Posts

Showing posts from April, 2014

மூன்றாவது கோணம் - ஸ்டாம்ப் பேட் சொல்லும் உண்மை

Image
நான்கு வருடம் கழித்து பள்ளி செல்லும் வாய்ப்பு .

சுதந்திர இந்தியாவின் ஜனநாயக திருவிழாவில் என்னுடைய பங்களிப்பை செய்ய திருவாரூர் அரசு தொடக்க பள்ளிக்கு சென்றிருந்தேன்.

நேர்முகத் தேர்விற்கு செல்வது போல் சொல்லமுடியாத பதட்டம் என்னை தொற்றிகொண்டது. இத்தனைக்கும் திருவாரூர் வாக்குசாவடி பதட்டமான வாக்குசாவடி பட்டியலில் கூட இல்லை ஆனால் எனக்கு ஏனோ பதட்டத்தை தவிர்க்க முடியவில்லை.

கூட்டம் கொஞ்சம் இருந்தது .

எனது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் ஸ்லிப் இரண்டையும் நீட்டினேன். எனது பெயரை சரி பார்த்த பின்னர் கையெழுத்திட சொன்னார்கள். கையெழுத்து போடும் பொழுதுதான் கவனித்தேன் பக்கத்தில் இருந்த ஸ்டாம்ப் பேடை .

கையெழுத்து போடா தெரியாதவர்கள் கைநாட்டு வைப்பதற்கு

 .

சுதந்திரம் கிடைத்து 67 வருடம் முடிந்த பின்னும் எல்லா இந்தியர்களுக்கும்  கல்வியை நம்மால் வழங்க முடியவில்லை. வளர்ச்சி எல்லா தரப்பு மக்களையும் சென்றடையவில்லை என்பதன் சாட்சியாக ஸ்டாம்ப் பேட்  தெரிந்தது.

விக்கி 

மிச்சங்களும் எச்சங்களும் - ( தமிழ் புத்தாண்டு சிறப்பு கட்டுரை )

Image
கொல்கத்தா வில்லியம் கோட்டை

அன்று கிழக்கிந்திய கம்பெனியின் முக்கிய கூட்டம் நடந்து கொண்டிருந்தது. கூட்டத்தின் தலைவர் மிஸ்டர் மெக்காலே இன்னும் வரவில்லை. அவருக்காக காத்திருக்காமல் கூட்டம் தொடங்கியது.

இல்லை உங்கள் கூற்றை ஒப்பு கொள்ளவே முடியாது என்றார் திரு. வில்சன்

நீங்கள் ஒப்பு கொள்ளாவிட்டால் என்ன? இது மெக்காலேயின் முடிவு என்றது எதிர் தரப்பு குரல்.

வில்சனுக்கு கோபம் தலைக்கு ஏறியது. அவரது வெள்ளை நிற மூக்கு சிவந்து அவரது கோபத்தை கூட்டத்திற்கு அப்பட்டமாக காட்டியது.

வில்சன் இந்திய மொழிகள் பலவற்றை நன்றாக கற்றவர். இந்தியர்களுக்கு கல்வி இந்திய மொழிகளில் தான் கற்று தரப்படவேண்டும் என்று உறுதியாக நம்பியவர்.

இதற்காக விரிவான ஆய்வு செய்து அவர் சமர்ப்பித்த ஆய்வு அறிக்கையை பற்றித்தான் காரசாரமான விவாதம் நடைபெற்று கொண்டிருந்தது. தனது கோபத்தால் பயன் இல்லை என்பதை உணர்ந்த வில்சன் பின்வருமாறு கூறினார் .

