காணவில்லை !

போலீஸ் வாகனங்கள் விடிய விடிய  சைரன் ஒலித்தபடி ரோந்து செல்கின்றன. ஊர்க்காவல் படை வீரர்கள் 24 மணிநேர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேவைபட்டால் மேலும் போலீஸ் படை குவிக்கப்படும் என அரசு சொல்கிறது.

வன்முறையை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐந்து பேருக்கு மேல் சேர்ந்து செல்லக் கூடாது என கூடுதல் உத்தரவு வேறு.

இது ஏதோ தேர்தல் நடக்கும் மாநிலத்தின் பதட்டமான வாக்குசாவடி பற்றிய செய்தி அல்ல. மகாராஷ்டிரா மாநிலத்தின் லதூர் மாவட்டத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க அங்குள்ள எரி, கிணறுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது பற்றிய செய்தி.

மகாராஷ்டிரா மாநிலத்தின் லதூர் மாவட்டத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தால்


அதே மாநிலத்தின் மற்றுமொரு மூலையில் 60 லட்சம் லிட்டர் தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்படும் கிரிக்கெட் ஆடுகளங்கள்.

கிரிக்கெட்டை வேறு மாநிலத்துக்கு மாற்ற சொன்னால் நாங்கள் வேண்டுமானால் கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்தி கொள்கிறோம் ஆனால் பணம் கொழிக்கும் IPL போட்டியை மாற்றும் எண்ணமில்லை என்று அலட்சியமாக சொல்லும் பிசிசிஐ.

மகாராஷ்டிரா மாநிலத்தின் லதூர் மாவட்டத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தால்


பாருங்கள் பிசிசிஐ கழிவு நீரைதானே பயன்படுத்தப்போகிறது இதில் மக்களுக்கு என்ன பிரச்சனை Lets Cheer up ! ABD ! ABD ! என கூச்சல் போடும் கிரிக்கெட் வெறியர்கள் ! 

தண்ணீரை போல் மனிதாபிமானத்தையும் காணவில்லை !

குறிப்பு : லதூர் மாவட்டத்துக்கு 5 லட்சம் லிட்டர் தண்ணீர் ஏற்றிக்கொண்டு சிறப்பு ரயில் சென்று சேர்ந்துள்ளது ஆறுதலான செய்தி. இந்திய ரயில்வே துறைக்கு மனமார்ந்த நன்றிகள். 

Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

நல்ல தமிழில் எழுதுவோம் - 1

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)