Posts

Showing posts with the label நாட்டு நடப்பு

முரண்பாட்டின் மொத்த உருவமே நாம்தானோ ?

Image
திருடனோ தீவிரவாதியோ சுட்டு கொல்லப்பட்டால் ஓடிவரும் எந்த மனித உரிமை அமைப்பும், திருடன் அல்லது தீவிரவாதியால் போலீஸ்காரர்கள் மடியும் பொழுது வரமாட்டார்கள். பீப் சாங் போட்டால் பற்றிக்கொண்டு கொண்டு வரும் மாதர் சங்கம் எதுவும், பெண்களுக்கு ஆண்களை விட ஊதியம் குறைவாக தரப்படும்பொழுதோ, ஸ்வாதி போன்றவர்கள் வெட்டி கொல்லப்படும் பொழுதோ எங்கே போவார்கள் என்று தெரியாது. கோவில்பட்டியில் 15 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் வரும் அதுவும் விடியற்காலை மூன்று மணிக்கு. ஆனால் அதே ஊரிலிருந்து 25 கி.மீ தொலைவில் பெப்சி மற்றும் கோலா நிறுவனம் தினமும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் எடுத்து குளிர்பானம் தயாரித்து விற்றால் சொரணை இல்லாமல் காசு கொடுத்து வாங்கி குடிக்கும் நாம். முரண்பாட்டின் மொத்த உருவமே நாம்தானோ என எண்ண தோன்றுகிறது ! கண்முன்னே நடக்கும் இந்த நிகழ்வுகளை சேர்த்து பார்ப்பதில் தான் நமது கல்வி அறிவு மண்ணை கவ்வுகிறது தவறு என்று தெரியும் ஆனால் நான் மாறினால் எல்லாம் மாறிவிடுமா என்று படித்த மேதாவிகள் தான் கேட்கிறார்கள். நாம் மேதாவிகள் அல்ல பன்னாட்டு நிறுவன ஆய்வகத்தின் எலிகள் ! இறுதியாக ஒரு வார்த்தை ம...

உமேஷ் சச்தேவுக்கு நமது வாழ்த்துக்கள் !

Image
டைம் இதழ் வெளியிட்ட ஆயிரம் ஆண்டுகளில் உலகத்தில் மாற்றத்தை நிகழ்த்தக் கூடிய 10 இளைஞர்கள் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்தியன் சென்னையை சேர்ந்த உமேஷ் சச்தேவ். இவர் தனது நண்பர் ரவி சாரோகியுடன் இணைந்து சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் யூனிபோர் சாப்ட்வேர் சிஸ்டம்ஸ் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இவர் உருவாக்கியுள்ள தொழில்நுட்பம் ஒரு மொழியில் பேசப்படும் தகவலை 25 மொழிகளில் மொழிபெயர்கவும், 150 பேச்சு வழக்குகளில் கேட்கும் வசதியுடன் மாற்றித்தரும் தன்மை கொண்டது. இவரை பற்றிய செய்தி அனைத்து ஆங்கில நாளிதல்களிலும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வெளியிடப்பட தமிழ் ஊடக உலகமோ வழக்கம் போல் கலைஞர் இராமதாஸ் வெற்று அறிக்கைகளையும், கபாலி பட அப்டேட்களையும் ஒரு பக்க அளவுக்கு வெளியிட்டு தங்கள் தரத்தை நிரூபித்துள்ளன. இன்று எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின், உமேஷ் சச்தேவ் பற்றி  முகநூலில் பதிவிட்ட பிறகே தமிழ் நாளிதழ்கள் உமேஷ் சச்தேவ் பற்றிய செய்திகளை வெளியிடத்தொடங்கியுள்ளன. தமிழ் செய்தி தொலைகாட்சிகள் வெட்டி அரசியல் பேசும் சீமான், நாஞ்சில் சம்பத் போன்றவர்களின் பேட்டிகள...

