Posts

Showing posts from 2014

உச்ச நீதிமன்ற தீர்ப்பு (பாகம் 3)

Image
தொழிற்சங்கங்கள் மற்றும் தி. மு. க சார்பில் தமிழக அரசின் பணி நீக்க நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டன. தமிழக அரசு விடுவதாக இல்லை. கே.கே.வேணுகோபால் மற்றும் பி.பி.ராவ் என்ற தலைசிறந்த வழக்கறிஞர்கள் தமிழக அரசு சார்பாக வாதாடினார். இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள் பரபரப்பான தீர்ப்பைவழங்கினர். "Employees thinking strike is their birth right, No political party or organisation can claim a right to paralyze the economic and industrial activities of a state or nation or inconvenience citizens even  t he trade unions, who have a guaranteed right for collective bargaining, have no right to go on strike. Government employees could not complain that they could hold society to ransom by going on strike to ventilate their grievances" தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் என்ற பெயரில் மாநில அரசையே ஸ்தம்பிக்க வைத்து விட்டனர். ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வது தங்கள் பிறப்புரிமை என்று கருதக்கூடாது. அவர்களுக்கு போராட்டம் செய்ய உரிமை இல்லை . தமிழக  அரசு எடுத்த நடவடிக்கைகள் சரியே  இருந்த

ஜெயலலிதா பாணி (பாகம் 2)

Image
அரசாங்கம் உழியர் போராட்டதுக்கு முடிவு கட்ட தயாரானது. போராட்டம் தொடங்கப்பட்ட ஜூலை 1 அன்றே பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சத்தமில்லாமல் அரசு செயலில் இறங்கியது. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு செய்யப்பட்டவர்கள் ஒப்பந்த தொழிலார்களாக பணியில் அமர்த்தப்பட்டனர். எஸ்மா சட்டம் அவசர சட்டமாக அமல் செய்யப்பட்டது. பல அரசு அலுவலகங்கள் அத்தியாவசிய பணிகளுக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டன. குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மீண்டும் பணிக்கு திரும்பாத 1.7 லச்சம் ஊழியர்கள் நிபந்தனையின்றி பணி நீக்கம் செய்யப்பட்டனர். இது போரட்டகாரர்கள் சற்றும் எதிர்பாராத திருப்பம். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் ஆயிரக்கணக்கில் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டனர். பணிக்கு திரும்பிய பலரும் மீண்டும் பணியில் சேர்ந்துக்கொள்ளப்படவில்லை. எஸ்மா சட்டத்தை  எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி சிறையில் இருக்கும் அனைத்து ஊழியர்களையும் விடுவிக்க உத்தரவிட்டார். உயர்நீதி மன்ற தீர்ப்பு வந்த சில நிமிடங்களில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செ

ஜூலை 1, இது வெறும் ஆரம்பம் (பாகம் 1)

Image
ஜூலை 1, 2003. ஜெயலலிதா தமிழக முதல்வராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்று ஒரு வருடம் கடந்திருந்தது. அரசு ஊழியருக்கு சம்பளம் வழங்கவே கஷ்டப்படும் அளவுக்கு நிதி நிலை மோசமாக இருந்ததால் பல சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன. D.A என்ற அழைக்கப்படும் பஞ்சப்படி மற்றும் சில பென்ஷன் சலுகைகள் ரத்து செய்யப்பட்டது. இதனை எதிர்த்தும் ஊதிய உயர்வு போன்றவற்றை வழியுறுத்தியும் போக்குவரத்து தொழிலாளர்கள், ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்தன. மொத்தம் 13 லச்சம் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு இயந்திரம் ஸ்தம்பித்தது.  தமிழகம் சந்தித்த மிகப்பெரிய அரசு ஊழியர் வேலைநிறுத்தமாக இது பார்க்கப்பட்டது. போராட்டத்துக்கு பல அரசியல் கட்சிகளும் (தி.மு.க உட்பட) ஆதரவு தெரிவித்தன. அரசு   Essential Services Maintenance Act  ( ESMA )  சட்டம் பாயும் என எச்சரித்தது. எனினும் போராட்டம் தொடர்ந்தது. ஒட்டு மொத்த அரசு இயந்திரமும் செயல்படாததால் அரசு தங்கள் கோரிக்கைக்கு செவிசாய்த்து விடும் என்று அவர்கள் தீர்க்கமாக நம்பினார். ஆனால் நடந்ததோ வேறு . 4 நாட்களில் போராட்டம் நசுக

வரலாற்றின் பக்கங்கள் - போராடுவோம் ! போராடுவோம் !

Image
நாள் 28/12/2014, தமிழகத்தில் சொல்லிக்கொள்ளும் படியாக திரு. பன்னீர்செல்வம் தலைமையிலான அரசாங்கம் செயல்படவில்லை என்ற நிலையில் தமிழக போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். ஜெயலலிதா சிறைக்கு சென்ற பின் முதல்வராக பொறுப்பேற்று கொண்ட பன்னீர்செல்வம் (ஓ.பி. எஸ்) முதல்வர் நாற்காலியில் கூட அமராமல் சத்தமில்லாத முதல்வராக தொடர்கிறார். ஓ.பி. எஸ் அவர்கள் இந்த போராட்டத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். அதற்கு முன்னர் இதேபோல் 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசு ஊழியர் வேலை நிறுத்த போராட்டத்தை ஜெயலலிதா எப்படி எதிர்கொண்டார் என்பதை வரலாற்றின் பக்கங்களை திரும்பி பார்போம். ஜூலை 1, இது வெறும் ஆரம்பம் (பாகம் 1) ஜெயலலிதா பாணி (பாகம் 2) உச்ச நீதிமன்ற தீர்ப்பு (பாகம் 3)

