வரலாற்றின் பக்கங்கள் - யூஸ் & த்ரொ ( Use & Throw )
இந்த பதிவின் முந்தைய தொடர்ச்சியை படிக்க
இங்கே கிளிக் செய்யவும் வரலாற்றின் பக்கங்கள் - ஒரு கடிதம்
ஜனவரி 10, 1615
ஆக்ராவில் அப்பொழுது குளிர் காலம்
யமுனை நதி கரையில் பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. அவைகளுக்கு தெரியாது தாங்கள் ஆனந்தமாக இப்பொழுது சுற்றி கொண்டிருக்கும் இந்த இடத்தில் சில ஆண்டுகளில் உலக அதிசயம் ஒன்று கட்டப்படப்போகிறது என்று .
ஆம் இந்த கதை நடக்கும் பொழுது ஷாஜகானின் தந்தை ஜஹாங்கீர் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்தார். அவரை பார்க்க இங்கிலாந்து அரசர் ஜேம்ஸின் நன்றி கடிதத்துடன் பெரிய மீசை கொண்ட தூதர் தாமஸ் ரோ வந்திருந்தார்.
அரசவையில் அரியணைக்கு கீழே பிரபுக்களும் அதிகாரிகளும் அரசரை நெருங்க கூட முடியாத அளவுக்கு நிரம்பி இருந்தனர்.
தாமஸ் ரோ அரியணையில் வீற்றிருந்த மகாராஜாவுக்கு பலமுறை வணக்கம் செலுத்தினார். உங்கள் மரியாதை ஏற்று கொள்ளப்பட்டது என்பது போல் அரசர் கை அசைத்தார்.
தாமஸ் தனக்கு அமர ஒரு நாற்காலி போடப்படும் என்று எண்ணினார். பின்புதான் அரசருக்கு முன் யாரும் அமர கூடாது என்பது அவருக்கு புரிந்தது. நின்றுகொண்டேதான் பேசினார் தாமஸ் ரோ. அவருக்கு அதை தவிர வேறு வழியும் இருக்கவில்லை.
இங்கிலாந்தில் இருந்து தான் கொண்டு வந்த கடிதத்தையும், பரிசு பொருட்களையும் அரசருக்கு கொடுத்தார் தாமஸ் ரோ.
அந்த பொருள்களின் மீதான அரசரின் பார்வையில் அலட்சியம் வெளிப்படையாக தெரிந்தது. அரசர் தனது செல்வ வளத்தை இந்த பெரிய மீசைகாருக்கு காட்ட எண்ணினார் போலும். மாலை நடக்கும் விருந்துக்கு வரும் படி தாமஸ் ரோவிற்கு அழைப்பு விடுத்தார் அரசர் .
மாலை விருந்துக்கு வந்த பெரிய மீசைகாரரிடம் அரசர் காட்டிய சில பொருட்களை பார்த்து வியந்து தாமஸ் ரோ தனது டைரியில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
"இந்திய கலைஞர்களின் திறமை மற்றும் நிபுணத்துவத்தை கண்டு அதிசயக்கிறேன். அரசர் காட்டிய சில பொருட்களைகண்டபொழுது இவ்வுளவு திறமையான புத்திசாலியான கலைஞர் கூட இருக்கமுடியும் என்று நினைத்ததே இல்லை ".
விருந்தில் மது பரிமாறப்படாது. தாமஸ் ரோவிற்கு மயக்கமே வந்தது காரணம் மது அல்ல, மது பரிமாறப்பட்ட கோப்பை.
விலை மதிப்பு மிக்க நீல, கெம்பு மரகத கற்கள் பதிக்கப்பட்ட தங்க கோப்பையில் தாமஸ் ரோவிற்கு மது பரிமாறப்பட்டது. சிறிது நேரம் கோப்பையே பார்த்துகொண்டு இருந்த தாமஸ் ரோவிற்கு பேச்சே வரவில்லை.
அரசர் தான் இங்கிலாந்தில் இருந்து கொண்டு வந்த பரிசு பொருள்களை ஏன் அலட்சியமாக பார்த்தார் என்பது அவருக்கு புரிந்தது. மதுவை அருந்திவிட்டு காலி கோப்பையை வைக்கப்போன தாமஸ் ரோவை அழைத்த மன்னர் அந்த தங்க கோப்பையை நீங்களே வைத்து கொள்ளுங்கள் என்றார் அலட்சியமாக !
தங்க கோப்பையே யூஸ் & த்ரொ ( Use & Throw ) கப் போன்று பயன்படுத்தும் அளவுக்கு இந்திய அரசர்களிடம் செல்வம் இருந்தது .
இந்தியாவில் வாணிபம் செய்து லாபம் பார்போம் என்று எண்ணிய ஆங்கிலேயருக்கு இந்தியாவை நிரந்தரமாக ஆளவேண்டும் என்ற எண்ணத்தை விதைத்த நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.
