ஜிபிஎஸ் (GPS) இருக்கும் பொழுது ஐஆர்என்எஸ்எஸ் (IRNSS) தேவையா ?

ஒரு ரூபாய் ரூபாயல்ல இரண்டு ரூபாயல்ல ஐஆர்என்எஸ்எஸ் திட்டத்திற்கு சுமார் 1420 கோடி ரூபாய் செலவிட்டு 3 வருடத்தில் 7 செயற்கைகோள்களை ஏவியுள்ளது இந்திய விண்வெளி ஆய்வு நிலையம் (இஸ்ரோ).

குடிப்பதற்கு கூட கஞ்சி இல்லாமல் பலர் இருக்கும் நாட்டில் ஐஆர்என்எஸ்எஸ் திட்டத்திற்கு 1000 கோடிகளில் செலவிட வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.

ஐஆர்என்எஸ்எஸ் பற்றி எல்லோருக்கும் எழும் சில முக்கியமான கேள்விகளுக்கு விடை காணவே இந்த பதிவு.



ஐஆர்என்எஸ்எஸ் திட்டம் தேவையா ?

கண்டிப்பாக தேவை ! இன்றைய தலைமுறைக்கு இந்திய பாகிஸ்தான் போர் என்றால் சற்றென்று நினைவுக்கு வருவது கார்கில் போர்தான், கார்கில் போரின் பொழுது பாகிஸ்தான் பக்கம் இருந்த அமெரிக்கா இந்தியா இராணுவத்திற்கு ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் தராமல் ஏமாற்றியது.

இலக்கை குறிவைத்து தாக்கும் ஏவுகணைகளுக்கான தேவை அதிகரித்துள்ள இந்த சூழலில் பிறரை நம்பாமல் நமக்கான தொழில்நுட்பத்தை வைத்திருப்பது எதிர்காலத்தில் கைகொடுக்கும்.

ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் ஏற்கனவே உலகம் முழுவதிற்கும் பயன்படுத்தப்படும் பொழுது எதற்காக ஐஆர்என்எஸ்எஸ் என்ற இந்தியாவிற்கு மட்டுமான தொழில்நுட்பம் ?

ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் அமெரிக்காவிற்கு சொந்தமானது. அதை சிவிலியன் பயன்பாட்டிற்கு ஏற்றுகொண்டாலும் இந்திய இராணுவ பயன்பாட்டுக்கு பெரிதும் சார்ந்திருக்க முடியாது என்பதே நிஜம்.

ஐஆர்என்எஸ்எஸ் இப்போதைக்கு இந்தியா மற்றும் துணைக்கண்ட நாடுகளுக்கு (சுமார் 1550 கி. மீ பரப்பளவு) பயன்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்னாளில் உலகம் முழுமைக்கும் விரிவுபடுத்தப்படலாம்.

ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் இப்பொழுதுள்ள அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் பயன்படுத்த முடிகிறது  ஐஆர்என்எஸ்எஸ்  தொழில்நுட்பத்தை அனைத்து ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்த முடியுமா ?

ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் L1 மற்றும் L2 பேண்ட் frequency பயன்படுத்துகிறது ஆனால் ஐஆர்என்எஸ்எஸ்  L5 மற்றும் S பேண்ட்  frequency பயன்படுத்துகிறது

எனவே ஐஆர்என்எஸ்எஸ் தொழில் நுட்பத்தை பயன்படுத்த தற்பொழுது சந்தையில் விற்கும் ஸ்மார்ட் போன்களின் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யவேண்டும் .

ஏற்கனவே இந்திய அரசு பல போன் தயாரிப்பாளர்களிடம் இதை பற்றி பேசத்தொடங்கி விட்டது மகிழ்ச்சியான செய்தி. எனினும் ஐஆர்என்எஸ்எஸ்  அனைத்து போன்களிலும் இடம்பிடிக்க சில வருடங்கள் பிடிக்கும்.

ஐஆர்என்எஸ்எஸ் தொழில்நுட்பத்தால் பொதுமக்களுக்கு என்ன பயன் ?

மிகச்சிறந்த உதாரணம் இந்திய மீனவர்கள் கடல்தாண்டி செல்வதை சொல்லலாம். ஐஆர்என்எஸ்எஸ்  உதவியுடன் மீனவர்கள் இந்திய எல்லையை மிகத்துல்லியமாக கண்டறிய முடியும். ஐஆர்என்எஸ்எஸ் பற்றி குறிப்பிட்ட நரேந்திர மோடி அவர்கள் இந்த தொழில் நுட்பத்தை இந்திய மீனவர்களுக்கு அற்பணிப்பதாக சொன்னதே இதற்கு சாட்சி.

இந்தியாவின் இடங்காணல் மற்றும் திசையறிதல் (நேவிகேஷன்தேவைகளை தானே பூர்த்தி செய்துகொள்ளும் முயற்சியில் இது ஒரு சாதனை. 

Comments

Post a Comment

Post ur comments and help us to improve

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)