Temporary Smile 3.37 Price cut

Image
Today Modi's government announced one of its biggest reforms by deregulating Diesel price. (Earlier in UPA Government Petrol prices were deregulated) Why Diesel matters much? In India, the fuels like Diesel, Kerosene, Domestic gas prices are controlled by Government. So Government only fix the prices. Market price may be high or low, but Government will fix the price of Diesel. UPA government had decided to raise diesel price in small dose until it align with market price. With continuation to that Diesel price are raised 50 paise every month & in past 19 months Diesel price are raised by   Rs. 11.81 per liter. Now market price of crude oil nearly falls under $80 due to global situations. but keep in mind its not permanent. We can't or even US can't predict the oil price. It will be in fluctuation through out the year.   As of now the price is below 80 $. but you cant expect the same through out the year. Lets take an small example to explain

இந்திய கிரிக்கெட் அணி தேசிய அணியா ?

Image
சரிதா தேவி , இந்திய மகளிர் குத்து சண்டை போட்டியில் தங்கம் வெல்லும் வாய்ப்பு இருந்தும் நடுவரின் தவறால் அரையிறுதியில்  வெளியேற்றப்பட்டு வெண்கலம் வென்றார். பதக்க விழாவில் அவர் கதறி அழுது பதக்கத்தை வாங்கமறுத்தது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இந்திய போன்ற ஒரு நாட்டில் பிறந்து பல கட்ட ஊழல்கள், சிபாரிசுகள், அமைச்சர்கள், அதிகாரிகளின் தலையீட்டை எல்லாம் போராடி வென்று ஆசியா கோப்பை போன்ற ஒரு போட்டிக்கு செல்வதே பெரிய உலக சாதனையாகும். அப்படி போராடி கலந்து கொண்ட போட்டியில்  நடுவரின் அநீதியால் பதக்கத்தை பறிகொடுத்து, தங்கத்துக்கு பதிலாக வெண்கல பதக்கம் தரப்பட்ட பொழுது சரிதா தேவியின் மனம் எப்படி துடித்திருக்கும் என்பதை நினைப்பதற்கே கடினமாக உள்ளது. பதக்கங்களின் மதிப்பை நமக்கு உணர்த்திய நிகழ்வு அது. இங்கே மற்றொரு விளையாட்டு, இந்தியராகிய நாம் உயிராக கருதும் கிரிக்கெட். ஆசியா போட்டிகளிள் 2010 முதல் கிரிக்கெட் சேர்த்து கொள்ளப்பட்டது. இதுவரை இரண்டு ஆசிய போட்டிகளில் கிரிக்கெட் விளையாடப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அணி இருமுறையும் தங்கள் நாட்டின் சார்பாக எந்த வீரரையும் அனுப்பி வைக்

மூன்றாவது கோணம் - யேசுதாஸின் குரல்

Image
காலையில் செய்தித்தாள் வாங்கலாம் என்று கடைக்கு சென்ற பொழுது கடைக்கு வெளியே தொங்க விடப்பட்டு காற்றில் ஆடிக்கொண்டிருந்த அனைத்து செய்திதாள்களின் தலையங்கத்திலும் தவறாமல் இருந்த ஒரு செய்தி என்னை ஈர்த்தது. "பெண்களுக்கு எதிரான கருத்து  யேசுதாஸ் பேச்சால் சர்ச்சை" நானும் ஆர்வமாக செய்தித்தாளை வாங்கி அவரது பேச்சு பற்றிய கட்டுரையை படித்தேன். அவரது முழு பேச்சும் கீழே தரப்பட்டுள்ளது. "பெண்கள் ஆண்களைப் போல் இருக்க முயற்சிக்கக் கூடாது. பெண்களின் அழகு அவர்கள் எளிமையில் இருக்கிறது. ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து மற்றவருக்கு பெண்கள் இடையூறு ஏற்படுத்தக் கூடாது. எதை மறைக்க வேண்டுமோ அதை மறைப்பது அவசியம்.  பெண்கள், தங்கள் உடையலங்காரத்தால் ஆண்களை தேவையில்லாத செய்கைகளில் ஈடுபடத் தூண்டக் கூடாது. ஆண்களை ஈர்க்கும் வகையில் உடைகளை அணியக் கூடாது.  ஜீன்ஸ் அணியும் பெண்ணைப் பார்க்கும் ஓர் ஆண் ஆடைக்குள் ஒளிந்திருக்கும் பெண்ணின் அங்கங்களையும் பார்க்கத் தூண்டப்படுகிறான். ஜீன்ஸ் - இந்திய கலாச்சாரத்திற்கு எதிரான உடை"  இதை படித்த பொழுது எனக்கு ஏற்பட்ட உணர்வு இது அவரது சொந்த கருத்து இதை

