Posts

Showing posts with the label தமிழகம்

அமைதி தந்த பரிசு !

Image
காவேரி பிரச்சனை காரணமாக கர்நாடகத்தில் கலவரம் நடந்த பொழுது தமிழகத்தில் பெரிய அளவிலான வன்முறை ஏதும் நடைபெறவில்லை. தமிழக வாழ்வுரிமை கட்சி போன்ற லெட்டர் பேடு கட்சிகள் சில இடங்களில் வன்முறையில் ஈடுபட்டு தமிழகத்தின் பெயரை கெடுத்தன. ஆனால் தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான தி மு க மற்றும் அ தி மு க இரண்டும் பொறுப்புள்ள கட்சிகளாக செயல்பட்டு தமிழகத்தில் பெரிய வன்முறை சம்பவங்கள் செயல்படாமல் பார்த்துக்கொண்டன. அன்று அரசியல் வியாபாரிகள் ஏற்படுத்திய வன்முறை ஆட்டத்துக்கு தமிழகம் துணை போகாததன் விளைவு இன்று தமிழகத்துக்கு சாதகமாக மாறியுள்ளது. இது பற்றி இன்று தமிழ் ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரையில் இருந்து சில மேற்கோள்கள் கீழே. ஏற்கெனவே வேறு சில நெருக்கடிகளால் தேக்கமடைந்திருந்த பெங்களூரு ஐடி நிறுவனங்களுக்கு சமீபத்திய கலவரம் அவற்றின் வளர்ச்சிக்கு பெரும் சவாலாக இருக்கும். இதனால், பெரும் முதலீட்டில் இயங்கி வரும் ஐடி நிறுவனங்கள் சில பெங்களூருவை காலி செய்துவிட்டு, அமைதி தவழும் தமிழகத்திற்கு தங்களது நிறுவனத்தை மாற்றிவிடலாமா என்று யோசித்து வருகின்றன. கலவர நேரத்தில் கர்நாடகாவில...

தீபாவளி கசக்கிறது !

Image
இன்று தீபாவளி என்று சன் டிவி சிறப்பு நிகழ்ச்சி பார்த்தால்தான் தெரியும் போல !  ஊரு அவளோ அமைதியா இருக்கு ! விவசாயம் பொய்தது, மழையை காணும், பேண்ட் சட்டை எடுக்க குறைந்தது 1500 ரூபாய் வேண்டும், வெடி, இனிப்புகளின் விலை 200 ஐ கடந்து விட்டது.. எவர் வீட்டு போர் குழாயிலும் தண்ணீர் இல்லை... அரசாங்கம் 5000 செலவில் மழைநீர் சேமிப்பு தொட்டி கட்ட சொன்னபொழுது 4 செங்களை நட்டு வைத்து அரசாங்கத்தை ஏமாற்றிய நாம் இன்று 40000 முதல் 100000 வரை செலவு செய்து போர் குழாய் ஆழத்தை அதிகப்படுத்துகிறோம்.. வறட்சி அதன் கோரா முகத்தை காட்ட தொடங்கி விட்டது.. இதுதான் திருவாரூரின் இன்றைய நிலை... குடிநீர் லாரிகளை இதுவரை பார்க்காத திருவாரூர் மக்கள் வெகு விரைவில் குடிநீர் லாரிக்கு பின்னால் ஓடப்போகிறார்கள்.. விழித்துக்கொண்டோர் பிழைத்து கொண்டார்.. திருவாரூர் மக்களே நாம் எப்போது விழிக்கப் போகிறோம்.. ? செலவோடு செலவாக மழைநீர் சேமிப்பு தொட்டி கட்டுவீர் ! வரும் டிசம்பர் மாத மழை உங்களை போர் குழாய் ஆழப் படுத்தும் செலவில் இருந்து காக்கட்டும்... பெற்றோரிடம் எதை எதையோ அடம் பிடித்து வாங்கும் நாம் மழை நீர் சேம...

கர்நாடக இசையின் பிறப்பிடம் திருவாரூர் - திருவாரூர் நீங்கள் அறிய வேண்டிய தகவல்கள் 3

Image
இந்தியாவில் சங்கீதம் என்றால் இரண்டை முக்கியமாக குறிப்பிடுவர். ஒன்று ஹிந்துஸ்தானி சங்கீதம் மற்றொன்று கர்நாடக சங்கீதம். இதில் கர்நாடக சங்கீதம் தென் இந்தியாவை மையமாக கொண்டதாகும். சரி கர்நாடக சங்கீதத்துக்கும் சோழ நாட்டில் உள்ள திருவாரூருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா ? கர்நாடக சங்கீதத்திற்கு மிகப்பெரிய பங்களிப்புகளை அளித்த  மூன்று இசை மேதைகள்  தியாகராசர் ,  சியாமா சாஸ்திரிகள் ,  முத்துச்சாமி தீட்சிதர் . இவர்களை கர்நாடக இசை மும்மூர்த்திகள் என்று அழைப்பர். இவர்கள் மூவருக்கும் ஒரு அதிசயக்கதக்க ஒற்றுமை உண்டு.  மூவருமே பிறந்தது திருவாரூரில் தான் . மூவர் பிறந்த வீடுகளும் திருவாரூரில் இன்றும் அவர்களின் நினைவாக போற்றி பாதுகாக்கப்படுகின்றன கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள்  பல கர்நாடக இசை மேதைகளும், சுற்றுலா பயணிகளும் இந்த இடங்களை பார்த்து செல்கின்றனர். மூன்று இடங்களுமே திருவாரூர் கோவிலில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் தான் அமைந்துள்ளது. தியாகராஜா சுவாமிகள் வீடு - புது தெரு, திருவாரூர் ஷ்யாமா சாஸ்திரிகள் நினைவு வ...