இந்த பதிவின் முந்தைய தொடர்ச்சியை படிக்க
இங்கே கிளிக் செய்வவும் வரலாற்றின் பக்கங்கள் - ஒரு கடிதம்
இங்கே கிளிக் செய்யவும் வரலாற்றின் பக்கங்கள் - ஒரு கடிதம்
ஜனவரி 10, 1615
ஆக்ராவில் அப்பொழுது குளிர் காலம்
ஆம் இந்த கதை நடக்கும் பொழுது ஷாஜகானின் தந்தை ஜஹாங்கீர் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்தார். அவரை பார்க்க இங்கிலாந்து அரசர் ஜேம்ஸின் நன்றி கடிதத்துடன் பெரிய மீசை கொண்ட தூதர் தாமஸ் ரோ வந்திருந்தார்.
அரசவையில் அரியணைக்கு கீழே பிரபுக்களும் அதிகாரிகளும் அரசரை நெருங்க கூட முடியாத அளவுக்கு நிரம்பி இருந்தனர்.
தாமஸ் ரோ அரியணையில் வீற்றிருந்த மகாராஜாவுக்கு பலமுறை வணக்கம் செலுத்தினார். உங்கள் மரியாதை ஏற்று கொள்ளப்பட்டது என்பது போல் அரசர் கை அசைத்தார்.
தாமஸ் ரோ (பெரிய மீசைக்காரர்) |
இங்கிலாந்தில் இருந்து தான் கொண்டு வந்த கடிதத்தையும், பரிசு பொருட்களையும் அரசருக்கு கொடுத்தார் தாமஸ் ரோ.
அந்த பொருள்களின் மீதான அரசரின் பார்வையில் அலட்சியம் வெளிப்படையாக தெரிந்தது. அரசர் தனது செல்வ வளத்தை இந்த பெரிய மீசைகாருக்கு காட்ட எண்ணினார் போலும். மாலை நடக்கும் விருந்துக்கு வரும் படி தாமஸ் ரோவிற்கு அழைப்பு விடுத்தார் அரசர் .
மாலை விருந்துக்கு வந்த பெரிய மீசைகாரரிடம் அரசர் காட்டிய சில பொருட்களை பார்த்து வியந்து தாமஸ் ரோ தனது டைரியில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
"இந்திய கலைஞர்களின் திறமை மற்றும் நிபுணத்துவத்தை கண்டு அதிசயக்கிறேன். அரசர் காட்டிய சில பொருட்களைகண்டபொழுது இவ்வுளவு திறமையான புத்திசாலியான கலைஞர் கூட இருக்கமுடியும் என்று நினைத்ததே இல்லை ".
விருந்தில் மது பரிமாறப்படாது. தாமஸ் ரோவிற்கு மயக்கமே வந்தது காரணம் மது அல்ல, மது பரிமாறப்பட்ட கோப்பை.
விலை மதிப்பு மிக்க நீல, கெம்பு மரகத கற்கள் பதிக்கப்பட்ட தங்க கோப்பையில் தாமஸ் ரோவிற்கு மது பரிமாறப்பட்டது. சிறிது நேரம் கோப்பையே பார்த்துகொண்டு இருந்த தாமஸ் ரோவிற்கு பேச்சே வரவில்லை.
அரசர் தான் இங்கிலாந்தில் இருந்து கொண்டு வந்த பரிசு பொருள்களை ஏன் அலட்சியமாக பார்த்தார் என்பது அவருக்கு புரிந்தது. மதுவை அருந்திவிட்டு காலி கோப்பையை வைக்கப்போன தாமஸ் ரோவை அழைத்த மன்னர் அந்த தங்க கோப்பையை நீங்களே வைத்து கொள்ளுங்கள் என்றார் அலட்சியமாக !
தங்க கோப்பையே யூஸ் & த்ரொ ( Use & Throw ) கப் போன்று பயன்படுத்தும் அளவுக்கு இந்திய அரசர்களிடம் செல்வம் இருந்தது .
இந்தியாவில் வாணிபம் செய்து லாபம் பார்போம் என்று எண்ணிய ஆங்கிலேயருக்கு இந்தியாவை நிரந்தரமாக ஆளவேண்டும் என்ற எண்ணத்தை விதைத்த நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.
இந்த பதிவின் முந்தைய தொடர்ச்சியை படிக்க
இங்கே கிளிக் செய்வவும் வரலாற்றின் பக்கங்கள் - ஒரு கடிதம்
Arumai. Vicky. .!
ReplyDeleteIndia'vin selva valathai kandu thigaikiren !
விக்னேஷ்! அருமையான பதிவு! :) இந்த செய்தியை கேள்விப்பட்டதே இல்லை! நல்ல தகவல்! அருமையான எழுத்து நடை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteSuperb anna...really admired...good flow of writing..before your post I don't know about this..How we lost all those things...
ReplyDeleteIndia always great anna.. and also your writings..
ReplyDeletesuper vicky.... Such a nice history u have said... Such a rich country is India bt how v lost those things...
ReplyDeleteafter reading the both...speechless ..lookback our countries greatness thz gives pride for us...
ReplyDelete