"உங்கள் மெக்காலே இந்தியாவிற்கு புதியவர், அவருக்கு இந்தியாவை பற்றி ஒன்றும் தெரியாது. இந்திய மக்களின் தேவை அவருக்கு தெரியாது .ஆங்கிலம் மட்டுமே போதும் என்பது அடி முட்டாள் தனம்"


மெக்காலேவை பற்றி வில்சன…

வரலாற்றின் பக்கங்கள் - யூஸ் & த்ரொ ( Use & Throw )

Image
இந்த பதிவின் முந்தைய தொடர்ச்சியை படிக்க
இங்கே கிளிக் செய்யவும் வரலாற்றின் பக்கங்கள் - ஒரு கடிதம்

ஜனவரி 10, 1615

ஆக்ராவில் அப்பொழுது குளிர் காலம்

யமுனை நதி கரையில் பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. அவைகளுக்கு தெரியாது தாங்கள் ஆனந்தமாக இப்பொழுது சுற்றி கொண்டிருக்கும் இந்த இடத்தில் சில ஆண்டுகளில் உலக அதிசயம் ஒன்று கட்டப்படப்போகிறது என்று .

ஆம் இந்த கதை நடக்கும் பொழுது ஷாஜகானின் தந்தை ஜஹாங்கீர் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்தார். அவரை பார்க்க இங்கிலாந்து அரசர் ஜேம்ஸின் நன்றி கடிதத்துடன் பெரிய மீசை கொண்ட தூதர்  தாமஸ் ரோ வந்திருந்தார்.

அரசவையில் அரியணைக்கு கீழே பிரபுக்களும் அதிகாரிகளும் அரசரை நெருங்க கூட முடியாத அளவுக்கு நிரம்பி இருந்தனர்.

தாமஸ் ரோ அரியணையில் வீற்றிருந்த மகாராஜாவுக்கு பலமுறை வணக்கம் செலுத்தினார். உங்கள் மரியாதை ஏற்று கொள்ளப்பட்டது என்பது போல் அரசர் கை அசைத்தார்.

தாமஸ் தனக்கு அமர ஒரு நாற்காலி போடப்படும் என்று எண்ணினார். பின்புதான் அரசருக்கு முன் யாரும் அமர கூடாது என்பது அவருக்கு புரிந்தது. நின்றுகொண்டேதான்  பேசினார் தாமஸ் ரோ. அவருக்கு அதை தவிர வேறு வழியும் இருக்கவில்லை.

இங்கிலாந்…

வரலாற்றின் பக்கங்கள் - ஒரு கடிதம்

Image
அது ஒரு குளிர் காலம்

இங்கிலாந்தின் அரசர் முதலாம் ஜேம்ஸ் தன் அரசவை கவிஞரின் வரவை எதிர்பார்த்து கோட்டையில் அங்குமிங்கும் உலாவி கொண்டிருந்தார்.

அரசவை கவிஞருக்கு ஆங்கிலத்தில் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தும் அத்துப்படி. அத்தனை காலையில் அரசர் அழைப்பு என்றதும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்துடன் கிளம்பினார் கவிஞர்.

ஏதோ முக்கிய வேலை உனக்கு காத்திருக்கிறது என்றது அவரது மனம். அவசர அவசரமாக தனது குதிரை பொருத்திய வண்டியை கிளப்பினார்.

குதிரைக்கு அரசரையும் தெரியாமல் அவரசமும் புரியாமல் மெல்ல நகரவே சுளீர் ! என்று ஒரு அடிவைத்தார் அந்த நீல கோட் போட்ட ஆங்கில கவிஞர்.

அரசர் குறுக்கும் நெடுக்கும் நடத்து கொண்டிருந்தார்.

உலகின் பாதியை ஆளும் இங்கிலாந்தின் மாண்புமிகு அரசருக்கு எனது வணக்கங்கள் என்ற குரல் கேட்ட திசையை நோக்கினர் அரசர் .

கண்டிப்பாக இவரால் இந்த பணியை சிறப்பாக செய்யமுடியும் என்றது அரசர் மனம். குரலை சரி செய்து கொண்டு அரசர் தொடர்ந்தார்.

வாருங்கள் கவிஞரே !
உங்களுக்கு ஒரு வேலை வைத்திருக்கிறேன். அதிமுக்கியமான வேலை. உங்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து இந்த வேலையே உங்களிடம் ஒப்படைக்கிறேன் .எனக்கு நீங்கள் ஒரு கட…