்கு பஞ்சமில்லை. வியாபாரமும் அருமை. ஆனால் தான் ஆளும் ராஜீயங்களில் கல்வி கொடுப்பதில் தான் பிரச்சனை.

எந்த மொழியில் கல்வியை போதிப்பது ? மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அவர்களது சொந்த மொழியிலா ? அல்லது ஆங்கிலத்திலா ?

இதற்கு ஆய்வு குழு ஒன்று அமைத்து அதன் அடிப்படையில் முடிவெடுக்கவே இங்கிலாந்தில் இருந்து மெக்காலே அனுப்ப பட்டார். அவர் தீவர மொழி பற்று உள்ளவர். உலகில் ஆங்கிலத்துக்கு நிகர் ஆங்கிலமே என்று ஆணித்தரமாக நம்பும் ஆசாமி.குழுவின் கூட்டத்திற்கு  மெக்காலே கொஞ்சம் தாமதமாக தான் வந்தார்.

குழுவில் உள்ளவர்கள் அனைவரும் ஆங்கிலேயர்கள். எனவே தன் ஆசைப்படி ஆங்கிலத்திலேதான்  கல்வி தரவேண்டும் என்று சொன்னால் குழுவில் உள்ள அனைவரும் ஆமாம் சாமி போடுவார்கள், வேலை சுலபம் என கனவோடு உள்ள நுழைந்தவருக்கு வில்சனின் பேச்சு காதில் விழுந்தது.

அதுவரை மெதுவாக நடந்து வந்த மெக்காலேவின்  கால்கள் வேகம் காட்டின. கூட்டத்தின் தலைவர் என்ற மிடுக்குடன் உள்ளே நுழைந்தார் மெக்காலே.

கூட்டத்தில் அமைதி ! மெக்காலே பேசினார்

" இந்தியர்களுக்கு ஆங்கிலத்தில் தான் கல்வி போதிக்கப்படும் ! " தீர்க்கமான குரலில்.

வில்சன் உடனே எழுந்து ஏதோ சொல்ல முயல அவருக்கு வாய்ப்பு வழங்காமல் கைகளால் அவரை அமரச்சொல்லி செய்கை காட்டினர் மெக்காலே.

( கூட்டத்தில் இருந்தவர் பலருக்கு ஆங்கிலத்தில் கல்வி கொடுப்பதில் உடன்பாடு இல்லை காரணம் A , B ,C , D என்றால் எந்த கடையில் விற்கிறது என்று கேட்கும் இந்திய மக்களுக்கு எப்படி ஆங்கிலத்தில் அறிவியலும், கணிதமும் கற்றுத்தர முடியும் ? என்று அவர்களுக்கு குழப்பம் )

மெக்காலே தொடர்ந்தார்  " உண்மைதான் இந்தியர்களிடம் ஆங்கிலத்தை கொண்டு சேர்ப்பதில் சிரமங்கள் இல்லாமல் இல்லை. அதற்கு என்னிடம் ஒரு திட்டம் உள்ளது "

எல்லோரும் என்ன திட்டமாக இருக்கும் என்று ஆவலோடு மெக்காலேவை பார்த்தனர் வில்சனும் கூட அதை கேட்பதில் ஆர்வமாக இருந்தார்.

திட்டம் இதுதான்

" ஆளுகிற நமக்கும் ஆளப்படுகிற லச்சக்கனக்கான மக்களுக்கும் இடையே ஒரு வகுப்பினரை உடனடியாக தயார் செய்யவேண்டும். அவர்கள் நிறத்திலும் ரத்தத்திலும் இந்தியர்களாக இருப்பார்கள். ஆனால், ரசனை, சிந்தனை, ஒழுக்கம், அறிவு ஆகியவற்றில் ஆங்கிலேயர்கள் போல் இருப்பார்கள். அந்த வகுப்பினர் நமக்கு பதிலாக ஆங்கிலத்தையும்,  ஆங்கில ஆதிக்கத்தையும் இந்தியர்களுக்கு எடுத்து செல்வார்கள்  "

கூட்டம் முடிந்தது. அவரது திட்டமும் ஏற்று கொள்ளப்பட்டு அதன்பின் ஆங்கிலம் இந்தியாவின் கல்வி மொழியாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆங்கிலேயர்கள் அன்று செயல்படுத்திய திட்டம் மகா வெற்றி பெற்றது.

