இந்தியரே ஏமாற்றத்திற்கு தயாராக இருங்கள் !

மோடி சுனாமி காங்கிரஸ், திமுக போன்ற பல கட்சிகளை புரட்டி போட்டதெல்லாம் பழைய கதை.

மோடி என்ற ஒற்றை வார்த்தை மீது நம்பிக்கை வைத்து இந்தியர்கள் (கம்யூனிஸ்ட்களின் வார்த்தைகளில் சொன்னால் 31 % வாக்காளர்கள் ) அவரை தேர்தெடுத்து உள்ளார்கள்.ஆனால் திரு மோடிக்கு சவாலே இனிதான் காத்து இருக்கிறது.

modi ji

இந்திய சுதந்திரம் அடைந்து விட்டால் பாலும் தேனும் சாலைகளில் ஓடும் என்று நம்பியவர்கள் பலர். சுதந்திர வேட்கைக்கு அதுவும் கூட ஒரு காரணம். ஆனால் சுதந்திரம் கிடைத்த பின் அமைந்த ஆட்சிகளால் அவர்கள் கனவு கண்டதை போல் பாலாறும் தேனாரும் ஓடவில்லை. ஆட்சியாளர் மாறினார்கள் அவ்வளவே !

ஆனால் ஒரு நிமிடத்தில் எல்லாவற்றையும் மாற்ற ஆட்சியாளர்கள் ஒன்றும் மந்திரவாதிகள் அல்ல. திட்டங்கள் தீட்டப்பட்டு முறையாக செயல்படுத்தப்பட்டு அவை பலன் தர கண்டிப்பாக சில காலம் பிடிக்கும் என்பதை மக்கள் புரிந்து கொள்வதில்லை.

அவர்கள் மாற்றத்திற்காக ஓட்டு அளிக்கிறார்கள் ஆனால் அவர்களிடம் உள்ள  பிரச்சனை உடனே தங்கள் வாழ்கையில் பெரிய  மாற்றத்தை எதிர் பார்க்கிறார்கள். அவர்களுக்கு மாற்றங்கள் நிகழும் வரை காத்திருக்க பொறுமை இல்லை .

சச்சின் டெண்டுல்கர் போன்ற சிறந்த கிரிக்கெட்டர் இல்லை. அவர் மீது அளவு கடந்த அன்பு செலுத்தியது போல அவரை திட்டியதிலும் இந்தியர்களுக்கே முதலிடம்.

சச்சின் 99 வது சதம் அடித்த அடுத்த இன்னிங்க்ஸ்லேயே 100 வது சதத்தை அடிக்க வேண்டும் என்று மக்கள் எதிர் பார்த்தார்கள். 2,3 ஆட்டங்கள் பொருத்து பார்த்த மீடியாவும் மக்களும், சச்சினால் முன்பு போல் விளையாட முடியவில்லை அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலக வேண்டும் என்று கூச்சலிட்டார்கள்.

அந்த கூச்சல்கள் அவர் 100வது சதம் அடிக்கும் வரை தொடர்ந்தது. கிரிக்கெட் ரசிகர்களின் கடவுளாக போற்றப்பட்ட சச்சினிக்கு ஏற்பட்ட அதே நிலைதான் மோடிக்கும் இப்பொழுது ஏற்பட்டு உள்ளது.மக்கள் மோடியின் மீது பெரிய எதிர்பார்ப்பை கொண்டு இருக்கிறார்கள். அவரிடம் மந்திர கோல் உள்ளது என நம்புகிறார்கள் .

மோடியால் நல்ல வெளிப்படையான நிர்வாகத்தை தரமுடியும். இந்தியாவின் கட்டமைப்பை உயர்த்த முடியும். தீர்க்கமான முடிவுகளை எடுக்கமுடியும்.

ஆனால் உடனே ஏதேனும் பெரிய மாற்றம் உங்கள் வாழ்வில் வந்துவிடும் என்று நீங்கள் எதிர்பார்த்தால், பெட்ரோல் விலையை 50 ரூபாய்க்கும் ரயில் கட்டணத்தை 2 ரூபாய்க்கும் கொண்டுசெல்வார் என்று நீங்கள் கனவு கண்டால், அவரிடம் மந்திர கோல் உள்ளது என்று நீங்கள் நம்பினால் இந்தியரே ஏமாற்றத்துக்கு தயாராக இருங்கள் !

- விக்கி



Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)