கலைஞரின் காமெடி அறிக்கை

Image
ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் ஸ்டாலினை முன் வரிசையில் அமரவைக்கவில்லை சொல்வது 93 வயதிலும் ஸ்டாலினுக்கு கட்சி தலைமை பதவியும் தராமல் முதல்வர் நாற்காலியும் தராமல் அவமதிக்கும் கலைஞர் ! குறிப்பு : தி.மு.க கட்சி ஸ்டாலினை எதிர்கட்சி தலைவராக கூட இன்னும் அறிவிக்கவில்லை. நாளை நடக்கும் கட்சி கூட்டத்தில் பேசி முடிவு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்கள். ஒருவேளை எதிர் கட்சி தலைவராகவும் கலைஞரே அமரலாம் யார் கண்டது !

மருத்துவ நுழைவு தேர்வு - சில உண்மைகள்

Image
தேசிய அளவில் மருத்துவ நுழைவு தேர்வு பற்றிய ஒரு தவறான புரிதல் என்னவென்றால் அனைத்து மருத்துவ கல்லூரி இடங்களுமே நுழைவு தேர்வு மூலம் நிரப்பப்படும் என்பதே. உண்மை என்னவெனில் மொத்த மருத்துவ இடங்களில் வெறும் 15 சதவீத இடங்கள் மட்டுமே மருத்துவ நுழைவு தேர்வு மூலம் நிரப்பப்படும். உதாரணமாக தமிழ்நாட்டில் ஒரு மருத்துவ கல்லூரியில் 100 இடங்கள் இருக்குமெனில் அதில் 15 சீட் மட்டுமே நுழைவு தேர்வு மூலம் நிரப்பப்படும் மீதி இடங்கள் வழக்கம் போல் மாநில தேர்வில் (+12 தேர்வில்)  பெற்ற மதிப்பெண்ணை கொண்டே நிரப்பப்படும். கிராமபுறங்களில் படித்தவர்களுக்கு பெரிய பாதிப்பு என்பதெல்லாம் தனியார் கல்லூரிகள் தங்கள் பண வேட்டை குறையும் என்பதற்காக கிளப்பி விடும் காரணங்கள் என்பதை நுழைவு தேர்வை எதிர்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

காணவில்லை !

Image
போலீஸ் வாகனங்கள் விடிய விடிய  சைரன் ஒலித்தபடி ரோந்து செல்கின்றன. ஊர்க்காவல் படை வீரர்கள் 24 மணிநேர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேவைபட்டால் மேலும் போலீஸ் படை குவிக்கப்படும் என அரசு சொல்கிறது. வன்முறையை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐந்து பேருக்கு மேல் சேர்ந்து செல்லக் கூடாது என கூடுதல் உத்தரவு வேறு. இது ஏதோ தேர்தல் நடக்கும் மாநிலத்தின் பதட்டமான வாக்குசாவடி பற்றிய செய்தி அல்ல. மகாராஷ்டிரா மாநிலத்தின் லதூர் மாவட்டத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க அங்குள்ள எரி, கிணறுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது பற்றிய செய்தி. அதே மாநிலத்தின் மற்றுமொரு மூலையில் 60 லட்சம் லிட்டர் தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்படும் கிரிக்கெட் ஆடுகளங்கள். கிரிக்கெட்டை வேறு மாநிலத்துக்கு மாற்ற சொன்னால் நாங்கள் வேண்டுமானால் கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்தி கொள்கிறோம் ஆனால் பணம் கொழிக்கும் IPL போட்டியை மாற்றும் எண்ணமில்லை என்று அலட்சியமாக சொல்லும் பிசிசிஐ. பாருங்கள் பிசிசிஐ கழிவு நீரைதானே ...

என் Support மல்லையாவுக்கு ! உங்களோடது ?