இது ஒரு சாலையின் கதை

Image
15 வருடங்களுக்கு முன்பு அந்த சாலையில் சென்றவர்கள் யாரும் KFC யை பார்த்திருக்க மாட்டார்கள், வானளாவிய கட்டிடங்களை சத்தியமாக பார்த்திருக்க மாட்டார்கள். அதிகபச்சம் புதர்களையும் செடிகளையும் மட்டுமே பார்த்திருப்பார்கள் . இன்றோ வானளாவிய கட்டிடங்கள், எப்பொழுதும் கழுத்தில் அடையாள அட்டையுடன் சுற்றும் மனிதர்கள், அவர்களின் பர்சுகளை நம்பி இயக்கப்படும் ஏ.சி பேருந்துகள் என வருடங்கள் அந்த சாலையை உரு தெரியாமல் மாற்றிவிட்டது. ஆம் சென்னையில் இருந்து பல்லவன் செய்து வடித்த சிற்ப கோவில்களை காண மஹாபலிபுரம் செல்ல மட்டும் பயன்படுத்தப்பட்ட சாலை தான் (அட நம்ம OMR ரோடு தாங்க ) இன்று இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பட்டதாரி இந்தியர்களின் வாழ்வாதாரம். அவர்களுக்கு மட்டுமா ? இரண்டு லட்சம் ஊழியர்களை நம்பி தொடங்கப்பட்ட தங்கும் விடுதிகள் ,  KFC, பிட்சா கடைகள்,  ஆந்திரா உணவகங்கள், சிற்றுண்டி கடைகள் , ஆட்டோக்கள்  என இந்த சாலையால் வாழ்கையை ஓட்டுவோர் பலர். CTS , TCS , இன்போசிஸ், விப்ரோ என இந்த சாலையில் இந்தியாவின் மிக  முக்கியமான அனைத்து ஐ.டி கம்பெனிகளும் தனது கிளைகளை வைத்துள்ளன. புதர் மண்டி கிடந்த இந்த  சாலைய

பிக் டேட்டா (Big data : The Next Generation IT Technology)

Image
பிக் டேட்டா ! பெயருக்கு ஏற்றார் போல் பலரது வாழ்கையில் பெரிய மாற்றங்களை கொண்டுவரப்போகும் ஏரியா இது. ஐ. டி துறையில் தற்போதைய டிரெண்ட் டாபிக் இதுதான். பிக் டேட்டா சார்ந்த வேலை வாய்ப்புகள் மட்டும் அடுத்த இரு ஆண்டுகளில் 2 இலச்சமாக இருக்கும் என்கிறது ஆய்வு. சரி பிக் டேட்டா என்றால் என்ன என்பதற்கு முதலில் பதில் சொல்லுங்கள் என்று கேட்கிறீர்களா  பிக் டேட்டா வை  எளிமையாக புரிய வைக்க ஹிந்து தமிழ் செய்தி தாளில் வந்த தொடர் கட்டுரைகளை இங்கே பகிர்ந்துள்ளேன். 1.  தேடவேண்டிய இடத்தில் தேடு 2.  டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் 1.5 லட்சம் வேலைவாய்ப்புகள் 3.  டேட்டா குவியல் அதிகரித்துக்கொண்டே போவது எதனால்? 4.  பிக் டேட்டாவின் குணாதிசயங்கள் என்ன? 5.  பிக் டேட்டா: அந்தரங்கமும் அம்பலமாகும்! 6.  தகவலும் சிறந்த மூலதனமே! 7.  இது எப்படி உதவும்? 8.  எங்கும் எதிலும் அனலிடிக்ஸ் --நன்றி ஹிந்து தமிழ். 

Chancey illa Chennai Facts - Special post for Chennai City's 375th Birthday

Image
The city is getting ready to celebrate Madras day, 375th anniversary of Chennai cities birth, Digital Native Team is dedicating this post as tribute to Chennai city. Chancey illa Chennai facts : Second oldest corporation in the world. Kathipara flyover in Guindy is the largest Clover leaf shaped flyover in Asia. 31st Largest metropolitan in the world. "Higginbotham" book shop at Mount Road is the first and oldest existing book shops in India. Fourth most populous metropolitan city in India Chennai is the only city in South Asia and India to figure in the "52 places to go around the world" by The New York Times St. Mary's Church inside Fort St. George is the oldest Anglican church in India. First printing press erected in 1711 Chennai referred as Gateway of South India. Chennai region has the oldest rocks in country dating to billion years. Chennai is the only oldest serving municipal corporation in India Chennai central prison is the oldes

வெற்றி பெருமிதம்

Image
வருடம் 2008 நான் 10 வகுப்பு வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்ததால் என்னை ராசிபுரம் நாமக்கல் போன்ற பகுதிகளில் சேர்த்து மனப்பாட இயந்திரம் ஆக்கவேண்டும் என்ற பலரது அறிவுரைகள் எங்கள் அப்பாவுக்கு சொல்லப்பட்டன. எனக்கு வயிற்றில் புளியை கரைப்பது போல் இருந்தது. ஆண்டவன் புண்ணியத்தில் என்னை திருவாரூரில் நான் 10 ஆம் வகுப்பு படித்த அதே பள்ளியில் சேர்த்து விட்டனர். வருமான சான்றிதல் பெற்று வரும் படி சொல்லியது பள்ளி நிர்வாகம். என் தந்தை வருமான சான்றிதல் பெற என்னை அனுப்பிவைத்தார். இதற்கு முன் நான் எந்த அரசு அலுவலகத்துக்கும் சான்றிதழ் பெற சென்றது இல்லை. சரி நம்மளும்  அரசாங்க சான்றிதல் வாங்குற அளவுக்கு  பெரிய புள்ள ஆகிட்டோம் போல என்று மனதுக்குள் நினைத்து கொண்டு இன்னும் சில நண்பர்களையும் சேர்த்து கொண்டு  சைக்கிளில் கிராம நிர்வாக அலுவலரை சந்திக்க சென்றேன். எனக்கான வேலைகள் தெளிவாக தரப்பட்டன. முதலில் வீ. ஏ. ஓ, பிறகு ஆர். ஐ அலுவலகம் பிறகு தாசில்தார் அலுவலகம் என எங்கு செல்லவேண்டும் என்பதெல்லாம் தெளிவாக சொல்லி அனுப்பினார் என் தந்தை. வீ. ஏ. ஓ அலுவலகத்திற்கு சரியாக 10.30 மணிக்கு நண்பர்கள் இருவருடன் சென்ற

