Posts

Showing posts with the label புதியதலைமுறை

ஆன்லைன் வர்த்தகமும், இந்திய பொருளாதாரமும்

(இந்த கட்டுரை புதியதலைமுறை தமிழ் வார இதழின் 24 அக்டோபர் பதிப்பில் வெளிவந்தது..) இந்திய பொருளாதாரம் தேக்கநிலையை என்றொரு செய்தி ! பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களின் பண்டிகைக்கால தள்ளுபடி விற்பனையில் ஆறே நாட்களில் சுமார் ₹ 19,000 கோடிக்கு வர்த்தகம் என்றொரு செய்தி ! இவை இரண்டையும் எப்படி பொருத்தி பார்ப்பது என்பதே பலரின் கேள்வி இரண்டு முக்கிய புரிதல்களுடன் இந்த செய்தியை அணுகவேண்டும் என்று நான் நினைக்கிறன். முதலாவது பிளிப்கார்ட், அமேசான் இரண்டு நிறுவனங்களுமே தங்களின் விற்பனையின் அளவை எக்காலத்திலும் வெளிப்படையாக அறிவிப்பதில்லை. ₹ 19,000 கோடி வரை விற்பனை என்பது யாரோ மூன்றாம் நபர் வெளியிட்டுள்ள கணிப்பு அல்லது அலசல் என்பதை நாம் கவனிக்கவேண்டும். உண்மையான விற்பனை இதைவிட அதிகமாகவோ அல்லது மிகக்குறைவாகவோ கூட இருக்க வாய்ப்புண்டு. இரண்டாவது இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்து (slowdown) காணப்படுகிறது. ஆனால் அது 2008 ஆம் ஆண்டு நாம் சந்தித்ததை போன்ற மந்தநிலையாக (recession) மாறிவிடவில்லை .   உலகவங்கி சமீபத்தில் வெ...

சமூக ஊடகங்களில் தேவை கவனம்

Image
இந்த கட்டுரையின் ஒரு பகுதி புதியதலைமுறை வார இதழின் 7 மார்ச் 2019 பதிப்பில் வெளிவந்தது.. என்னதான் 60+ வருடங்களாக ஜனநாயக நாடாக இருந்தாலும், ஓட்டு பெட்டியை தாண்டி சாதாரண மக்களுக்கு தங்கள் குரலை பதிவு செய்ய ஒருவாய்ப்பு சமீப ஆண்டுகளாகத்தான் கிடைத்துள்ளது. அதற்கு சமூக ஊடகங்களுக்கு தான் நாம் நன்றி சொல்லவேண்டும். வெறும்  பொழுது போக்கு இடமாக  மட்டுமே  துவங்கப்பட்ட சமூ க ஊடகங்கள் இன்று ஆட்சி மாற்றத்தை கூட கொண்டுவரும் சக்திகளாக மாறிப்போயுள்ளன.  விஞ்ஞானம், சமையல், விவசாயம், முதலீட்டு ஆலோசனைகள், கேன்சருக்கான மருந்து (ஆமாங்க நம்புங்க), அரசியல், ஆபாசம் என எண்ணற்ற தலைப்புகளில் சமூக ஊடகங்களில் செய்திகள்  பரப்பப்படுகின்றன.  இப்படி குறுகிய காலத்தில் விஸ்வரூப வளர்ச்சி கண்ட சமூக ஊடகங்களுடன் சில தீய செயல்களும் சேர்த்தே வளர்ந்துள்ளன.  மத, இன, மொழி சார்த்த உணர்ச்சிகளை தூண்டும் வன்முறையான பல பதிவுகள் கூட சர்வசாதாரணமாக சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன.  காரணம் சமூக ஊடகங்களுக்கு சென்சார் கிடையாது. மனம்போன போக்கில் யாரும் யாரைப்பற்றியும் என்ன...