Image
அரசு வங்கிகளில் 9000 கோடி கடன் வாங்கிய விஜய் மல்லையா வெளிநாட்டிற்கு தப்பி ஓட்டம் ! டிராக்டர் வாங்க 3.5 இலட்சம் கடன் பெற்று அதில் கடைசி இரண்டு தவணை செலுத்தாத விவசாயியை போலீஸ் துணையுடன் அடித்து இழுத்து சென்றது தனியார் நிறுவனம் ! இதில் கூர்ந்து கவனிக்க வேண்டியது,   விஜய் மல்லையாவிற்கு எந்த தனியார் நிறுவனமும் கடன் கொடுக்கவில்லை காரணம் விஜய் மல்லையாவின் கிரெடிட் மதிப்பு அவர்களுக்கு தெரியும் ! விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் கடன்கொடுக்க இந்த விளங்காத அரசு வங்கிகள் தயார் இல்லை ! சரி இதெல்லாம் நமக்கு எதுக்கு ரெண்டு மாசத்துல IPL வருது ! சிவப்பு ஜெர்சி போட்டுட்டு சத்தமா கத்துறோம் RCB ! RCB ! நான் மல்லையா அண்ணன் டீம Support பன்றேன் ! நீங்க ?

ஸ்டிக்கர் மட்டும் தான் புதுசு நண்பர்களே !

Image
சினிமா பார்த்துவிட்டு நண்பர்களுடன் அரட்டை அடித்த படியே ECR - OMR இணைப்பு சாலையில் நடத்து சென்று கொண்டிருந்தோம். சாலையோரத்தில் ஜெயலலிதாவிற்கு புதன்கிழமை வரப்போகிற பிறந்தநாளுக்கு இன்றே வைக்கப்பட்ட பிறந்தநாள் ப்ளக்ஸ் பேனர்கள் பற்றி நண்பர் ஒருவர் கமெண்ட் அடிக்க மற்றொரு நண்பர் ஸ்டிக்கர் கலாச்சாரம் பற்றி குறிப்பிட அ.தி.மு.க அரசின் ஸ்டிக்கர் அரசியலை கலாயித்து தீர்த்தது நண்பர் பட்டாளம். இடம் :  Dr.  கலைஞர் கருணாநிதி சாலை, சோழிங்கநல்லூர்.  படிக்க தலைப்பு ! 

தி.மு.க காங்கிரஸ் கூட்டணி

Image
தி.மு.க காங்கிரஸ் கூட்டணி என்பது எதிர்பார்த்த கூட்டணி தான். சரி, பழைய தி.மு.க காங்கிரஸ் கூட்டணி யை சற்று திரும்பிபார்போம் ! 19 மார்ச் 2013, இலங்கை தமிழர் பிரச்சனையை காரணம் காட்டி தி. மு. க UPA 2 கூட்டணி மற்றும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியது. ஜூன் 2013, கனிமொழியை மீண்டும் ராஜ்ய சபாவிற்கு தேர்ந்தெடுக்க காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்பதால் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் கதவை தட்டியது தி. மு. க. அதுவும் கூட்டணி முறிந்த இரண்டரை மாதத்தில். காங்கிரஸ் போட்ட நிபந்தனை நீங்கள் உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு ஆதரவு தாருங்கள் நாங்கள் கனிமொழிக்கு ஆதரவு தருகிறோம் என்பது. குடும்பமே கழகம் என்பதால் கழக நன்மை கருதி குடும்ப உறுப்பினர் கனிமொழிக்கு ராஜ்ய சபை எம்.பி பதவி வாங்கித்தந்தார் கலைஞர் . ஆகஸ்ட் மாதம் 2013, ஏற்கனவே போட்ட ஒப்பந்தப்படி உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு ஆதரவும் அளித்தார். ஆதாரம்: http://www.ndtv.com/south/congress-to-support-kanimozhi-for-a-second-term-in-rajya-sabha-526497 மார்ச் மாதம் கூட்டணி பிளவு ! ஜூன் மாதம்...

