ஸ்டாலினுக்கு பொன்னான வாய்ப்பு !

தமிழகம் சந்தித்த வித்தியாசமான தேர்தல் இது !

அ.தி.மு.க விற்கு இரண்டாவது முறை ஆட்சி செய்ய வாய்ப்பு கொடுத்த அதேநேரம் தி.மு.க விற்கு 90 உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தமிழகமக்கள் கொடுத்துள்ளார்கள்.   

குறிப்பாக ஜெயலலிதா போல் தனித்து இயங்க விரும்பும் தி. மு.க பொருளாளர் ஸ்டாலினுக்கு இது அறிய வாய்ப்பு என்றுதான் சொல்லவேண்டும்.

சென்னை மேயராக செயல்பட்டதை தாண்டி ஸ்டாலின் நிர்வாக திறமையை வெளிப்படுத்த பெரிதாக வாய்ப்புகள் தரப்படவில்லை. இந்த தேர்தலிலாவது ஸ்டாலின் முதலமைச்சராக முன்னிறுத்தப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் எனக்கு பின் ஸ்டாலின் என ஒரே போடாக போட்டார் 93 வயதான கருணாநிதி.

ஆனால் கருணாநிதியின் பேராசையில் மக்கள் மண்ணை தூவி விட்டனர்.

தி.மு.கவின் தோல்வியிலும் ஸ்டாலினுக்கு சாதகமான அம்சம் ஒன்று நடந்துள்ளது எனில் அது அவர்கள் பெற்ற 90 உறுப்பினர் எண்ணிகையை தான் சொல்லவேண்டும்.

ஸ்டாலினுக்கு பொன்னான வாய்ப்பு !

கருணாநிதி வரும் 5 வருடங்களில் கையெழுத்து போடுவதை தவிர வேறு எதற்கும் சட்டசபை இருக்கும் வடக்கு பக்கம்  தலைவைத்து கூட படுக்கமாட்டார். எனவே சட்டசபையில் தி.மு.க வின் முகமாக இருக்கப்போவது ஸ்டாலின் மட்டும்தான்.

முதல்வர் வேட்பாளர் என ஊருக்குள் சுற்றிக்கொண்டிருக்கும் அன்புமணி, விஜயகாந்த், சீமான் என யாரும் யாருமே தேர்தலில் டெபாசிட் கூட வாங்காததால் அடுத்த ஐந்து வருடத்திற்கு சட்டசபையில் ஜெயலலிதா vs ஸ்டாலின் தான்.

இதை ஸ்டாலின் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

தமிழக அரசியல் என்றாலே ஜெயலலிதா vs கருணாநிதி என்ற சமன்பாட்டை திருத்தி எழுத அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் பதவியில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ஸ்டாலின் அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஏன் அதற்கு முன்னால் வரும் நாடாளமன்ற தேர்தலில் கூட கருணாநிதி உதவியின்றி பெரிய அளவில் வெற்றிகளை பெறமுடியும்.

அதேசமயம் வெறும் வெளிநடப்பு, கூச்சல் என வெற்று அரசியில் செய்தால் முன்னால் எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்துக்கு ஏற்பட்ட நிலை தான் இவருக்கும் ஏற்படும்.

கருணாநிதிக்கு போட்டி என்பது ஜெயலலிதா மட்டும் தான். ஆனால் ஸ்டாலினுக்கு போட்டியாக கருணாநிதி, ஜெயலலிதா, அன்புமணி, விஜயகாந்த் உள்ளதை ஸ்டாலின் மறந்து விடக்கூடாது !

Comments

Popular posts from this blog

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Download Tamil books free in PDF format - Project Madurai

சங்கதாரா புத்தக விமர்சனம்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)

குட்டி தகவல்: "பிங்க் சிட்டி" ஜெய்ப்பூர் - பெயர் வந்த கதை