இந்திய பொருளாதாரம் - குட்டி கதை (கட்டுரை அத்தியாயம் 1)

Image
இந்திய அரசாங்கத்தின் செயல்பாட்டை இந்த ஒரு கதையை கொண்டு நீங்கள் புரிந்து கொள்ளலாம். முகுந்தன் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். தன்னிடம் சுத்தமாக பணம் இல்லாததால் கடன் வாங்கும் முகுந்தன் அந்த பணத்தை கொண்டு சாப்பாடு செலவு, வீட்டின் இதர செலவுகளை செய்தான். அவனிடம் இருந்த மொத்த பணமும் தீர்ந்து போனது. அடுத்த மாத செலவுக்கு அவனிடம் பணம் இல்லை. மீண்டும் கடன் வாங்குகிறான். அவன் செய்த தவறு வாங்கிய கடனை கொண்டு தொழிலிலோ வேறு ஏதேனும் விதத்திலோ முதலீடு செய்து அந்த பணத்தை பெருக்கி அதை கொண்டு குடும்பத்தை நடத்தி இருக்கவேண்டும். கடன்வாங்குவது தவிர்க்க முடியாதது என்று கூறும் ஆட்சியாளர்கள், அந்த கடனை வாங்கி என்ன செய்தார்கள் என்பது தான் கேள்விக்குரியது. ? அவர்கள் முகுந்தனை போலத்தான் நடந்து கொள்கிறார்கள். ஒரு நல்ல அரசாங்கம் தொழில் செய்வதற்கான வழிகளை ஏற்படுத்தி தரவேண்டும். அதை கொண்டு மக்கள் தொழில் செய்து தங்கள் உணவு உடை இருப்பிடம் போன்ற தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும். ஆனால் இந்திய அரசாங்கம் கடனை வாங்கி முதலீடு செய்வதற்கு பதிலாக பல ஊதாரி திட்டங்களுக்கு செலவு செய்கிறது. அதனிடம் உள்ள பணம் தீர்த்து ப

பொருளாதாரம் படிக்கலாம் வாங்க ( கட்டுரை தொடர் )

Image
பொருளாதாரம் என்றால் அது 11 ஆம் வகுப்பில் 2வது குரூப் மாணவர்களுக்கான பாடம் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் கருத்தை மாற்றிகொள்ளுங்கள். ஒரு உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும் பொருளாதாரம் என்பது ஏதோ அதிகம் படித்த டெல்லியில் இருந்து டிவி யில் பேட்டி கொடுக்கும் மெத்த மேதாவிகள்  மட்டுமே புரிந்து கொள்ள கூடிய கணக்கு வழக்கு என்று நாம் நம்பவைக்கப்பட்டுள்ளோம். ஒரு பொருளை பற்றி நமக்கு தெரியாத வரை அந்த பொருளை வாங்க கடைக்கு சென்றால் நாம் ஏமாற்றப்படுவதற்கான சாத்தியகூறுகள் அதிகம். அதைத்தான்ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள். மக்கள் பொருளாதாரத்தை புரிந்து கொண்டால் கேள்வி கேட்பார்கள் என்பதால் அதை புரியாத பாடமாகவே ஆக்கிவிட்டார்கள் . ஆனால் பொருளாதாரம் புரிந்து கொள்வதற்கு மிக எளிய, நமது வாழ்க்கையோடு தொடர்புடைய விஷயம். அதை புரிந்து கொள்ள புத்தகம் படிக்கவோ, பெரிய ஆராய்ச்சியோ தேவை இல்லை. இந்திய பொருளாதாரத்தையும், அரசாங்கத்தின் செயல்பாட்டையும் ஒரே ஒரு குட்டி கதையை வைத்தே விளக்கி விடலாம். படிக்க :   இந்திய பொருளாதாரம் - ஒரு குட்டி கதை ( இதன் தொடர்ச்சியாக இன்னும் சில பொருளாதார கட்டுரைகள் எழுதலாம் என்று

வரலாற்றின் பக்கங்கள் - தடுப்புகள்

Image
ஏப்ரல் 15 , 1989 சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ளது தியனன்மென் சதுக்கம் என்ற இடம். அன்று எப்பொழுதும் இல்லாத அளவுக்கு திடீரென மக்கள் கூட ஆரம்பித்தார்கள். அவர்கள் சீனாவில் ஜனநாயகத்தை (பேச்சுரிமை, பத்திரிகை சுதந்திரம்....) வலியுறுத்தி அரசுக்கு எதிராக குரல்கள் எழுப்பினார்கள். போராட்டத்தை முதலில் அரசு அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் போராட்டம் நாட்களை கடந்து வார கணக்காக நீண்டது. 10 லட்சம் மக்கள் தியனன்மென் சதுக்கத்தில் குவிந்தார்கள். போராட்டம் காட்டு தீயை போல 500 நகரங்களுக்கு பரவியது. போரட்டகாரர் ஒருவவரை நோக்கி சீனா பீரங்கிகள் சீனா அரசு விழித்து கொண்டது. தியனன்மென் சதுக்கத்தை நோக்கி ராணுவம் தனது நவீன 59 ரக பீரங்கிகளுடன் முன்னேறியது. மக்கள் கண்மூடி தனமாக தாக்க பட்டார்கள். போராட்டம் ஒடுக்கப்பட்டது. இந்த ஆண்டோடு தியனன்மென் சதுக்க போராட்டம் முடிவுற்று 25 ஆண்டுகள் ஆகிறது. எங்கே மக்கள் மீண்டும் விழித்து கொள்வார்களோ என்று பயந்த சீனா அரசு செய்திருக்கும் செயல்கள் சீனா தனி மனித சுதந்திரத்திற்கு எத்தனை மதிப்பு தருகிறது என்பதை காட்டுகிறது. சீனா மேற்கொண்ட நடவடிக்கைகளில் சில கீழே தரப்

இந்தியரே ஏமாற்றத்திற்கு தயாராக இருங்கள் !