கோஷம் ஆரம்பம் !

கடந்த ஆண்டு பீகார் மாநில தேர்தலுக்கு முன்னால் மிகச்சரியாக எழுப்பப்பட்ட நாட்டில் சகிப்புதன்மை குறைந்து விட்டது என்ற மீடியாக்களின் கோஷம் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பல எழுத்தாளார்கள் தாங்கள் பெற்ற விருதுகளை திருப்பி வழங்கி சகிப்புத்தன்மையின்மை கோஷத்துக்கு உரமூட்டினர். பீகார் தேர்தலுக்கு பிறகு இந்தியா மீண்டும் தான் இழந்த சகிப்பு தன்மையை மீட்டுவிட்டதாக மீடியாக்கள் முடிவு செய்துவிட்டனர் போலும், அதன் பின் எந்த மீடியாவும் அதைப்பற்றி பேசவில்லை, எழுத்தாளர்களின் விருதுகளும் பத்திரமாக அவரவர் வீடுகளில் உறங்குகின்றன. இந்த ஆண்டு அஸ்ஸாம், தமிழகம், கேரளா என பல மாநிலங்கள் தேர்தலை சந்திக்கின்றன. அஸ்ஸாம் தேர்தலுக்கு பிரச்சாரமும் தொடங்கிவிட்ட நிலையில் இப்பொழுது ஹைதராபாத் பல்கலைகழக மாணவர் தற்கொலைக்கு தலித் சாயம் பூசி அடுத்த பிரச்சனையை எதிர்கட்சிகளும் மீடியாக்களும் தொடங்கிவிட்டன. நன்றாக கவனித்து பாருங்கள், எல்லா செய்தி ஊடகமும் இறந்த மாணவரை தலித் அடையாளமாக மாற்ற மிகவும் முனைந்துள்ளதும், ஹைதராபாத் பல்கலைகழகம் அமைந்துள்ள தெலுங்கானா மாநில அரசை பற்றி கண்டுக...

இது தேர்தல் காலம் மக்களே

எப்பொழுதுமே வழக்குகளில் நேரில் ஆஜராவதில் வயது மூப்பு காரணமாக விலக்கு அளிக்க கோரி மனு செய்யும் தி.மு.க தலைவர் கருணாநிதி அவர்கள் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் தாமே முன்வந்து இன்று நேரில் ஆஜராக போவதாக தெரிவித்துள்ளார்.  இந்த வயசுல மனுஷன் இப்படி கோர்ட்க்கு அலைஞ்சு கஷ்டப்பட்ரார்னு மக்கள் நெனச்சு அனுதாப படுவாங்கன்னு ஒரு கணக்கு தான். இது தேர்தல் காலம் மக்களே !

தமிழகம் மிதக்கிறது !

Image
தமிழகம் மிதக்கிறது ! அரசியல்வாதிகள் ரியல் எஸ்டேட் முதலாளிகள் மற்றும் தொழிலதிபர்களின் பேராசைக்கு நீர் நிலைகளும் வடிகால்களும் இரையாகி, வெள்ள நீர் போக்கு தெரியாமல் நம் வீட்டுக்குள் வந்து நிற்கிறது. நவம்பர் மாதம் தமிழ்நாடு வெள்ளக்காடு ஆனால் மார்ச்சில் குடிக்க தண்ணீர் இல்லை என குடங்களுடன் வீதியில் இறங்கவேண்டியுள்ளது. நமது ஆட்சியாளர்களும் திறமையற்றவர்கள் அல்ல அவர்கள் திறமைக்கு ஒரு சின்ன உதாரணம் டாஸ்மாக் போராட்டம் தீவிரமாக நடத்து வந்தபொழுது மூன்று நாள் பழைய செய்தியான இளங்கோவன் ஜெயலலிதா பற்றி பேசிய அவதூறு பேச்சுக்கு போராட்டம் அறிவித்து டாஸ்மாக் போராட்டத்தையே திசை திருப்பிய திறமையான ஆட்சியாளர்கள் கொண்ட மாநிலம் நமது. எதிர்கட்சிகளும் ஒன்றும் ஒழுக்க சீலர்கள் அல்ல அவர்கள் தலையில் 2G கத்தி இன்னும் தொங்கிக்கொண்டு தான் இருக்கிறது அவர்கள் மாவட்ட செயலாளர்களும் ஆட்டம் போட வாய்ப்பை எதிர்பார்த்து தயாராகத்தான் உள்ளார்கள். மழைவந்தால் ஒரு சாப்பாடு பொட்டலத்தோடு கேமராமேனையும் கூட்டி வந்து நம்மை சந்திப்பார்கள் . ஆனால் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு எல்லாம் நமது கட்சிகளிடம்...

