மதுவிலக்கு என்னும் மாய அஸ்திரம் !

மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்தப்படும் இந்த வாசகம் இடம்பெறாத கட்சிகளின் தேர்தல் அறிக்கையே 2016 தேர்தலில் இல்லை.

தி.மு.க மற்றும் மக்கள் நல கூட்டணியினர் ஒரே கையெழுத்தில் மதுவிலக்கு என்றும், ஜெயலலிதா படிப்படியாக மதுவிலக்கு என்றும் அறிவித்துள்ளனர்.

மதுவிலக்கு என்னும் பெருவிவாதம்

மதுவிலக்கு கொண்டு வருவதினால் ஏற்படும் உடனடி பிரச்சனைகளான வருவாய் இழப்பு, மதுஅடிமைகளின் உடல் நலன், மது பழக்கத்திலிருந்து மீட்டலுக்கான மருத்துவ வசதி, கள்ள சாராய பிரச்சனைகள், கடத்தல் மது விற்பனையை தடுப்பது என பல சிக்கல்களை அரசு சமாளிக்க வேண்டிவரும்.

எனவே ஒரே கையெழுத்தில் மதுவிலக்கு என்பது தேர்தல் அறிக்கைக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் ஆனால் படிப்படியாக மதுவிலக்கு என்பதே நிஜத்தில் சாத்தியம்.

ஒரே கையெழுத்தில் மதுவிலக்கு கொண்டுவருவதற்கு நிதிஷ் குமாரை உதாரணம் காட்டுவோர் பீகார் ஜார்கண்ட் மாநில எல்லை பகுதியில்  சாராயக்கடை அமைக்க ஏலம் பல கோடி ரூபாய்க்கு நடைபெற்றதையும், புதுச்சேரி தேர்தலில்  மதுவிலக்கு பற்றி எந்த கட்சியும் (தி.மு.க, அ.தி.மு.க உட்பட) வாய்திறக்காததையும், பீகார் முதல்வர் கோயம்பத்தூர் வேளாண் பல்கலைகழகத்திடம் தரமான பதநீர் தயாரிப்புக்கு உதவி கேட்டிருப்பத்தையும் கருத்தில் கொள்க !

மதிவிலக்கு பற்றி பத்ரி சேஷாத்ரி அவர்கள் குறிப்பிட்ட பதில் இன்னும் சுவாரசியமானது - படிக்க   https://www.facebook.com/badriseshadri/posts/1297352990282101

Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)