வாராக்கடன் மீட்பில் பின்னடைவு

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வாராக்கடன் பிரச்னையை கையாள பிப்ரவரி 12 ஆம் தேதி ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது..

கடன் வாங்கியவர்கள், வங்கிகள் என பல நிலைகளில் சலசலப்பை ஏற்படுத்திய இந்த சுற்றறிக்கையை நேற்று உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது..

ரிசர்வ் வங்கிக்கு இதுபோன்றதொரு சுற்றறிக்கையை அனுப்ப சட்டரீதியாக அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது...

பிப்ரவரி 12 சுற்றறிக்கையின் சில முக்கிய பகுதிகள் கிழே

* 2,000 கோடிக்கு மேல் கடன் பாக்கியுள்ள நிறுவனம் கடனை தவணையை கட்ட குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு நாள் தாமதமானாலும் அந்த நிறுவனத்தை திவால் சட்டத்தின் அடிப்படையில் NCLT எனப்படும் திவால் வழக்குகளை தீர்க்கும் நீதிமன்றதத்திக்கு எடுத்து செல்லவேண்டும்

* அவ்வாறு எடுத்துச்செல்லப்படும் நிறுவனத்தை அடுத்த 180 நாட்களுக்குள்  கடனில் இருந்து மீட்க வழியிருக்கிறதா (Resolution plan) என ஆராய வேண்டும்

* அப்படி வழி ஏதும் இல்லையெனில் அந்த நிறுவனத்தை திவால் என அறிவித்து நிறுவனத்தை ஏலம் விடுவதன் மூலமோ அல்லது பகுதியாக சொத்துக்களை விற்பதன் மூலமோ கடனை வங்கிகள் மீட்டுக்கொள்ளலாம் (5000 கோடி மதிப்புள்ள நிறுவனம் வெறும் 2000 கோடிக்கு ஏலம் போனால் வங்கிகள் வெறும் 2000 கோடியுடன் சந்தோஷப்பட்டுகொள்ளவேண்டியது தான் அதேசமயம் நல்ல நிறுவனமாக இருப்பின் ஏலம் விடுவதன் மூலம் வட்டியை கூட வசூலித்து விடலாம்)

* ஒவ்வொரு வார முடிவிலும் 5 கோடிக்கு மேல் 2000 கோடி வரை கடன் மதிப்பு இருந்து குறிப்பிட்ட காலத்துக்குள் தவணை கட்ட தவரியவர்கள் பட்டியலை ரிசர்வ் வங்கிக்கு மற்ற வங்கிகள் கண்டிப்பாக சமர்பிக்கவேண்டும்

ஏன் இத்தனை கடுமையான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்தது என்பதையும் கவனிக்க வேண்டும். அதை பற்றி விரிவாக அடுத்த பதிவில் எழுதுகிறேன்..

Comments

Popular posts from this blog

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Download Tamil books free in PDF format - Project Madurai

சங்கதாரா புத்தக விமர்சனம்

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)