Accidental India - கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்

இந்தியா பொருளாதாரத்தில் உலகின் 5வது பெரிய நாடு.. ஆனால் Per Capita Income என்று சொல்லப்பட்டும் ஒவ்வொரு இந்தியரின் சராசரி வருமானம் ஒரு வருடத்துக்கு 1 லட்சம் ரூபாய் மட்டுமே..

இதுவொன்றும் ஆஹா ஓஹோ நிலை இல்லைதான், ஆனால் நாம் இந்த நிலைக்கு வரவே பல இன்னல்களை சந்திக்க வேண்டி வந்தது.. உதாரணமாக 1990களில் இந்திய அரசின் மொத்த கையிருப்பு ஒருவார கால இறக்குமதியை கூட சமாளிக்க முடியாது என்பது போன்ற மோசமான காலகட்டம் வந்தபொழுது தான் நாம் விழித்து கொண்டோம்.. 1991ல் (நரசிம்ம ராவ் புண்ணியத்தில்) பொருளாதார கதவுகளை திறந்து விட்டோம். இன்று உலகின் 5வது பெரிய நாடாக உருவெடுத்திருக்கிறோம்..

சரியாக சொன்னால் ஒரு பிரச்சனை பூதாகரமாக வெடிக்காத வரை இந்தியர்கள் அந்த பிரச்னையை கையாள்வதை பற்றி யோசிக்கக்கூட முற்படுவதில்லை, ஆனால் பிரச்சனை பூதாகரமானப்பின் அவற்றை மிகத்திறமையாகவே கையாண்டிருக்கிறோம்.

"Any change has come about in the wake of institutional failure and individual courage but crisis was a blessing in disguise for India"

இந்தியா சந்தித்த மிக முக்கியமான 7 பிரச்சனைகளும் அவற்றை நாம் கையாண்ட விதத்தையும் விவரிக்கும் புத்தகம் தான் திரு ஷங்கர் ஐயர் எழுதிய "Accidental India" ...

திரு சங்கர் அவர்கள் இந்தியாவை புரட்டிபோட்ட நிகழ்வுகளாக 7 நிகழ்வுகளை குறிப்பிடுகிறார்..

* தாராளமயமாக்கள் 1991
* பசுமை புரட்சி 1964
* வங்கிகள் தேசியமயமாக்கள் 1969
* வெண்மை புரட்சி (பால் புரட்சி) 1970
* மதிய உணவு திட்டம் 1982
* மென்பொருள் புரட்சி 1990
* தகவல் அறியும் உரிமை சட்டம் 2005

மேலே சொன்ன ஏழு நிகழ்வை பற்றியும் புதகத்கதில் விரிவாகவே விளக்கியும் உள்ளார்.. இந்தியாவை புரிந்து கொள்ள விரும்புபவர்கள் கண்டிப்பாக படிக்க...

https://www.goodreads.com/book/show/16048024-accidental-india

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)