தங்கள் மொழியைவிட ஆங்கிலம் தான் மேல். தன் தாய் மொழி வீட்டு சமையல் அறையில் அம்மா பசிக்குது சாப்பாடு கொடு என்பதோடு போதும் அதற்கு மேல் அந்த 5000 10000 வருஷ பழைய மொழிகளால் பயன் ஏதும் இல்லை என்று இந்தியமக்கள் எண்ண தொடங்கினர்.

ஷேக்ஸ்பியருக்கு நிகர் எவருமே இல்லை என்று இந்திய மக்கள் பலரும் அடித்து இன்றும் சொல்லுவர். ( ஆங்கிலேயர்கலுக்கு கூட மாற்று கருத்து இருக்கலாம் )

அன்று மெக்காலே கூறிய திட்டத்தின் தாக்கம் விடுதலை பெற்ற 67 வருடம் கழித்தும் குறையவில்லை.

இன்றும் அந்த திட்டத்தின் எச்சங்ககளும் மிச்சங்களும்  பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் உட்கார்ந்து கொண்டு இந்திய இளைஞனின் திறமையை மதிப்பிடாமல் உனக்கு திறமையே தேவை இல்லை ஆங்கிலம் தெரியுமா? என்று கேட்டு கொண்டும், தொழில் நுட்பங்களை விரல் நுனியில் வைத்திருந்தாலும் அதை ஆங்கிலத்தில் சொல்ல தெரியாவிட்டால்

நீ waste எதற்கும் லாயக்கில்லை ஓரமாக உட்கார் என்று இந்தியாவின் இளைஞர் சக்தியின் தன்நம்பிக்கை என்னும் வேரை பிடுங்கி நாட்டின் மனிதவள பயன்பாட்டையும் முன்னேற்றத்தையும் தடுத்து நிறுத்துகின்றனர்.

இந்தியாவை பின் நோக்கி இழுகின்றனர்...!

அய்யனாருக்கு ஆடு வெட்டுவது போன்ற மூட நம்பிக்கைகளுடன் ஆங்கிலம் தெரிந்தவன் மட்டுமே புத்திசாலி என்ற மூடநம்பிக்கையும் ஆழமாக வேர் ஊன்றி விட்டது.

படையல் போட உயிர் பலி கொடுப்பதை நாம் தொடர்ந்து செய்ய காரணம் அது தப்பு என்று நாம் உணர்வதில்லை. அது ஆங்கிலத்துக்கும் பொருந்தும்.

கருத்து  :

"ஆங்கிலத்துக்கு நான் எதிரானவன் அல்ல. எந்த மொழியையும் கற்பதில் தவறு இல்லை. ஆனால் பிழைப்புக்காக போடும் வேஷம் வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டுமா ?

இராமர் வேடம் போட்டு யாசகம் கேட்பவனும் அன்று தொழில் முடிந்து வீட்டுக்கு போனதும் வேஷத்தை கலைத்து உண்மையான தனது நிலைக்கு மாறுகிறான் ! ஆனால் பிழைப்புகாக ஆங்கிலத்தை கற்ற சிலர்தான் ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு வந்தும் வேஷத்தை கலைக்க முடியாமல் பிரிட்டிஷ் பிரஜைகளாகவே வாழ்கின்றனர் ,மற்றவரையும் வாழ தூண்டுகின்றனர் "

- விக்கி 


Comments

  1. Sabaash thambi enaku piditha varigal: aangileyaruku kooda maatru karuthu irukalaam matrum unadhu mudivurai .... sila ezhuthu matrum sor pizhaigalai... thavirkalam...

    ReplyDelete
  2. Naan ondrai ingu padhivu seiya virumbugindren... tamilye thaai mozhiyaga kondavarum alla pira mozhiye thaai mozhiyaga kondavarum.. IT companyil velai seigiravargalaga irupin thangal kulandhai 24 mani neramum aagilathil pesumpadi pazhakugindranar idhai naan pala murai gavanithirukindren... en endru ..... puriyavilai...

    ReplyDelete
  3. Hats off to u first of all for this inspirational post...the comparison f learners of english with the supersticious practices is really superb..loads f lines nd wrds i really lykd frm ur post..but inspite of mentioning specifically,இங்கு பதித்த அத்தனை வார்த்தைகளும்
    ஆழ் மனதை சோதிக்க வைத்தன ......!!!!

    ReplyDelete

Post a Comment

Post ur comments and help us to improve

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

நல்ல தமிழில் எழுதுவோம் - 1

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)