Image
மோடி சுனாமி காங்கிரஸ், திமுக போன்ற பல கட்சிகளை புரட்டி போட்டதெல்லாம் பழைய கதை. மோடி என்ற ஒற்றை வார்த்தை மீது நம்பிக்கை வைத்து இந்தியர்கள் (கம்யூனிஸ்ட்களின் வார்த்தைகளில் சொன்னால் 31 % வாக்காளர்கள் ) அவரை தேர்தெடுத்து உள்ளார்கள்.ஆனால் திரு மோடிக்கு சவாலே இனிதான் காத்து இருக்கிறது. இந்திய சுதந்திரம் அடைந்து விட்டால் பாலும் தேனும் சாலைகளில் ஓடும் என்று நம்பியவர்கள் பலர். சுதந்திர வேட்கைக்கு அதுவும் கூட ஒரு காரணம். ஆனால் சுதந்திரம் கிடைத்த பின் அமைந்த ஆட்சிகளால் அவர்கள் கனவு கண்டதை போல் பாலாறும் தேனாரும் ஓடவில்லை. ஆட்சியாளர் மாறினார்கள் அவ்வளவே ! ஆனால் ஒரு நிமிடத்தில் எல்லாவற்றையும் மாற்ற ஆட்சியாளர்கள் ஒன்றும் மந்திரவாதிகள் அல்ல . திட்டங்கள் தீட்டப்பட்டு முறையாக செயல்படுத்தப்பட்டு அவை பலன் தர கண்டிப்பாக சில காலம் பிடிக்கும் என்பதை மக்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் மாற்றத்திற்காக ஓட்டு  அளிக்கிறார்கள் ஆனால் அவர்களிடம் உள்ள  பிரச்சனை உடனே தங்கள் வாழ்கையில் பெரிய  மாற்றத்தை எதிர் பார்க்கிறார்கள். அவர்களுக்கு மாற்றங்கள் நிகழும் வரை காத்திருக்க பொறுமை இல்லை . சச்சின் டெண்டுல்கர

பணம் தின்னி கழுகுகள்

Image
தமிழக தலைநகரத்தின் விடியல் வெடி சத்தத்துடன் துவங்கியது . காலை 7.20 மணிக்கு பெங்களூரில் இருந்து சென்னை வழியாக கவுஹாத்தி செல்லும் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் நின்று கொண்டு இருந்த பொழுது இரண்டு வெடிகுண்டுகள் வெடித்ததை செய்தி சேனல் வழியாக நாம் பார்த்தோம் . இந்த செய்தியை சேனல்கள் காட்டிய விதத்திலேயே அவர்களின் வியாபார உத்திகளையும் கீழ்த்தரமான குணத்தையும் உணர முடிந்தது . சுவாதி என்ற பெண்  ஒருவர் இறந்ததாக மட்டுமே உறுதி  செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு செய்தி சேனல் முதலில் 50 பேர் பலி எனவும் பின்னர் 15 பேர் இறந்ததாக தகவல் வந்துள்ளது எனவும் சக பயணிகளையும் சாக பயணிகளின் குடும்பத்தாரையும் பதைபதைக்க வைத்து அரசியல் லாபம் தேடுகிறது . சாகாத பலரை சாகடித்தது அரசியில் லாபம் தேடுவது தான் சமூக சிந்தனையா ? மற்றொரு தனியார் டிவி ஒருபடி மேலே சென்று சென்னை சென்ட்ரல் வெடிகுண்டு விபத்து Exclusive உங்கள் ***** டிவியில் மட்டும் என்று எதோ சினிமா பட விளம்பரம் போல குண்டுவெடிப்பின் கோரத்தை பணமாக்கி கொண்டு'இருக்கிறது . ஒருவேளை வெடிகுண்டு வெடித்தால் தீவிரவாதிகளை விட அதிகம் சாந்தோஷப்படுவது ந

