சங்கதாரா புத்தக விமர்சனம்

ஆதித்த கரிகாலன் கொலைக்கான காரணம் பற்றிய புத்தகம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்புடன் சங்கதாரா என்ற புத்தகத்தை வாங்கி படித்தேன்

ஆனால் ஏன் இந்த புத்தகத்தை படித்தோம் என்று ஆகிவிட்டது. புத்தகம் அத்தனை அபத்தமான கற்பனை.

பொன்னியின் செல்வன் கட்டிவித்த மாயா பிம்பத்தை உடைக்கிறேன் என்ற ஒரே முடிவில் பொன்னியின் செல்வனில் புகழப்பட்ட அனைத்து கதாப்பாத்திரங்களையும் கொச்சை படுத்தி எழுதியுள்ளார் ஆசிரியர் நரசிம்மா என்பதே என் மனதில் படும் எண்ணம்.

Sangathara

புத்தகத்தில் வரும் 1000 அபத்த கற்பனைகளில் ஒன்று உங்கள் கருத்துக்காக சொல்கிறேன். ஆதித்த கரிகாலனை கொன்றது குந்தவை. காரணம் அவரது மகன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக. இதில் கொடுமை என்னவெனில் குந்தவையின் மகன் தான் அருண்மொழி. குந்தவை வந்தியதேவருடன் முன் காலத்தில் கொண்ட தவறான உறவால் பிறந்தவன் தான் அருண்மொழி.

இதற்கு மேல் சங்கதாரா புத்தகத்தை படிக்கவேண்டுமா என்பதை உங்கள் கருத்துக்கு விட்டுவிடுகிறேன்....

Comments

  1. மிகக் கேவலமான புத்தகம். இதை எப்படி வானதி பதிப்பகம் வெளியிட்டது என்று தெரியவில்லை.

    ReplyDelete
  2. ஆசிரியர் பிராமணர் என்பதால் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் பிராமணர்கள் என்ற கல்வெட்டு உண்மைகளைத் திசைதிருப்பித் தமிழ்ச் சோழர்களை இழிவு படுத்தலாம் என்ற உந்துதலோ?! பொன்னியின் செல்வன் படைத்த கல்கியும் பிராமணர்தாம். எதையும் பொதுமைப் படுத்தமுடியாது.

    ReplyDelete

Post a Comment

Post ur comments and help us to improve

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

நல்ல தமிழில் எழுதுவோம் - 1

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)