ஏன் வெற்றி பெறுகிறது பிஜேபி ?

ஹிந்துத்துவா கொள்கை மோசமானது, நாட்டை துண்டாடிவிடும், கலவரம் வரும், அதை வைத்துதான் மோடி ஒவ்வொரு மாநிலத்திலும் நுழைகிறார் என்று பல இடதுசாரிகள், பெரியாரியம் பேசுபவர்கள் பதிவிடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம்

மேற்குவங்கத்தின் கதையை எடுத்து கொள்வோமே

பிஜேபி இந்த முறை மேற்கு வங்கத்தில் கனிசமான தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிகிறது. பிஜேபி வெற்றி பெற்றதும் நமது லிபரல் போராளிகள் வழக்கம்போல் பாருங்க மோடி ஹிந்து முஸ்லீம் கலவரத்தை தூண்டி மேற்குவங்கத்தில் வெற்றி பெற்றுவிட்டார் என பதிவிடுவார்கள்

ஆனால் அவர்கள் மம்தாவின் கடந்த கால செயல்பாடு தான் மோடிக்கு மேற்குவங்கத்தில் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது என்பதை ஒப்புக்கொள்ள அல்லது ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அது தான் அவர்களின் தோல்வியின் ஆரம்ப புள்ளி...

பங்களாதேஷில் இருந்து சட்டத்துக்கு புறம்பான வகையில் இடம்பெயர்ந்து வரும் முஸ்லீம் மக்களுக்கு மம்தா பானர்ஜி அதீத சலுகை காட்டுதல், இடம்பெயர்ந்த மக்களுக்கு உடனடி ரேஷன் கார்டு, பிற அரசு சலுகை வழங்கப்படுவதல், அவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வைத்தால் என மம்தா முஸ்லீம்கள் வாக்குவங்கியை கவர பல நடவடிக்கைகளை எடுத்தார்
மம்தா பானர்ஜீ அல்ல "மம்தா பேகம்" என என்னுடன் பணியாற்றிய மேற்குவங்க நண்பர் கிண்டலாக இதைப்பற்றி பேசும்பொழுது குறிப்பிட்டார்

இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் 2016 ஆம் ஆண்டு கொல்கத்தாவின் பாரம்பரிய விழாவான துர்கா பூஜா கொண்டாட்டங்கள் மாலை நான்கு மணிக்கு நடத்தக்கூடாது என உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் மம்தா ஒரு குறிப்பிட்ட சமூகத்தை கவர இதுபோன்ற உத்தரவை பிறப்பித்துள்ளார் என சாடியது

இப்படி குறிப்பிட்ட சமூகத்துக்கு சலுகை காட்டி ஓட்டு வங்கி அரசியலை மம்தா வளர்த்துவிட்டுள்ளார். ஆனால் மம்தா செய்யும் மதவாத ஓட்டு வங்கி அரசியலை எந்த லிபரல் போராளியோ, இடதுசாரியோ, பெரியார் போராளிகளோ எதிர்த்து கேள்வி கேட்கவில்லை. ஆனால் அதையே மோடி செய்யும் பொழுது கொதிப்பார்கள்.

மோடி செய்வது தவறு ஆனால் மம்தா செய்வது ?? 

மம்தா ஆற்றிய வினைக்கு காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்வினை ஆற்ற தவறின, பிஜேபி எதிர்வினையாற்றுகிறது. அது ஓட்டாகவும் மாறுகிறது. அவ்வளவு தான்..

சும்மா ஓட்டு போடும் மக்கள் எல்லாம் முட்டாள் அல்லது ஒரு கட்சியால் manipulate செய்யப்பட்டுள்ளார்கள் என்பதெல்லாம் வெற்று பேச்சு ! அரசியலில் மக்களின் நாடித்துடிப்பை கணித்து அதற்கு வினையாற்றும் கட்சி வெற்றிபெறுகிறது... Thats the reality !!!!

#தேர்தல்2019 #Election2019

Comments

Popular posts from this blog

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Download Tamil books free in PDF format - Project Madurai

சங்கதாரா புத்தக விமர்சனம்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்