மூன்றாவது கோணம் - ஸ்டாம்ப் பேட் சொல்லும் உண்மை

Image
நான்கு வருடம் கழித்து பள்ளி செல்லும் வாய்ப்பு . சுதந்திர இந்தியாவின் ஜனநாயக திருவிழாவில் என்னுடைய பங்களிப்பை செய்ய திருவாரூர் அரசு தொடக்க பள்ளிக்கு சென்றிருந்தேன். நேர்முகத் தேர்விற்கு செல்வது போல் சொல்லமுடியாத பதட்டம் என்னை தொற்றிகொண்டது. இத்தனைக்கும் திருவாரூர் வாக்குசாவடி பதட்டமான வாக்குசாவடி பட்டியலில் கூட இல்லை ஆனால் எனக்கு ஏனோ பதட்டத்தை தவிர்க்க முடியவில்லை. கூட்டம் கொஞ்சம் இருந்தது . எனது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் ஸ்லிப் இரண்டையும் நீட்டினேன். எனது பெயரை சரி பார்த்த பின்னர் கையெழுத்திட சொன்னார்கள். கையெழுத்து போடும் பொழுதுதான் கவனித்தேன் பக்கத்தில் இருந்த ஸ்டாம்ப் பேடை . கையெழுத்து போடா தெரியாதவர்கள் கைநாட்டு வைப்பதற்கு  . சுதந்திரம் கிடைத்து 67 வருடம் முடிந்த பின்னும் எல்லா இந்தியர்களுக்கும்  கல்வியை நம்மால் வழங்க முடியவில்லை. வளர்ச்சி எல்லா தரப்பு மக்களையும் சென்றடையவில்லை என்பதன் சாட்சியாக ஸ்டாம்ப் பேட்  தெரிந்தது. -  விக்கி 

மிச்சங்களும் எச்சங்களும் - ( தமிழ் புத்தாண்டு சிறப்பு கட்டுரை )

Image
கொல்கத்தா வில்லியம் கோட்டை அன்று கிழக்கிந்திய கம்பெனியின் முக்கிய கூட்டம் நடந்து கொண்டிருந்தது. கூட்டத்தின் தலைவர் மிஸ்டர் மெக்காலே இன்னும் வரவில்லை. அவருக்காக காத்திருக்காமல் கூட்டம் தொடங்கியது. இல்லை உங்கள் கூற்றை ஒப்பு கொள்ளவே முடியாது என்றார் திரு. வில்சன் நீங்கள் ஒப்பு கொள்ளாவிட்டால் என்ன? இது மெக்காலேயின் முடிவு என்றது எதிர் தரப்பு குரல். வில்சனுக்கு கோபம் தலைக்கு ஏறியது. அவரது வெள்ளை நிற மூக்கு சிவந்து அவரது கோபத்தை கூட்டத்திற்கு அப்பட்டமாக காட்டியது. வில்சன் இந்திய மொழிகள் பலவற்றை நன்றாக கற்றவர். இந்தியர்களுக்கு கல்வி இந்திய மொழிகளில் தான் கற்று தரப்படவேண்டும் என்று உறுதியாக நம்பியவர். இதற்காக விரிவான ஆய்வு செய்து அவர் சமர்ப்பித்த ஆய்வு அறிக்கையை பற்றித்தான் காரசாரமான விவாதம் நடைபெற்று கொண்டிருந்தது. தனது கோபத்தால் பயன் இல்லை என்பதை உணர்ந்த வில்சன் பின்வருமாறு கூறினார் . "உங்கள் மெக்காலே இந்தியாவிற்கு புதியவர், அவருக்கு இந்தியாவை பற்றி ஒன்றும் தெரியாது. இந்திய மக்களின் தேவை அவருக்கு தெரியாது .ஆங்கிலம் மட்டுமே போதும் என்பது அடி முட்டாள் தனம்"  திரு. 

வரலாற்றின் பக்கங்கள் - யூஸ் & த்ரொ ( Use & Throw )

Image
இந்த பதிவின் முந்தைய தொடர்ச்சியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்  வரலாற்றின் பக்கங்கள் - ஒரு கடிதம் ஜனவரி 10, 1615 ஆக்ராவில் அப்பொழுது குளிர் காலம் யமுனை நதி கரையில் பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. அவைகளுக்கு தெரியாது தாங்கள் ஆனந்தமாக இப்பொழுது சுற்றி கொண்டிருக்கும் இந்த இடத்தில் சில ஆண்டுகளில் உலக அதிசயம் ஒன்று கட்டப்படப்போகிறது என்று . ஆம் இந்த கதை நடக்கும் பொழுது ஷாஜகானின் தந்தை ஜஹாங்கீர் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்தார். அவரை பார்க்க இங்கிலாந்து அரசர் ஜேம்ஸின் நன்றி கடிதத்துடன் பெரிய மீசை கொண்ட தூதர்  தாமஸ் ரோ வந்திருந்தார். அரசவையில் அரியணைக்கு கீழே பிரபுக்களும் அதிகாரிகளும் அரசரை நெருங்க கூட முடியாத அளவுக்கு நிரம்பி இருந்தனர். தாமஸ் ரோ அரியணையில் வீற்றிருந்த மகாராஜாவுக்கு பலமுறை வணக்கம் செலுத்தினார். உங்கள் மரியாதை ஏற்று கொள்ளப்பட்டது என்பது போல் அரசர் கை அசைத்தார். தாமஸ் ரோ (பெரிய மீசைக்காரர்) தாமஸ் தனக்கு அமர ஒரு நாற்காலி போடப்படும் என்று எண்ணினார். பின்புதான் அரசருக்கு முன் யாரும் அமர கூடாது என்பது அவருக்கு புரிந்தது. நின்றுகொண்டேதான்  பேசினார் தாமஸ் ரோ. அவரு