மழைதான் 2016 தேர்தலின் துருப்புசீட்டு

Image
ஜெயலலிதா ஆட்சியில் எப்பொழுதுமே அவரது கடைசி 6 மாதங்கள் அவருக்கு சவாலாக அமைந்துவிடும். இந்த முறை எதிர் கட்சிகள் சிதறிக்கிடக்க, தாங்கள் செய்த நல திட்டங்கள் மற்றும் இலவசங்கள் எப்படியும் கைகொடுக்கும் என்ற துணிச்சலில் 234ம் நமதே என கோஷமிடுகிறது அதிமுக. ஆனால் ஜெயலலிதாவின் உண்மையான சவால் இந்த முறை எதிர் கட்சிகள் அல்ல வடகிழக்கு பருவமழை தான் ! நான்கரை வருடம் எதிர்கட்சிகளை வளரவிடாமல் அரசியல் செய்து அதில் வெற்றியும் பெற்ற ஜெயலலிதா வருண பகவானை எப்படி எதிர்கொள்ள போகிறார் என்பதே அவரது 2016 வெற்றியை தீர்மானிக்கப்போகிறது. ! குறிப்பாக திமுகவின் கோட்டை என்று சொல்லப்படும் சென்னையை 2011 ல்  அதிமுக வசமாக்கினார் ஜெயலலிதா. ஆனால் இன்று மூழ்கி கிடக்கும் சென்னையை கரைசேர்க்காவிட்டால்  2016ல் அதிமுக மூழ்குவதை அவரால் வேடிக்கை மட்டும் தான் பார்க்கமுடியும்.  

இந்தியா ஒளிர்கிறது ?

Image
காலை சிற்றுண்டியை முடித்து விட்டு உணவகத்தில் இருந்து வீட்டுக்கு அரசாங்கம் போட்டு தந்த பளபளப்பான நான்கு வழி சாலையின் ஓரமாய் நடத்து வந்துகொண்டு இருந்தோம். எங்களுக்கு முன்னே நடந்து சென்று கொண்டிருத்த பெரியவர் (வயது உறுதியாக 70க்கு மேல் இருக்கும்) மயங்கி சரிவதை கண்ட  எனக்கும் நண்பனுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஓடிசென்று அவரை தூக்கி ஓரமாக நிழலில் உட்காரவைத்தோம். எங்களுடன் உதவிக்கு வந்த நல்ல உள்ளங்கள் அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க  அவரையும் அறியாமல் பசிக்குது என்றார். 10 அடி தூரத்தில் ஹோட்டல் ஆனால் அவரால் நடக்க முடியவில்லை. ஓடி சென்று 4 இட்லி வாங்கிவந்தோம். அவருக்கு இருக்கும் பசியில் பக்கத்தில் இருந்த குப்பை தொட்டியில் இருந்து வரும் மோசமான வாடையை அவர் பொருட்படுத்தவில்லை. உங்க வீட்ல உள்ளவங்க போன் நம்பர் இருந்த சொல்லுங்க ஐயா நாங்க அவங்கள வரசொல்றோன்னு சொன்ன பொழுது போன் நம்பர் கொடுத்தா செத்து போன உன் பொண்டாட்டி கிட்ட பேசப்போறியா என்று பெத்த மகன்கள் கேட்டதாக சொன்னார் பெரியவர். பாவம் அவர் மகன், மனிதனை என்றும் இளமையாய் வைத்திரு...

