ஒரு Doubt - என் சிறுகதை

oru doubt

மூச்சுவாங்கித்தான் போனேன்,  வேகம் வேகம் இன்னும் சில மணித்துளிகளே ! நான் தங்கம் வாங்க ஒலிம்பிக்கில் ஓடவில்லை, கல்லூரிக்கு செல்ல அரசு பேருந்தின் பின்னால் ஓடினேன். கோவில்வெண்ணி செல்லும் பேருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகரதொடங்கிய பொழுது எப்படியோ ஏறிவிட்டேன் . கூட்டம் குறைவுதான் உட்கார இடமும் கிடைத்தது.

பேருந்து திருவாரூர் நகர் எல்லையை  தாண்டி சென்று கொண்டிருந்தது, அரசு பேருந்துக்கே உரித்தான மித வேகத்தில். எனக்கு பின் சீட்டில் இருவர் தங்கள் குடும்ப கதையை ஊர் அறியும் வண்ணம் உரக்க பேசிவர எனக்கும் என் வாழ்கை குறித்த எண்ண ஓட்டம் மனதில் எழ தொடங்கியது.

பேருந்தின் ஜன்னலை திறந்தேன் தென்றல் காற்று உள்ளே வர அப்பொழுது யாருடைய செல்போனோ ஒலித்தது " செந்தாளம் பூவில் வந்தாடும் தென்றல் ..." இசைஞாநியின் கீதம்.

எனக்கு benz கார் மீது ஆர்வம் உண்டு. படித்து முடித்து சம்பாதிக்கும் காலத்தில் கண்டிப்பாக வாங்கவேண்டும் என்று முடிவெடுத்திருந்தேன். நான் நன்றாகவே படித்தேன். கல்லூரி வாழ்கை  நண்பர் பட்டாளத்துடன் மிக இனிமையாக சென்றது. படித்து முடித்ததும் சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணி ஊதியம் 24,000 ரூபாய்.

முன்பு போல் நண்பர்களை பார்க்க இயலவில்லை. காலசக்கரத்தின் சுழலில் சிக்கிய வாழ்வு . இருவருட பணி அனுபவத்துக்கு பின் அலுவலகத்தில் பெரிய பொறுப்பு வழங்கப்பட்டது. சம்பளமும் வருடத்திருக்கு 9 இலச்ச ரூபாய்.

இப்பொழுது benz என் மனதில் மீண்டும் எட்டிப்பார்த்தது . பணத்தை புரட்டினேன் கொஞ்சம் பணம், மிச்சம் தவணை என என் கனவு காரை வாங்கினேன். தவணை மாதம் 25,000 ரூபாய். கொஞ்சம் அதிகம் தான் இருந்தாலும் சமாளிக்கலாம் என்று ஒரு துணிவில் காரை வாங்கினேன்.

எனக்கு டிரைவிங் தெரியாது எனவே ஒரு ஓட்டுனரை நியமித்தேன். நல்ல துடிப்பான இளைஞன், பார்க்க பழைய வருஷம் பதினாறு பட கார்த்திக் போலிருப்பான். என் கார் கிண்டியில் இருக்கும் என் அலுவலகத்திற்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டது.

கொஞ்சம் தாமதமாகத்தான் புறப்பட்டேன் அதனால் கார் கொஞ்சம் வேகமாகவே சென்றது. என் காரின் mp3 பிளேயரை தட்டிவிட்டேன். " காதலின் தீபமொன்று ஏற்றினாலே என் நெஞ்சில் ...." இசைஞானியின் இனிமை கீதம் என் காதலியை நினைவூட்டியது. அவள் கைகளை கோர்த்துக்கொண்டு பாடவேண்டிய பாடல் இது என சொன்னது  என் மனம்.

எத்தனை அழகான பெரிய கண்கள் என் தேவதைக்கு , அவள் கரம் பிடிக்க மனம் துடிக்க திடிரென என் கார் வேகமெடுத்தது காரணம் இன்னும் 5 நொடிகளில் சிக்னல் விழுந்துவிடும். என் டிரைவர் வேகமா செல்லமுயன்றும் தோற்றார். சிக்னலில் நின்று கொண்டிருந்தோம்.

சிக்னலில் மாட்டிய கடுப்பில் வேடிக்கை பார்க்க தொடங்கிய பொழுது பக்கத்தில் இருந்த ஸ்கூட்டியில் வந்த பெண்ணின் முகம் என் காதல் தேவதையை நினைவுஊட்டியது. எல்லாமே அவளாக தெரிந்தால். என் கார் ஜன்னல் தட்டப்படும் சத்தம் வேறு யார் தேசிய தொழிலாளிகள் (பிச்சைக்காரன்)

என் தேவதை கனவை கலைத்த கடுப்பில் பாக்கெட்டை பார்த்தேன் சில்லறை இல்லை. டிரைவரிடம் இருக்கும் என அவனை பார்த்தேன். அப்பொழுது ஒரு குரல் " சனியனே வீட்லேந்து வரப்ப சில்ற எடுத்து வரமாட்ட ?"
 
அது பிச்சைக்காரனின் குரல் அல்ல நான் பயணித்த அரசு பேருந்து நடத்துனரின் குரல். கண்விழுத்து பார்த்தேன் பேருந்து என் கல்லூரியை நெருங்கிவிட்டது. என் பையை எடுத்துக்கொண்டு இறங்க தயாரானேன் அப்பொழுது உதித்தது ஒரு டவுட் பகல் கனவு பலிக்குமா பாஸ் ?






Comments

  1. Un Kanavu niraivera en Vazhthukkal eppothum Nanbane...!!!!

    ReplyDelete
  2. Kanavu kanavaga teriavilai...
    kangalil odiyathu ovvoru nigalvum...karpanai kaaviyam paartha unarvu..

    ReplyDelete
  3. kandipa benz car ungaluku than annan...

    ReplyDelete
  4. சில்லறையே இல்லாத அளவுக்கு பெரியாள் ஆயிடிங்க ....நிஜத்துலயும் அப்படியே நடக்க வாழ்த்துக்கள் . யார் அந்த தேவதை !!!!யார் அந்த தேவதை !!!கண்டு பிடிச்சிடிங்களா உங்க தேவதைய????அண்ணா

    ReplyDelete

Post a Comment

Post ur comments and help us to improve

Popular posts from this blog

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Download Tamil books free in PDF format - Project Madurai

சங்கதாரா புத்தக விமர்சனம்

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)