தீவிரவாதத்தை ஒடுக்கும் பொறுப்பு அரசை விட குடும்ப அமைப்புக்கே அதிகம்

இலங்கையில் நடத்த தீவிரவாத தாக்குதல் பலவகையில் இந்தியாவிற்கு கவலையளிக்கும் செய்தியாகும்.

கோவையில் சமீபத்தில் ISIS அமைப்புடன் தொடர்புள்ளதாக கைதுசெய்யப்பட்ட 6 பேரிடம் NIA அமைப்பு நடத்திய விசாரணையில் இலங்கையில் தீவிரவாத தாக்குதல் நடக்கயிருப்பதை பற்றி தகவல் கிடைக்க அதை வைத்தே இந்திய அரசு இலங்கை அரசுக்கு பல முறை எச்சரிக்கை செய்தி அனுப்பியது தெரியவந்துள்ளது. ஆனால் இலங்கை அரசு அந்த எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்தியுள்ளது...

ISIS தீவிரவாத இயக்கம் மனிதகுலத்துக்கே எதிரானது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அதன் கொடூர கொலை கரங்கள் இந்தியாவிற்கு குறிப்பாக தமிழகத்திற்கு அருகில் வரை வந்துவிட்டது கவலையளிக்கிறது..

ஒரு நக்ஸல் தீவிரவாதி உருவாவதற்கு அவனது வறுமை, அரசின் ஒடுக்குமுறை, சுரண்டல், கல்லாமை போன்றவற்றை காரணமாக சொல்லப்படுவதுண்டு. ஆனால் இலங்கையில் தாக்குதல் நடத்திய எவருக்கும் அப்படியான மோசமான சமூக சூழலோ, கல்வி குறைபாடோ, பொருளாதார பிரச்சனைகளோ இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

உதாரணமாக தாக்குதல் நடத்திய ஒரு தீவிரவாதி தனது கல்லூரி படிப்பு முழுவதையும் மேலைநாடுகளில் கற்றுள்ளார் எனில் கல்விக்கோ வறுமைக்கோ குறையில்லை என நாம் புரிந்துகொள்ளலாம்.

தீவிரவாதியாக மாறியவருக்கு கருணை காட்டுவது முட்டாள் தனம் என்பது என் கருத்து. அதேபோல் மதத்தின் பெயரால் தீவிரவாதியாக மாறுபவரை அரசுகள் செய்யவேண்டியதை விட சமூகமும் குடும்ப அமைப்பும் செய்யவேண்டியதே அதிகம் உள்ளது என நினைக்கிறன். அரசு கல்வியையும் வேலைவாய்ப்பையும் தரலாம் ஆனால் குடும்ப அமைப்பே நம்மை பக்குவபட்டவராக உருவாக்க முடியும்..

தீவிரவாதியாக மாறியவரை அரசும் ராணுவமும் பார்த்துக்கொள்ளட்டும். இனி எவரையும் மாறாமல் தடுக்க நமது குடும்ப அமைப்புகள் வேலை செய்யட்டும்..

Reference :

https://tamil.thehindu.com/india/article26932401.ece?utm_source=india&utm_medium=sticky_footer

Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)