LTTE பிரபாகரனும் ஜல்லிக்கட்டும்
LTTE பிரபாகரன் தொடர் வெற்றிகளை குவித்த பொழுது ராஜிவ் காந்தி அவரை டெல்லிக்கு வரவழைத்து, ஈழத்தை உலகநாடுகள் ஒத்துக்கொள்ளாது எனவே தமிழ்நாடு போன்ற தமிழ் மாநிலம் ஒன்று இலங்கையில் பெற்றுதருகிறேன் உன் போராட்டத்தை முடித்து கொள் என்றார்.. அன்றைக்கு இலங்கை அரசு தொடர் தோல்விகளால் துவண்டு இருந்ததால் அதற்கு சம்மதித்தது. ஆனால் பிரபாகரன் அதை ஏற்கவில்லை.
காரணம் பிரபாகரன் பெற்ற தொடர் வெற்றிகள் ! இலங்கையில் அவரை எதிர்க்க ஆள் இல்லை என்ற நிலை இருக்கும் பொழுது ஏன் தான் இறங்கிவரவேண்டும் என்ற மனநிலையில் பிரபாகரன் இருந்தார்.
MGR மற்றும் ராஜிவ்வை புறந்தள்ளினார்.. MGR மரியாதையாக ஒதுங்கி கொண்டார் !
காலம் சுழன்றது ! பிரபாகரன் வெற்றி தொடர வில்லை !
ஒரு போராட்டத்தை நடந்தி அதற்கு அரசியல் தீர்வு என்று எதிராளி இறங்கி வந்தால் தன்னுடைய வெற்றிகளை பார்த்து தான் எதிராளி பயந்து இறங்கி வருகிறார் என்று அவரை ஏளனமாக புறந்தள்ளுவது அழகல்ல என்பதற்கு பிரபாகரன் சிறந்த உதாரணம் !
ஜல்லிக்கட்டு போராட்டதுக்கும் இது பொருந்தும் !
Comments
Post a Comment
Post ur comments and help us to improve