வரலாற்றின் பக்கங்கள் - ஒரு கடிதம்

Image
அது ஒரு குளிர் காலம் இங்கிலாந்தின் அரசர் முதலாம் ஜேம்ஸ் தன் அரசவை கவிஞரின் வரவை எதிர்பார்த்து கோட்டையில் அங்குமிங்கும் உலாவி கொண்டிருந்தார். அரசவை கவிஞருக்கு ஆங்கிலத்தில் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தும் அத்துப்படி. அத்தனை காலையில் அரசர் அழைப்பு என்றதும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்துடன் கிளம்பினார் கவிஞர். ஏதோ முக்கிய வேலை உனக்கு காத்திருக்கிறது என்றது அவரது மனம். அவசர அவசரமாக தனது குதிரை பொருத்திய வண்டியை கிளப்பினார். குதிரைக்கு அரசரையும் தெரியாமல் அவரசமும் புரியாமல் மெல்ல நகரவே சுளீர் ! என்று ஒரு அடிவைத்தார் அந்த நீல கோட் போட்ட ஆங்கில கவிஞர். அரசர் குறுக்கும் நெடுக்கும் நடத்து கொண்டிருந்தார். உலகின் பாதியை ஆளும் இங்கிலாந்தின் மாண்புமிகு அரசருக்கு எனது வணக்கங்கள் என்ற குரல் கேட்ட திசையை நோக்கினர் அரசர் . கண்டிப்பாக இவரால் இந்த பணியை சிறப்பாக செய்யமுடியும் என்றது அரசர் மனம். குரலை சரி செய்து கொண்டு அரசர் தொடர்ந்தார். வாருங்கள் கவிஞரே ! உங்களுக்கு ஒரு வேலை வைத்திருக்கிறேன். அதிமுக்கியமான வேலை. உங்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து இந்த வேலையே உங்களிடம் ஒப்படைக்கிறேன் .எனக்க

வரலாற்றின் பக்கங்கள் - பழைய புத்தக கடை

Image
பழைய புத்தக கடை , சென்னை மூர் மார்க்கெட் கல்லூரி முடிந்ததும் சுற்றுலா செல்வது போல அனைவரும் செல்லும் ஒரு இடம் பழைய புத்தக கடை. அப்பொழுது கல்லூரி தேர்வுகள் முடியவில்லை. எனவே அவ்வளவாக அந்த கடையில் கூட்டமில்லை.  கூட்டம் இல்லாததால் பொழுது போக்கிற்கு வானொலி கேட்டுகொண்டிருந்த கடைக்காரர் யாரோ தன் கடைக்கு வந்திருப்பதை உணர்ந்து திரும்பி பார்த்தார். இளம் வயதுடைய இளைஞன், கண்ணில் சோகம், பை நிறைய புத்தகம் என நின்றான்.எப்பொழுதுமே பொறியியல் புத்தங்களுக்கு அங்கே கடும் கிராக்கி. வந்திருப்பவன் பொறியியல் மாணவன் என்று தெரிந்ததும் கடைகாரனுக்கு ஏக குஷி. பையையில் உள்ள புத்தகங்களை பார்த்தார். புத்தகத்தின் முனைகள் கூட மடங்காமல் பத்திரமாக படித்திருந்தான் அந்த இளைஞன். வந்தவன் முகத்தில் இருக்கும் சோகத்தை கடைக்காரர் கவனித்தார். ஆனால் அவனிடம் பேச்சு கொடுக்கவில்லை. ஒருபுத்தகத்தை பிரித்து பார்த்த பொழுது அதிர்ச்சி அடைந்தார் .அந்த புத்தகத்தில் எழுதி இருந்த வரிகள் " Awarded for excellence in academics in the first year of engineering at the Madras Institute of Technology by the Vice- Chance

வரலாற்றின் பக்கங்கள் - ஆபரேஷன் பூமாலை

Image
இடம்: க்வாலியர் (Gwalior)   காலை சூரியனின் ஒளி இன்னும் முற்றாக பரவவில்லை. அரை தூக்கத்தில் இருந்த அஜித் பவ்னானியின் காதுக்கு தன் அறையின் கதவு வேகமாக தட்டப்படும் சத்தம் கேட்டது . அஜித் பவ்னானி இந்திய விமான படையின் மூத்த அதிகாரி. இத்தனை காலையில் அவரது அறை கதவு தட்டப்பட்ட பொழுதே ஏதோ முக்கிய செய்தி வந்திருக்கிறது என்று அவருக்கு தெரிந்து விட்டது . கதவை திறந்த பொழுது  மூச்சு வாங்கிபோய் நின்ற அவரது படை வீரன் தன்னை ஆசுவாச படுத்த கூட நேரம் தராமல் ஒரு காகிதத்தை நீட்டினான் அந்த காகிதம் இந்தியாவின் தலைநகரில் இருந்து வந்திருந்தது . " உடனே 5 விமானிகளுடன் மிராஜ் 2000 ரக விமானத்தில் பெங்களூரின் ஹால் (Hal) விமான நிலையத்திற்கு வரவும் " மிராஜ் 2000 பதிலேதும் பேசவில்லை அவர் . தன் படையின் 5 சிறந்த விமானிகளுடன் பெங்களூருக்கு பறந்தார் . நேரம் மத்தியத்தை நெருங்கிவிட்டது. அஜித் பவ்னானிக்கு குழப்பமாக இருந்தார் காரணம் தன்னை பெங்களூருக்கு அழைக்கபட்ட காரணம் இன்னும் சொல்லப்படவில்லை. An 32 ரக விமானம் அதேநேரம் இந்தியாவின் தாஜ்மஹால் நகரான ஆக்ராவில் இருந்து  ஐந்து An 32 ரக விமான

