சூடு கண்ட பூனை

அரசாங்கம், பாராளமன்றம், நீதிமன்றம், மீடியா ஆகியவையே ஜனநாயகத்தின் 4 தூண்கள். ஆனால் அந்த நான்கு தூண்களை தாங்கி நிற்கும் அடித்தளம்  ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை.

democracy

"செய்வது எல்லாம் ஊழல், ஊழலை தவிர வேறொன்றும் இல்லை" என்று சத்திய பிரமாணம் எடுத்த அரசாங்கம் , கூச்சல் சத்தத்தை தவிர வேறு எந்த மக்கள் பிரச்சனைக்கும் குரல் வராத பாராளமன்றம் , வாய்தா கொடுத்தே வருடங்களை ஓட்டும் நீதிமன்றம்.தலைவர்களுக்கும் , நடிகைகளுக்கும் தும்மல் வந்தாலே தலைப்பு செய்தி ஆக்கும் மீடியா

இந்த நான்கு பேர்மீதுமே நம்பிக்கை தகர்ந்து விரக்தியில் இருந்த மக்களுக்கு அண்ணா ஹசாரேவின் வரவு மீண்டும் ஒரு நம்பிகையை கொடுத்தது. முன்பின் தெரியாத ஒருவரை நம்பி மக்கள் அவர் பின்னால் கூடியபோதே ஜனநாயகத்தின் தூண்கள் மீதான அவர்களின் வெறுப்பு வெளிப்பட்டது.

அதை மிகச் சரியாக அறுவடை செய்தவர் அரவிந்த் கெஜர்வால் . மக்களின் வெறுப்பு அலையில் நீந்தி டெல்லி கோட்டையை பிடித்தார் கெஜர்வால்.

மக்களுக்கு நம்பிக்கை பிறந்தது இவர் நம்மை காக்கவந்த இரட்சகர் என்று.

ஆனால் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக இவர் டெல்லி வீதியில் நடத்தும் கூத்துக்களால் டெல்லி மக்களே இவரை வெறுக்க தொடங்கி இருப்பார்கள்.தற்போதைய நிலையில்  "ச்சீ ச்சீ இந்த பழமும் புளிக்கும் என்ற கதைதான் " ஆம் ஆத்மியின் கதை.

ருசியாக இருக்கும் என்று நம்பி சூடான பாலை குடித்த பூனை அடுத்தமுறை நீங்கள் 4.5 % ஆரோக்கிய பால் கொடுத்தாலும் உசேன் போல்டை தாண்டி ஓட்டமாக ஓடும்.

இதுதான் இந்திய வாக்காளர்களின் நிலை. விரக்தியின் உச்சத்தில் இருந்த அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டிய ஆம் ஆத்மி யின் தற்போதைய செயல்களால் இனி ஒரு காந்தியே வந்தாலும் அவரை யாரும் நம்ப மாட்டார்கள்.

சூடு கண்ட பூனையாக இந்திய வாக்காளர்கள் சீர்திருத்தவாதி என்றால் ஓட்டம் எடுப்பார்கள் !!!! உசேன் போல்ட்ன் உலக சாதனை இந்திய வாக்காளர்களால் தகர்க்கபடும் நாள் வெகு தொலைவில் இல்லை !!!



Comments

  1. Nyc wordings..the impact of people is clearly expressed in your way...

    ReplyDelete
  2. Solvethellam Unmai !! but i m rusi kanda punai...expecting more stories :) frm uuuu....

    ReplyDelete

Post a Comment

Post ur comments and help us to improve

Popular posts from this blog

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Download Tamil books free in PDF format - Project Madurai

சங்கதாரா புத்தக விமர்சனம்

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)