Posts

Showing posts with the label புதிய இந்தியா

Talgo ரயில் வேண்டாம், எங்களிடம் உள்ளது Train18

Image
2016 ஆகஸ்ட் மாதம், ஸ்வீடனின் Talgo நிறுவனம் 180 km வேகத்தில் பயணிக்கும் ரயிலை சொந்த செலவில் இந்தியாவிற்கு கொண்டுவந்து டெல்லி முதல் மும்பை வரை 12 மணிநேரத்தில் (தற்போதைய ரயிலின் பயண நேரம் 16 மணிநேரம்) வெற்றிகரமாக ஓட்டிக்காட்டி எங்கள் ரயிலை வாங்கிக்கொள்ளுங்கள் என்று இந்திய அரசை கேட்டது.. உங்கள் ரயில் வேணாம், எங்களுக்கு தேவையான ரயிலை நாங்களே தயாரித்து கொள்கிறோம் என்று அடுத்த 18 மாதத்தில் மேக் in இந்தியா திட்டத்தில் 100 கோடியில் Train18 ரயில் தயாரிக்கப்பட்டது...இது ஐரோப்பாவில் இருந்து வாங்கவிருந்த ரயிலை விட 40% குறைவான செலவில் செய்யப்பட்டுள்ளது சென்னை ICF ல் தயாரிக்கப்பட்ட Train18 ரயில் 180 KM வேகத்தில் பாயும் இந்தியாவின் அதிவேக ரயில் ! "Make In India" - நம்மாலும் முடியும் !!!  

மிஷன் இந்திரதனுஷ் - தடுப்பூசி போடுவதில் ஒரு புரட்சி

நாட்டில் குழந்தைகள் மற்றும் கருவுற்ற தாய்மார்களுக்கு தடுப்பூசி போடுவதில் இருந்த பெரிய அளவிலான குறைபாட்டை போக்க Mission Indradhanush என்கிற திட்டத்தை மத்திய அரசு 2014 ஆம் ஆண்டு துவங்கியது. இத்திட்டத்தின் இலக்கு 90% குழந்தைகள் மற்றும் 80 லட்சம் கருவுற்ற தாய்மார்களுக்கு 2018 ஆம் ஆண்டுக்குள் 12 முக்கியமான தடுப்பூசிகளை போடுவதாகும். இந்த திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. World's best 12 practices என்று பிரிட்டிஷ் மெடிக்கல் ஜார்னல் இந்த திட்டத்தை அறிவித்துள்ளது.. குழந்தைகளுக்கு உயிர்காக்கும் தடுப்பூசி போடும் திட்டம் கூட 70 வருட காங்கிரஸ் ஆட்சியில் செய்ய முடியாதது வெட்ககேடு. இதுபோன்ற திட்டங்கள் கவர்ச்சி திட்டங்கள் அல்ல. ஆனால் இவைதான் நாளைய இந்தியாவை சிறப்பாக படைக்க உதவும். அதே சமயம் இது போன்ற மத்திய அரசின் சீரிய முயற்சி இல்லாத காலத்திலிருந்தே தமிழக அரசு தடுப்பூசி போடுவதில் ஆகச்சிறந்த மாநிலமாக விளங்கிவருவதை இங்கே குறிப்பிடவேண்டும்...

புதிய இந்தியா : 1 - நிறுவனங்களை கை கழுவும் ஆடிட்டர்கள்

Image
(இந்தியாவில் ஏற்பட்டு வரும் வரவேற்கப்படவேண்டிய மாற்றங்களை பற்றிய எனது கட்டுரைகள் "புதிய இந்தியா" என்கிற தலைப்பில்) பல நிறுவனகங்கள் தங்கள் வருமானத்தை உயர்த்தி காட்டி அந்த கணக்குகளை கொண்டு வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ளன. இந்த கடன்கள் தான் பின்னாளில் வாரக்கடனாக லட்சம் கோடிகளில் இந்திய வங்கிகளை இழுத்து மூடம் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இதுபோன்ற பித்தலாட்ட வேலைகளுக்கு நிறுவனங்களுக்கு உதவுபவர்கள் ஆடிட்டர்கள். உதாரணமாக A என்கிற நிறுவனம் ஆண்டுக்கு 100 கோடிக்கு turnover செய்கிறது என்று வைத்துக்கொள்வோம். நிறுவனமும் அதன் ஆடிட்டர்களும் சேர்ந்து A நிறுவனத்தின் turnover 500 கோடி என்று கணக்குகளை மாற்றுவார்கள். பின் மாற்றிய கணக்குகளை கொண்டு வங்கிகளில் விரிவாக்க திட்டம் என்ற பெயரில் 300 அல்லது 500 கோடிக்கு கடன் பெறுவார்கள். வங்கியை பொறுத்தவரை 500 கோடி turnover செய்யும் நிறுவனத்துக்கு 300 கோடி கடன் தருவது ஒன்றும் தவறல்ல. ஆனால் A நிறுவனம் ஆண்டுக்கு செய்யும் தொழிலே 100 கோடி தான். எப்படியும் A நிறுவனத்தால் கடனை திரும்ப செலுத்தமுடியாது. A நிறுவனம் திவால் ஆகும், நிறுவனத்தின் தலைவ...