கருத்தாக்கம் (opinion) மக்களிடம் எப்படி உருவாகிறது ?

Image
ஒரு விஷத்தை பற்றி  கருத்தாக்கம் (opinion) மக்களிடம் எப்படி உருவாகிறது என்று ஆராயவேண்டும் என்று ஆர்வம் எனக்கு அதிகம் உண்டு. உதாரணமாக மூன்று வித்தியாசமான நிகழ்வுகளை நான் அலச விரும்புகிறேன் : உதாரணம் #1: புலி படத்தை எடுத்துக்கொள்ளலாம். புலி படம் ப்ளாப் என்பது படம் பார்க்காத எனக்கும் இப்பொழுது மனதில் பதிந்து விட்டது. காரணம் தெரியவில்லை. எல்லாரும் சொல்றாங்க எனக்கும் அப்படியே ! உதாரணம் #2: சரி இன்னொரு சீரியஸான நிகழ்வை அலசுவோம். விஜயகாந்த் வெறும் நடிகராகவும், நடிகர் சங்க தலைவராகவும் இருந்த வரை அவரை தலையில் வைத்து கொண்டாடியது தி.மு.க வின் குடும்ப சேனலான  சன் டிவி. நடிகர் சங்க கடன்களை அடைக்க வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்தும் ஐடியாவை புகழ்ந்து விஜயகாந்தை உச்சத்துக்கு எடுத்து போனதில்  சன் டிவி பங்கு கனிசமானது. சரி அதே விஜயகாந்த் அரசியலுக்கு வந்துவிட்டார் . அசுர வேகமாக வளர்ந்தார். எதிர்கால முதல்வர் வேட்பாளர் பட்டியலில் இடம் பெரும் அளவுக்கு மக்கள் நம்பிக்கையை பெற்றார். ஆனால் கலைஞர், ஜெயலலிதா இருவர் மட்டுமே எப்பொழுதும் தமிழக முத...

முதுகில் குத்தும் நண்பன் !

Image
இந்தியாவும் அமெரிக்காவும் 21ஆம் நூற்றாண்டுக்கு பிறகு நெருங்க ஆரம்பித்தார்கள். குறிப்பாக செப்டம்பர் 11, 2001 இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகே பாகிஸ்தானுக்கு ஜாலரா அடிப்பதை குறைத்து கொண்டது அமெரிக்கா. இன்று ஓபாமாவும் மோடியும் செல்பி நண்பர்களாக இருக்கலாம் ஆனால் அமெரிக்கா என்றுமே வியாபார நோக்கத்தை மட்டுமே முன் நிறுத்தும் நண்பன் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியா 2022 ஆம் ஆண்டுக்குள் சூரிய சக்தியை கொண்டு உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவை 20,000 மெகாவாட் அளவுக்கு உயர்த்த முடிவெடுத்துள்ளது. முடிவு எடுக்கப்பட்டது 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில். அமெரிக்கா இதற்கு உச்சி குளிர வாழ்த்து சொல்லியது. (காரணம் இல்லாமலா ?)ஆனால் 2014 ஆம் ஆண்டு மோடி அரசு பொறுப்பேற்றதும் சூரிய கொள்கையில் பெரும் மாற்றம் செய்யப்பட்டது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சூரிய செல் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதே கொள்கை மாற்றமாகும். (Make in India). நீங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சூரிய செல்லை பயன்படுத்தினால் தான் உங்களுக்கு மானிய சலுகை எல்லாம் கிடைக்கும். இந்தியாவிலேயே ...

