Posts

Showing posts from January, 2017

பெப்சி, கோக் விற்பனை சரிவு தற்காலிகமானது

Image
பெப்சி கோக் விற்பனை சரிவு தற்காலிகமானது என்றுதான் தோன்றுகிறது. காரணம், சந்தை (market) என்பதே demand vs supply என்ற கோட்பாட்டை மையப்படுத்தியது தான். மக்கள் யாரும் குளிர்பானம் பருகுவதையே நிறுத்தப்போவதாக சொல்லவில்லை ! பெப்சி கோக் இரண்டையும் பருகுவதை நிறுத்துவதாக தான் சொல்லியிருக்கிறார்கள். அப்படியானால் 1000 பெப்சி பாட்டில்கள் விற்ற இடத்தில், அதற்கு ஈடாக குறைந்தது 500 பாட்டிலாவது வேறு ஒரு குளிர்பானம் விற்பனைக்கு வரவேண்டும் ! தமிழகத்தை சேர்ந்த குளிர்பான நிறுவனங்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த மிகச் சரியான காலகட்டம் இது. ஆனால் சந்தையில் பெப்சி, கோக் விற்பனை சரிவு ஏற்படுத்தும் வெற்றிடத்தை அவர்களால் நிரப்ப முடியாவிட்டால் கண்டிப்பாக 6 மாதத்திலோ ஒரு வருடத்திலோ பெப்சி கோக் விற்பனை பழைய நிலையை எட்டும் ! வியாபாரிகள் மக்களிடம் ஒத்துழைப்பு இல்லை என்று சிம்பிள் காரணத்தை சொல்லி தப்பித்து கொள்வார்கள்! இன்னொரு சந்தேகம் நம்ம ஆபிஸ்ல சப்பாத்திக்கும் தோசைக்கும் கோக் குடிக்குற மற்ற மாநிலத்தவர் ஏற்படுத்தும் demandஐ எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் நம் வியாபாரிகள்?

LTTE பிரபாகரனும் ஜல்லிக்கட்டும்

Image
LTTE பிரபாகரன் தொடர் வெற்றிகளை குவித்த பொழுது ராஜிவ் காந்தி அவரை டெல்லிக்கு வரவழைத்து, ஈழத்தை உலகநாடுகள் ஒத்துக்கொள்ளாது எனவே தமிழ்நாடு போன்ற தமிழ் மாநிலம் ஒன்று இலங்கையில் பெற்றுதருகிறேன் உன் போராட்டத்தை முடித்து கொள் என்றார்.. அன்றைக்கு இலங்கை அரசு தொடர் தோல்விகளால் துவண்டு இருந்ததால் அதற்கு சம்மதித்தது. ஆனால் பிரபாகரன் அதை ஏற்கவில்லை. உடனே MGR வரவழைக்கப்பட்டார்.. MGR பேசிப்பார்த்தார்..இதுதான் உண்மை நிலவரம் இவ்வளவு தான் முடியும் என்று கெஞ்சிப்பார்த்தார்.. அப்பொழுதும் பிரபாகரன் இறங்கவில்லை ! காரணம் பிரபாகரன் பெற்ற தொடர் வெற்றிகள் ! இலங்கையில் அவரை எதிர்க்க ஆள் இல்லை என்ற நிலை இருக்கும் பொழுது ஏன் தான் இறங்கிவரவேண்டும் என்ற மனநிலையில் பிரபாகரன் இருந்தார். MGR மற்றும் ராஜிவ்வை புறந்தள்ளினார்.. MGR மரியாதையாக ஒதுங்கி கொண்டார் ! காலம் சுழன்றது ! பிரபாகரன் வெற்றி தொடர வில்லை ! ஒரு போராட்டத்தை நடந்தி அதற்கு அரசியல் தீர்வு என்று எதிராளி இறங்கி வந்தால் தன்னுடைய வெற்றிகளை பார்த்து தான் எதிராளி பயந்து இறங்கி வருகிறார் என்று அவரை ஏளனமாக புறந்தள்ளுவது அழகல்ல என்பதற்கு பிரபாகரன்

ஜல்லிக்கட்டும் எனது பதிவுகளும்

Image
நான் இதை சொன்னால் சிலர் வருத்தப்படலாம் இல்லை கோவப்படலாம் இருந்தாலும் இதுதான் உண்மை ! இன்று பீட்டா விற்கு எதிராக மிகப் பெரிய போராட்டங்கள் நடக்கின்றன போலீஸ் காரர்களும் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றனர். இதுவே மணல் கொள்ளைக்கு எதிராக போராட்டம் நடத்தி பாருங்கள் அன்று தெரியும் அரசியல் என்றால் என்ன அதிகார வர்க்கம் என்றால் என்ன ஊழலின் மோசமான முகம் எல்லாம் ! அன்று மாணவர் எழுச்சி எல்லாம் குண்டர்களை கொண்டு தூக்கி வீசப்படும் ! நீங்கள் இன்னும் ஊழலுடன் மோதிப் பார்க்கவில்லை ! சட்டத்தை கொண்டு போராடும் பீட்டா அமைப்போடு தான் மோதுகிறீர்கள்.. மறந்து விடவேண்டாம் ! அன்று இந்த மீடியா உங்களை ஆதரிக்காது ! அன்று OPS இறங்கி வரமாட்டார் ! அரசியல் அன்று புரியும் ! - ஜனவரி 20, 2016                                                                                                             Just now watched the interview of PETA India chief in CNN . She is stating very clearly we are not making laws in India..its the Indian Government and TN government who made the law against Jallikattu and we just used the law in