வரலாற்றின் பக்கங்கள் - தடுப்புகள்

ஏப்ரல் 15 , 1989

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ளது தியனன்மென் சதுக்கம் என்ற இடம்.

அன்று எப்பொழுதும் இல்லாத அளவுக்கு திடீரென மக்கள் கூட ஆரம்பித்தார்கள். அவர்கள் சீனாவில் ஜனநாயகத்தை (பேச்சுரிமை, பத்திரிகை சுதந்திரம்....) வலியுறுத்தி அரசுக்கு எதிராக குரல்கள் எழுப்பினார்கள்.

போராட்டத்தை முதலில் அரசு அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் போராட்டம் நாட்களை கடந்து வார கணக்காக நீண்டது. 10 லட்சம் மக்கள் தியனன்மென் சதுக்கத்தில் குவிந்தார்கள். போராட்டம் காட்டு தீயை போல 500 நகரங்களுக்கு பரவியது.

digitalnativeworld
போரட்டகாரர் ஒருவவரை நோக்கி சீனா பீரங்கிகள்
சீனா அரசு விழித்து கொண்டது. தியனன்மென் சதுக்கத்தை நோக்கி ராணுவம் தனது நவீன 59 ரக பீரங்கிகளுடன் முன்னேறியது. மக்கள் கண்மூடி தனமாக தாக்க பட்டார்கள். போராட்டம் ஒடுக்கப்பட்டது.

இந்த ஆண்டோடு தியனன்மென் சதுக்க போராட்டம் முடிவுற்று 25 ஆண்டுகள் ஆகிறது. எங்கே மக்கள் மீண்டும் விழித்து கொள்வார்களோ என்று பயந்த சீனா அரசு செய்திருக்கும் செயல்கள் சீனா தனி மனித சுதந்திரத்திற்கு எத்தனை மதிப்பு தருகிறது என்பதை காட்டுகிறது.

சீனா மேற்கொண்ட நடவடிக்கைகளில் சில கீழே தரப்பட்டுள்ளன

  • இன்டர்நெட் மூலமே மக்கள் செய்திகளை அதிகம் பரிமாறுகிறார்கள் என்பதால் முதலில் இன்டர்நெட்டை சென்சர் செய்யும் பணிகள் தொடங்க பட்டன. அதற்காக பிரத்தியோகமாக 20,000 பேர் பணியில் அமர்த்தப்பட்டனர்.
  • அதாவது சீனாவில் நீங்கள்  இருப்பதாக கற்பனை செய்தால் தியனன்மென் | சதுக்கம் | போராட்டம் | ஏப்ரல்  போன்ற எந்த வார்த்தையை இன்டர்நெட்டில் தேடினாலும் ஒரு விடையும் உங்கள்  திரையில் காட்டப்படாது.
  • எங்கே மக்கள் தேதிகளை வைத்து இணையத்தில் தியனன்மென் போராட்டம் பற்றி தேடுவார்களோ என்று அஞ்சி VIIIIXVIIV போன்ற ரோமானிய வடிவங்களை கூட சீனா தடை செய்துள்ளது.

1989 நடந்த போரட்டத்தின் பொழுது இராணுவ நடவடிக்கையில் இறந்தவர்களின்  எண்ணிக்கை 1000 கணக்கில். எனினும் சீனா அரசாங்கம் இறந்தவர்கள் எண்ணிக்கையை கூட இன்னும் ரகசியமாக வைத்துள்ளது.

சீனா வளர்ச்சியின் நாயகன் மட்டுமல்ல ! ரகசியம் காப்பதிலும் நாயகன் தான்.


Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

நல்ல தமிழில் எழுதுவோம் - 1

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)