அபத்தமான தவறு

Image
நாம் அம்மா என்பதை ஆங்கிலத்தில் குறிப்பிட Mummy என்ற சொல்லை அதிகம் பயன்படுத்துகிறோம். ஆனால் Mummy என்பது தவறான சொல் என என் நண்பன் குறிப்பிட்ட பொழுது ஆர்வத்தில் இன்டர்நெட்டில் தேடினேன். கிடைத்த விடை கொஞ்சம் அதிர்ச்சி தான், Mummy என்பதற்கு ஆங்கில அகராதியான oxford dictionary ல் இறந்தவரின் பதப்படுத்தப்பட்ட உடல் என்று பொருள் இருந்தது.( எகிப்தில் இறந்தவரின் உடல்கள் பிரமிடுகளில் பதப்படுத்துவதை குறிப்பிடும் சொல், மம்மி என்ற ஆங்கில படம் இப்பொழுது தான் பொறி தட்டுகிறது ) விக்கிபீடியாவும் oxford dictionary யையே வழிமொழிகிறது. அம்மா என்பதை சரியாக குறிப்பிடும் சொல் Mommy அல்லது Mom என்பதே. [ நான் இத்தனை நாட்களாக செய்து வந்த அபத்தமான தவறை சுட்டிக் காட்டிய என் நண்பர் இளமாறனுக்கு நன்றி   ]

நோட்டா ஓட்டு

Image
செப்டம்பர் 27, 2013 இந்தியாவின் உயரிய நீதிமன்றமான உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில் இனி ஓட்டு போடும் எந்திரத்தில் நோட்டா ( NATO - None Of The Above) என்று அழைக்கப்படும் யாருக்கும் ஓட்டு போடா விருப்பம் இல்லை என்று குறிக்கும் பட்டனை கட்டாயம் இடம் பெற செய்யவேண்டும் என்று தீர்பளித்தது. இது அரசியல் கட்சிகளுக்கு பெருத்த அடி என்றும் , வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்றும் பலர் கொண்டாடுகின்றனர். இதில் இருவேறு கருத்துகள் இருக்கமுடியாது. ஆனால் இந்த முடிவு இந்திய அரசியலை தலைகீழாக புரட்டிவிடும் என்று நான் நினைக்கவில்லை. தேர்தல் என்றால் காந்தி ஜெயந்தி போல ஒரு அரசாங்க பொது விடுமுறை தினம் என எண்ணி வீட்டிலே படம் பார்க்கும் தோழர்களும், சமுதாயத்தில் உயர் இடத்தில் இருப்பவரும்,  யாருக்கு ஒட்டு போட்டால் என்ன நடக்க போகிறது என்று  ஓட்டே போடாதவருக்கும் பஞ்சமில்லை இந்த நாட்டில். அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை இழந்த பலர் ஒட்டு போடுவதில்லை என்பதும் ஒரு கருத்து. இத்தகைய மக்களை ஒட்டு சாவடிக்கு இழுத்து வரும் ஒரே வழி நோட்டா தான் என்கிறது ஒரு தரப்பு. இந்திய வாக்களர்களுக்கு நோட்ட பற்றிய விழிப்புணர்வ

வரலாற்றின் பக்கங்கள் - பழுத்த மரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யும்

Image
( வரலாற்று  நிகழ்வுகளை அனைவருக்கும் எடுத்து செல்ல ஒரு முயற்சி ) இந்தியாவின் இரும்பு பெண்மணி இந்திரா காந்தி அக்டோபர் 31 ஆம் தேதி  தனது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டு கொல்லப்பட்ட நிகழ்வுகளின் பதிவு பாரதத்தின்  முதல் பெண் பிரதமரை நோக்கி சுடப்பட்ட குண்டுகள் மட்டும் 33. அந்த இரும்பு பெண்ணை துளைத்த குண்டுகள் மட்டும் 30, அதில் 7 குண்டுகள் அவரது உடலிலேயே தங்கிவிட்டன பாசத்துடன் . 3 வது குண்டு துளைத்த பொழுதே சாய்ந்து விட்டது அந்த பெண் ஆலமரம்  சரிந்தாலும் குறையவில்லை கொலையாளிகளின் வெறி.தரையில் கிடந்தவரை நோக்கி சுடப்பட்டன 30 குண்டுகள் . எங்கே பிழைத்து கொள்வாரோ என்ற பயத்திலோ ? ஆலமரம் சரிந்தது ஆனால் அதிர்வுகள் குறையவில்லை. இந்திராவை கொன்ற சீக்கிய இனத்தை பழிவாங்க களமிறக்கப்பட்டனர் காங்கிரஸ் தொண்டர்கள் . டெல்லியில் ரேஷன் கார்டை வைத்துகொண்டு அடையாளம் காணப்பட்டனர் சீக்கியர்கள்.  இலவச வேட்டி சேலை வழங்கவா ?? இல்லை இந்திரா சென்ற இடத்துக்கே அவர்களையும் அனுப்பிவைக்க . ரத்த களமானது தலைநகர் . இந்தியாவின் அடுத்த பிரதமர் ராஜீவ் இந்த சீக்கிய படுகொலை குறித்து உதிர்த்த வரிகள் " When a g

How we create stress by ourselves - 3 'P's Formula

Image
In a research by a Psychologist, he revealed three 'P's which we used to disturb ourselves.  Personalising: Some of us take things personally. For example, a wife said to her husband, "The air conditioner is not working, have it fixed. Her husband got anger and shouted at her saying, "Do you mean that I don't take care of things properly ?". Such people are hypersensitive to others comments. They pick on what others say and construct an unproductive meaning of self based on what is said to them. Permanent:   This is about seeing negative things and creating a permanent scare in life. Some people feel that one failure will have a permanent impact in their life. Someone not getting selected in an interview perhaps believes everything is lost. Though ancient wisdom says "This too shall pass", we seem to cling onto unfortunate experience in life and lose our inner peace. Pervasive: The third P is believing that any negative impac