Posts

Showing posts from July, 2018

விவசாயம் ஒரு தீர்க்க முடியாத பிரச்சனை... !

இந்தியாவின் விவசாய பிரச்னையை புரிந்து கொள்வது எளிதான காரியமல்ல... உணவின்றி தவிக்கும் மக்கள் ஒரு பக்கம் என்றால் உற்பத்தியில் வருடா வருடம் உச்சத்தை தொடும் விவசாயிகள் மறுபக்கம்.. உதாரணத்திற்கு பால் பொருட்களை எடுத்துக்கொள்வோம்.. இந்திய பால் உற்பத்தி உலகிலேயே பெரியது..கடந்த ஆண்டு இந்தியா உற்பத்தி செய்த பாலின் அளவு 176 மில்லியன் டன்கள்... ஆனால் சந்தையில் பாலுக்கு தேவை அவ்வளவு இல்லை. எனவே பாலின் கொள்முதல் விலை குறைந்து கொண்டே வருகிறது. விவசாயிகளுக்கு நஷ்டம் ஏறிக்கொண்டே போகிறது.. SMP (Skim Milk Powder) என்று சொல்லப்படும் பால் பவுடராக மாற்றி உலக அளவில் ஏற்றுமதி செய்யலாம் என்றால் உலக அளவில் பால் பவுடரின் விலையும் ஒரு டன்னுக்கு $ 3519 ல் இருந்து $ 2000 அளவுக்கு விழுந்து விட்டது.. இப்பொழுது விவசாயிகள் வீதிக்கு வந்துவிட்டார்கள். அரசே அதிக விலைக்கு பால் கொள்முதல் செய்து கொள்ளவேண்டும் என்று.. சந்தையில் தேவையே இல்லாத பொழுது அரசாங்கம் மட்டும் பாலை கொள்முதல் செய்து என்ன தான் செய்யமுடியும் ?

வாராக்கடன் அதிகம் வைத்துள்ள மாநிலம் தமிழகம்

கல்விக்கடனை திரும்ப செலுத்தாமல் வாராக்கடன் அதிகம் வைத்துள்ள மாநிலம் தமிழகம் !!!! தமிழகத்தில் வசூலாகாத கடன் தொகை : 2659 கோடி ₹ நபர்கள் : 1,71,744 பேர் இந்தியாவில் மொத்தம் வசூலாகாத கல்வி தொகை : 6356 கோடி  ₹  நபர்கள் : 3,45,340 பேர் சரியாக சொன்னால் மொத்த இந்தியாவில் வசூல் ஆகாமல் உள்ள கல்வி கடனில் 40% தமிழர்களின் கடன். மொத்த இந்தியாவில் கல்வி கடனை திரும்பி செலுத்தாத நபர்களில் பாதி பேர் தமிழர்கள் !! திமுக வெற்றி பெற்றால் கடன் தொகை தள்ளுபடி என்று நம்பி ஏமாந்த கூட்டம் இது ! தரவு - தி ஹிந்து நாளிதழ் - https://www.thehindu.com/news/national/tamil-nadu/40-study-loan-npas-are-from-tn/article24485638.ece

முதல்வன் பட பாணியில் கிரண் பேடி

புதுச்சேரி மின்சார வாரியத்துக்கு தனி நபர்கள், நிறுவனங்கள் என 25,000க்கு மேற்பட்டோர் சுமார் 120 கோடி ரூபாய் வரை மின் கட்டணம் செலுத்தாமல் பாக்கி வைத்திருந்தனர். அதிரடிக்கு பெயர் போன புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி பல மாதங்களாக மின்பாக்கி வைத்திருப்பவரின் பெயர்கள் செய்தித்தாள் மற்றும் FM ரேடியோவில் வெளியிடப்படும் (Name & Shame Campaign) என தடாலடியாக அறிவிக்க, அறிவிப்பு வெளியான தினத்தில் மட்டும் சுமார் 14 லட்சம் ரூபாய் பாக்கி வசூல் ஆனது. ( படிக்க :  https://www.deccanchronicle.com/nation/current-affairs/270618/pondicherry-electricity-dept-collects-rs-14-lakh.html ) அடுத்தடுத்த நாட்களில் பலரும் நடவடிக்கைக்கு பயந்து பணத்தை திரும்பி கட்ட சுமார் 5 கோடி ரூபாய் அளவுக்கு நான்கே நாட்களில் வசூல் ஆனது. இதில் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் மட்டும் திருப்பி செலுத்திய தொகை சுமார் 2 கோடி ரூபாய் !  ( படிக்க :  https://www.moneycontrol.com/news/india/puducherry-electricity-department-recovers-rs-4-8-crore-in-arrears-after-name-and-shame-defaulters-directive-from-kiran-bedi-2650341.html ) அடுத்து பல ஆண்ட