ஏன் வெற்றி பெறுகிறது பிஜேபி ?
ஹிந்துத்துவா கொள்கை மோசமானது, நாட்டை துண்டாடிவிடும், கலவரம் வரும், அதை வைத்துதான் மோடி ஒவ்வொரு மாநிலத்திலும் நுழைகிறார் என்று பல இடதுசாரிகள், பெரியாரியம் பேசுபவர்கள் பதிவிடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம் மேற்குவங்கத்தின் கதையை எடுத்து கொள்வோமே பிஜேபி இந்த முறை மேற்கு வங்கத்தில் கனிசமான தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிகிறது. பிஜேபி வெற்றி பெற்றதும் நமது லிபரல் போராளிகள் வழக்கம்போல் பாருங்க மோடி ஹிந்து முஸ்லீம் கலவரத்தை தூண்டி மேற்குவங்கத்தில் வெற்றி பெற்றுவிட்டார் என பதிவிடுவார்கள் ஆனால் அவர்கள் மம்தாவின் கடந்த கால செயல்பாடு தான் மோடிக்கு மேற்குவங்கத்தில் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது என்பதை ஒப்புக்கொள்ள அல்லது ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அது தான் அவர்களின் தோல்வியின் ஆரம்ப புள்ளி... பங்களாதேஷில் இருந்து சட்டத்துக்கு புறம்பான வகையில் இடம்பெயர்ந்து வரும் முஸ்லீம் மக்களுக்கு மம்தா பானர்ஜி அதீத சலுகை காட்டுதல், இடம்பெயர்ந்த மக்களுக்கு உடனடி ரேஷன் கார்டு, பிற அரசு சலுகை வழங்கப்படுவதல், அவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வைத்தால் என மம்தா முஸ்லீம்கள் வாக்குவங்கியை கவர பல...