Posts

Showing posts from April, 2020

கொரோனாவால் முடங்கிய மாநில வருவாய்

GST வரம்புக்குள் வராமல் மாநில அரசின் நேரடி வரி விதிப்பில் மிச்சம் இருப்பவை - பெட்ரோல்/டீசல் மீது மாநில அரசு விதிக்கும் வரி, பத்திரப்பதிவு கட்டணம், மதுவிற்பனைக்கு விதிக்கும் வரி. கடந்த ஒரு மாதமாக பெட்ரோல்/டீசல் விற்பனை பெரிய அளவில் இல்லை. நிலம் விற்றல் வாங்கலும் நடக்காததால் பத்திரப்பதிவும் நடைபெறுவதில்லை, தமிழக அரசு மதுக்கடைகளை மூடிவைத்திருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் முடங்கியுள்ள நிலையில் GST வருவாய் பெரிதாக இருக்கும் என தோன்றவில்லை. எனில் தமிழக அரசின் முக்கிய வருவாய் ஈட்டும் வழிகள் எல்லாமே அடைக்கப்பட்டுள்ளது. கொரோனா முடிந்ததும் நாம் சந்திக்க வேண்டிய நெருக்கடிகள் ஏராளம்...

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி யாருக்கும் நல்லதல்ல

கச்சா எண்ணெய் விலை $18 என்ற 10 ஆண்டுகளில் இல்லாத விலைக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.. இதில் இரண்டு உண்மைகள் * கச்சா எண்ணெய் விலை இப்படி அடிமட்டதுக்கு வீழ்ச்சி அடைவது  யாருக்கும் நல்லதல்ல. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் நம் மக்களுக்கு கண்டிப்பாக நல்ல செய்தி அல்ல. இதனால் வேலை இழப்பே அதிகம் ஏற்படும். * கச்சா எண்ணெய் விலை குறைவதால் பொருட்களின் விலை அடிமட்டதுக்கு குறையும் என்பதையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை.. விலை குறைந்தால் அது முதலாளிகளின் பாக்கெட்டுக்கு போகலாமே தவிர பொருளின் விலையில் பெரிய மாற்றம் இருக்காது. அதே சமயம் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரும் பட்சத்தில் பொருட்களின் விலையை ஏற்றி விடுவார்கள். எனவே பெட்ரோல் டீசல் விலை குறைந்தால் பொருட்களின் விலை குறையும் என்பது தவறு என்பதே என் கருத்து இறுதியாக... பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை அனைவரும் வாங்கக்கூடிய அளவில் இருக்கவேண்டுமே ஒழிய மலிவு விலையில் கிடைப்பது நல்லதல்ல என்பது என் கருத்து. Affordable but not cheap