தமிழகம் மிதக்கிறது !

Image
தமிழகம் மிதக்கிறது ! அரசியல்வாதிகள் ரியல் எஸ்டேட் முதலாளிகள் மற்றும் தொழிலதிபர்களின் பேராசைக்கு நீர் நிலைகளும் வடிகால்களும் இரையாகி, வெள்ள நீர் போக்கு தெரியாமல் நம் வீட்டுக்குள் வந்து நிற்கிறது. நவம்பர் மாதம் தமிழ்நாடு வெள்ளக்காடு ஆனால் மார்ச்சில் குடிக்க தண்ணீர் இல்லை என குடங்களுடன் வீதியில் இறங்கவேண்டியுள்ளது. நமது ஆட்சியாளர்களும் திறமையற்றவர்கள் அல்ல அவர்கள் திறமைக்கு ஒரு சின்ன உதாரணம் டாஸ்மாக் போராட்டம் தீவிரமாக நடத்து வந்தபொழுது மூன்று நாள் பழைய செய்தியான இளங்கோவன் ஜெயலலிதா பற்றி பேசிய அவதூறு பேச்சுக்கு போராட்டம் அறிவித்து டாஸ்மாக் போராட்டத்தையே திசை திருப்பிய திறமையான ஆட்சியாளர்கள் கொண்ட மாநிலம் நமது. எதிர்கட்சிகளும் ஒன்றும் ஒழுக்க சீலர்கள் அல்ல அவர்கள் தலையில் 2G கத்தி இன்னும் தொங்கிக்கொண்டு தான் இருக்கிறது அவர்கள் மாவட்ட செயலாளர்களும் ஆட்டம் போட வாய்ப்பை எதிர்பார்த்து தயாராகத்தான் உள்ளார்கள். மழைவந்தால் ஒரு சாப்பாடு பொட்டலத்தோடு கேமராமேனையும் கூட்டி வந்து நம்மை சந்திப்பார்கள் . ஆனால் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு எல்லாம் நமது கட்சிகளிடம்...

திருவாரூரில் பிரெஞ்சு படையெடுப்பு - திருவாரூர் நீங்கள் அறியாத தகவல்கள் 2

Image
திருவாரூர் பற்றி நமது தளத்தில் ஏற்கனவே வெளிவந்து 3000 வாசகர்கள் மேல் படித்து மகிழ்ந்த  திருவாரூர் நீங்கள் அறியாத தகவல்கள் என்ற கட்டுரையின் அடுத்த பாகமே திருவாரூரில் பிரெஞ்சு படையெடுப்பு என்ற இந்த கட்டுரை. 18 ஆம் நூற்றாண்டு  நாம் 10 ஆம் வகுப்பில் மனப்பாடம் செய்து பாஸான கர்நாடக போர் நடந்து கொண்டிருந்த காலம் அது. ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சுகாரர்கள் இந்தியாவில் தங்கள் இருப்பை நிலைநாட்ட மோதிக்கொண்டனர். பிரிட்டிஷ் கம்பெனி நிர்வாகத்தின் கீழ் மெட்ராஸ், கடலூர் மற்றும் திருச்சி என மூன்று முக்கிய நகரங்கள் இருந்தன. அவற்றை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று பிரெஞ்சு படை திரட்டியது.  பிரெஞ்சு படைக்கு  தலைமை ஏற்ற தளபதி லாலே பிரிட்டிஷ் வசம் இருந்த கடலூர் கோட்டையை அசால்ட்டாக கைப்பற்றினார். லாலேவிற்கு அடுத்து இரண்டு வாய்ப்புகள் இருந்தன ஒன்று  வடக்கு திசையில் உள்ள மெட்ராஸ் நகரை நோக்கி படையெடுப்பது மற்றொன்று தெற்கு பக்கம் உள்ள திருச்சிநோபோலி (இன்றைய திருச்சி நகரம்) நோக்கி படையெடுப்பது.    பூவா தல...

அப்துல் கலாமுக்கு என்ன வேலையோ ?

Image
தமிழக மக்களை குறிப்பாக இளைஞர்களை மீளா துயரத்தில் ஆழ்த்தியது அப்துல் கலாம் மறைவு ! அப்துல் கலாம் சொன்ன வழியில் நடந்து நாட்டைத்தான் உருப்புட செய்யப்போவதில்லை அட்லீஸ்ட் Whatsapp குரூப்களுக்கு அவரது படத்தையும் பெயரையும்வைப்போம் என நாங்கள் மனதை ஆறுதல் படுத்திக்கொண்டோம். இனி வருடாவருடம் ஜூலை கடைசியில் Facebook, Whatsapp குரூப்களில் தவறாமல் கலாம் புகைப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்துவோம்  அவ்வளவுதான் தமிழக இளைஞர்கள் சக்தி. புலி படமோ தல 56 வது படமோ வெளிவந்தால் அப்துல் கலாமுக்கு Facebook,Whatapp ல் என்ன வேலையோ ? #RIPAbdulKalamQuotes #RIPAbdulKalamDreams - விக்கி