Posts

Showing posts from April, 2016

மருத்துவ நுழைவு தேர்வு - சில உண்மைகள்

Image
தேசிய அளவில் மருத்துவ நுழைவு தேர்வு பற்றிய ஒரு தவறான புரிதல் என்னவென்றால் அனைத்து மருத்துவ கல்லூரி இடங்களுமே நுழைவு தேர்வு மூலம் நிரப்பப்படும் என்பதே. உண்மை என்னவெனில் மொத்த மருத்துவ இடங்களில் வெறும் 15 சதவீத இடங்கள் மட்டுமே மருத்துவ நுழைவு தேர்வு மூலம் நிரப்பப்படும். உதாரணமாக தமிழ்நாட்டில் ஒரு மருத்துவ கல்லூரியில் 100 இடங்கள் இருக்குமெனில் அதில் 15 சீட் மட்டுமே நுழைவு தேர்வு மூலம் நிரப்பப்படும் மீதி இடங்கள் வழக்கம் போல் மாநில தேர்வில் (+12 தேர்வில்)  பெற்ற மதிப்பெண்ணை கொண்டே நிரப்பப்படும். கிராமபுறங்களில் படித்தவர்களுக்கு பெரிய பாதிப்பு என்பதெல்லாம் தனியார் கல்லூரிகள் தங்கள் பண வேட்டை குறையும் என்பதற்காக கிளப்பி விடும் காரணங்கள் என்பதை நுழைவு தேர்வை எதிர்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜிபிஎஸ் (GPS) இருக்கும் பொழுது ஐஆர்என்எஸ்எஸ் (IRNSS) தேவையா ?

Image
ஒரு ரூபாய் ரூபாயல்ல இரண்டு ரூபாயல்ல ஐஆர்என்எஸ்எஸ் திட்டத்திற்கு சுமார் 1420 கோடி ரூபாய் செலவிட்டு 3 வருடத்தில் 7 செயற்கைகோள்களை ஏவியுள்ளது இந்திய விண்வெளி ஆய்வு நிலையம் (இஸ்ரோ). குடிப்பதற்கு கூட கஞ்சி இல்லாமல் பலர் இருக்கும் நாட்டில் ஐஆர்என்எஸ்எஸ் திட்டத்திற்கு 1000 கோடிகளில் செலவிட வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. ஐஆர்என்எஸ்எஸ் பற்றி எல்லோருக்கும் எழும் சில முக்கியமான கேள்விகளுக்கு விடை காணவே இந்த பதிவு. ஐஆர்என்எஸ்எஸ் திட்டம் தேவையா ? கண்டிப்பாக தேவை ! இன்றைய தலைமுறைக்கு இந்திய பாகிஸ்தான் போர் என்றால் சற்றென்று நினைவுக்கு வருவது கார்கில் போர்தான் , கார்கில் போரின் பொழுது பாகிஸ்தான் பக்கம் இருந்த அமெரிக்கா இந்தியா இராணுவத்திற்கு ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் தராமல் ஏமாற்றியது. இலக்கை குறிவைத்து தாக்கும் ஏவுகணைகளுக்கான தேவை அதிகரித்துள்ள இந்த சூழலில் பிறரை நம்பாமல் நமக்கான தொழில்நுட்பத்தை வைத்திருப்பது எதிர்காலத்தில் கைகொடுக்கும். ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் ஏற்கனவே உலகம் முழுவதிற்கும் பயன்படுத்தப்படும் பொழுது எதற்காக ஐஆர்என்எஸ்எஸ் என்ற இந்தியாவிற்கு மட்டுமான தொழில்நுட்பம் ? ஜி.ப

மதுவிலக்கு என்னும் மாய அஸ்திரம் !

Image
மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்தப்படும்  இந்த வாசகம் இடம்பெறாத கட்சிகளின் தேர்தல் அறிக்கையே 2016 தேர்தலில் இல்லை. தி.மு.க மற்றும் மக்கள் நல கூட்டணியினர் ஒரே கையெழுத்தில் மதுவிலக்கு என்றும், ஜெயலலிதா படிப்படியாக மதுவிலக்கு என்றும் அறிவித்துள்ளனர். மதுவிலக்கு கொண்டு வருவதினால் ஏற்படும் உடனடி பிரச்சனைகளான வருவாய் இழப்பு, மதுஅடிமைகளின் உடல் நலன், மது பழக்கத்திலிருந்து மீட்டலுக்கான மருத்துவ வசதி, கள்ள சாராய பிரச்சனைகள், கடத்தல் மது விற்பனையை தடுப்பது என பல சிக்கல்களை அரசு சமாளிக்க வேண்டிவரும். எனவே ஒரே கையெழுத்தில் மதுவிலக்கு என்பது தேர்தல் அறிக்கைக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் ஆனால் படிப்படியாக மதுவிலக்கு என்பதே நிஜத்தில் சாத்தியம். ஒரே கையெழுத்தில் மதுவிலக்கு கொண்டுவருவதற்கு நிதிஷ் குமாரை உதாரணம் காட்டுவோர் பீகார் ஜார்கண்ட் மாநில எல்லை பகுதியில்  சாராயக்கடை அமைக்க ஏலம் பல கோடி ரூபாய்க்கு நடைபெற்றதையும், புதுச்சேரி தேர்தலில்  மதுவிலக்கு பற்றி எந்த கட்சியும் (தி.மு.க, அ.தி.மு.க உட்பட) வாய்திறக்காததையும், பீகார் முதல்வர் கோயம்பத்தூர் வேளாண் பல்கலைகழகத்திடம் தரமான பதநீர் தயா

காணவில்லை !

Image
போலீஸ் வாகனங்கள் விடிய விடிய  சைரன் ஒலித்தபடி ரோந்து செல்கின்றன. ஊர்க்காவல் படை வீரர்கள் 24 மணிநேர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேவைபட்டால் மேலும் போலீஸ் படை குவிக்கப்படும் என அரசு சொல்கிறது. வன்முறையை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐந்து பேருக்கு மேல் சேர்ந்து செல்லக் கூடாது என கூடுதல் உத்தரவு வேறு. இது ஏதோ தேர்தல் நடக்கும் மாநிலத்தின் பதட்டமான வாக்குசாவடி பற்றிய செய்தி அல்ல. மகாராஷ்டிரா மாநிலத்தின் லதூர் மாவட்டத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க அங்குள்ள எரி, கிணறுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது பற்றிய செய்தி. அதே மாநிலத்தின் மற்றுமொரு மூலையில் 60 லட்சம் லிட்டர் தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்படும் கிரிக்கெட் ஆடுகளங்கள். கிரிக்கெட்டை வேறு மாநிலத்துக்கு மாற்ற சொன்னால் நாங்கள் வேண்டுமானால் கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்தி கொள்கிறோம் ஆனால் பணம் கொழிக்கும் IPL போட்டியை மாற்றும் எண்ணமில்லை என்று அலட்சியமாக சொல்லும் பிசிசிஐ. பாருங்கள் பிசிசிஐ கழிவு நீரைதானே பயன்படுத்தப்போகிறது இதில் மக்களுக்கு என்ன பி