என்னதான் இருக்கு இந்தியாவில் ?
கோகினூர் வைரம் நம்மலோடது தெரியுமா ? , வெள்ளக்காரங்க நம்கிட்ட இருந்து கப்பல் கப்பலா தங்கத்த அள்ளிட்டு போனாங்கலாம் என இந்தியாவின் பழைய செல்வ செழிப்பை பற்றி பலர் பெருமை பேசுவதை கேட்டிருப்போம். அப்படி என்னதான் இருந்தது இந்தியாவில் ? இந்திய அரசர்களிடம் இருந்த தங்கத்தையும், கோவில் நகைகளையும் பார்த்து மட்டுமா உலகம் இந்தியாவை செல்வா செழிப்பான நாடாக எடைபோட்டது ? வெறும் அரசர்கள் வைத்திருந்த செல்வத்தை கொள்ளையடிக்கவா வெள்ளைக்காரன் 200 வருடங்கள் இங்கேயே தங்கினான் ? அப்படித்தான் இந்தியர்கள் நினைக்கிறார்கள் . ஆனால் உலகத்தின் இந்தியா மீதான பார்வை வேறு. நம் வரலாற்று புத்தகங்கள் ஒன்றை விளக்க தவறிவிட்டன இந்தியாவின் செல்வம் அதன் அரசர்களிடமும் கோவில்களிலும் கொட்டிக்கிடந்த தங்கம் அல்ல இந்திய மக்களின் உழைக்கும் குணம். இப்படி யோசித்து பாருங்கள் கடந்த 10 வருடங்களில் மட்டும் எத்தனை ஊழல்கள் அரசாங்கத்துக்கு எத்தனை இலட்சம் கோடி இழப்புகள் எத்தனை கறுப்பு பண பதுக்கல்கள், இத்தனை இருந்தும் இந்திய பொருளாதாரம் தான் இன்று உலகின் அதிவேகமாக வளரு...