2015 திரும்பி பார்க்கிறோம் !

2015 ல் இதுவரை நடந்த நிகழ்வுகள் அதற்கு இந்திய மக்கள் கொடுத்த ரியாக்சன்கள் (Reactions) ஆகியவற்றின் தொகுப்பு 2015 திரும்பி பார்க்கிறோம் தோனி ஓய்வு   வருந்தினோம், மறந்தோம் ஜனவரி 26 ஒபாமா வருகை வரவேற்றோம், மறந்தோம் அக்னி ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை பெருமைபட்டோம் மறந்தோம் டெல்லியில் அரவிந்த் கெஜர்வால் வெற்றி ஆச்சர்யப்பட்டோம் , மறந்தோம் உலகமே திணறிய பொழுது , ஏமன் மண்ணில் இருந்து நமது சகோதரர்கள் வெற்றிகரமாக மீட்பு கர்வம் கொண்டோம் , மறந்தோம் உலக கோப்பை தோல்வி கோலி , அனுஷ்காவை திட்டி தீர்த்தோம் மறந்தோம் 20 தமிழகர்கள் ஆந்திரா வனப்பகுதியில் சுட்டுக்கொலை செய்தியை படிக்க மறந்தோம் IPL பார்த்தோம் நேபாள் பூகம்பம் கண்ணீர் விட்டோம் மறந்தோம் ஜெயலலிதா விடுதலை குமாரசாமிக்கு கும்பிடு போட்டோம் மறந்தோம் மியான்மார் எல்லையில் இந்திய இராணுவம் அதிரடி தாக்குதல் மீசையை முருக...

ஆடி தள்ளுபடியில் இன்ஜினியரிங் சீட்

Image
தனது கனவுகளை நனவாக்க ஒரு குழந்தை  ! தனது கஷ்டத்தை தீர்க்க ஒரு குழந்தை என்று குழந்தைகள் பார்க்கப்பட்டது அந்த காலம். தனது பணத்தை வெளியுலகிற்கு காட்டவும் தனது தகுதியை வெளியுலகிற்கு காட்டவும்  இன்று குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள். மகனுக்கும் மகளுக்கும் பொறியியலில் ஆர்வமே இல்லையென்றாலும் தனது ஸ்டேடஸ்க்காக(status) பொறியியல் படிக்கவைத்து பெரிய கல்லூரி என பல கல்லூரிகளில் நன்கொடை கொடுத்து பொறியியலுக்கு HYPE உருவாக்குவதே இந்த பெற்றோர் தான். என்மகன் சென்னையில் இந்த கல்லூரியில் படிக்குறான் நான் இந்தனை இலட்சம் கொடுத்து எனது மகனை கல்லூரியில் சேர்த்தேன் என்று கல்யாண வீடுகளில் பெருமை பேசும் பெற்றோர் பலர். இவர்களுக்கு சரியான ஒப்பீடு ரியல் எஸ்டேட் முதலாளிகள் தான் ! விலை போகாத நிலத்தை விலையேற்றி இன்று யாருமே நிலம் வாங்க முடியாத நிலைக்கு ஆளாக்கிய ரியல் எஸ்டேட் முதலாளிகள் போல் வேலைவாய்ப்பே இல்லையென்றாலும் பொறியியலுக்கு டிமாண்ட் உருவாக்குவது இவர்கள்தான். வரும் காலங்களில் ஆடி தள்ளுபடியில் இன்ஜினியரிங் சீட் விற்கப்பட்டால் ஆச்சர்யப்படாதீர்கள்.

அப்துல் கலாமுக்கு என்ன வேலையோ ?

Image
தமிழக மக்களை குறிப்பாக இளைஞர்களை மீளா துயரத்தில் ஆழ்த்தியது அப்துல் கலாம் மறைவு ! அப்துல் கலாம் சொன்ன வழியில் நடந்து நாட்டைத்தான் உருப்புட செய்யப்போவதில்லை அட்லீஸ்ட் Whatsapp குரூப்களுக்கு அவரது படத்தையும் பெயரையும்வைப்போம் என நாங்கள் மனதை ஆறுதல் படுத்திக்கொண்டோம். இனி வருடாவருடம் ஜூலை கடைசியில் Facebook, Whatsapp குரூப்களில் தவறாமல் கலாம் புகைப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்துவோம்  அவ்வளவுதான் தமிழக இளைஞர்கள் சக்தி. புலி படமோ தல 56 வது படமோ வெளிவந்தால் அப்துல் கலாமுக்கு Facebook,Whatapp ல் என்ன வேலையோ ? #RIPAbdulKalamQuotes #RIPAbdulKalamDreams - விக்கி 

ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் இணைப்பது எப்படி ?

Image
மத்திய அரசு  ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இணைப்பை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு முகாம்களும் தொகுதி வாரியாக ஏற்கனவே நடத்தப்பட்டுவிட்டது.  நீங்கள் உங்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை இணைத்து விட்டீர்களா ?  இணைக்காவிட்டால் கவலைப்படவேண்டாம்.  ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை இணைப்பை  ஆன்லைனிலும் ஏன் மொபைலிலும் கூட  செய்யலாம்.  அதற்கான வழிமுறைகள் இதோ ! http://electoralsearch.in/  தளத்துக்கு செல்லவும்.  முதலில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணை (EPIC Number ) கொண்டோ அல்லது தகவல்களை கொண்டோ உங்கள் வாக்காளர் விவரங்களை தேடவும் (Search). உங்கள் வாக்காளர் தகவல்கள் கீழே காட்டப்படும். அதில் FEED AADHAAR NO. என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் ஆதார் தகவல்களை தரவும். ஆதார் தகவல்களை உள்ளீடு செய்த பின் submit செய்யவும்.  உங்கள் ஆதார் கார்டு வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்பட்டுவிடும். மேலே குறிப்பிட்ட வழிமுறைகளில் சந்தேகம் இருப்பின் அல்லது மேலே தரப...

சென்னை MTCக்கு ஆண்கள் சார்பாக ஒரு கோரிக்கை

Image
சென்னைக்கு வந்த பொழுது எனக்கு இரண்டு விஷயங்கள் ஆச்சர்யத்தை கொடுத்தது. முதலாவது பேருந்தில் இடது புறம் இருக்கை முழுவதும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது, இரண்டாவது பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில்  அமரும் ஆண்களை " எழுந்திரிங்க இது லேடீஸ் சீட் " என்று தங்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமையை விட்டுக்கொடுக்காமல் கேட்டுப்பெறுவது (நம்ம ஊர்ல பொண்ணுங்க தைரியமா இது லேடீஸ் சீட் எழுந்திரிங்க என்று குரல் கொடுத்து நான் பார்த்தது இல்லை). ட்ரைனிங் பீரியட் பொழுது ஆபீஸ் நடந்து போகும் தொலைவில் இருந்ததால் பேருந்தில் பயணம் என்பது ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான். சமீப மாதங்களில் பேருந்தில் ஆபீஸ் சொல்லவேண்டிய  சூழல்.ஆபீஸுக்கு பேருந்தில்  பயணிக்கும் பொழுது மற்றுமொரு ஆச்சர்யமான நிகழ்வு நடந்தது. இடது பக்கம் பெண்கள் இருக்கை பலவும் காலியாக இருக்க பெண்கள் வலது பக்கம் உள்ள இருக்கைகளை ஆக்கிரமித்து  இருந்தார்கள். ஆண்கள் பலர் நின்று கொண்டே பயணம் செய்தார்கள். அடுத்த அடுத்த பேருந்து நிறுத்தங்களில் காலியாக இருந்த பெண்கள் இருக்கைகளும் நிரம்பிவிட்டன. கடைசி வரை ஆண்கள் நின...