ஆடி தள்ளுபடியில் இன்ஜினியரிங் சீட்

தனது கனவுகளை நனவாக்க ஒரு குழந்தை  !
தனது கஷ்டத்தை தீர்க்க ஒரு குழந்தை என்று குழந்தைகள் பார்க்கப்பட்டது அந்த காலம்.

தனது பணத்தை வெளியுலகிற்கு காட்டவும் தனது தகுதியை வெளியுலகிற்கு காட்டவும்  இன்று குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள்.

மகனுக்கும் மகளுக்கும் பொறியியலில் ஆர்வமே இல்லையென்றாலும் தனது ஸ்டேடஸ்க்காக(status) பொறியியல் படிக்கவைத்து பெரிய கல்லூரி என பல கல்லூரிகளில் நன்கொடை கொடுத்து பொறியியலுக்கு HYPE உருவாக்குவதே இந்த பெற்றோர் தான்.

என்மகன் சென்னையில் இந்த கல்லூரியில் படிக்குறான் நான் இந்தனை இலட்சம் கொடுத்து எனது மகனை கல்லூரியில் சேர்த்தேன் என்று கல்யாண வீடுகளில் பெருமை பேசும் பெற்றோர் பலர்.

இவர்களுக்கு சரியான ஒப்பீடு ரியல் எஸ்டேட் முதலாளிகள் தான் ! விலை போகாத நிலத்தை விலையேற்றி இன்று யாருமே நிலம் வாங்க முடியாத நிலைக்கு ஆளாக்கிய ரியல் எஸ்டேட் முதலாளிகள் போல் வேலைவாய்ப்பே இல்லையென்றாலும் பொறியியலுக்கு டிமாண்ட் உருவாக்குவது இவர்கள்தான்.

poor engineering


poor engineering

poor engineering

வரும் காலங்களில் ஆடி தள்ளுபடியில் இன்ஜினியரிங் சீட் விற்கப்பட்டால் ஆச்சர்யப்படாதீர்கள்.

Comments

Popular posts from this blog

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Download Tamil books free in PDF format - Project Madurai

சங்கதாரா புத்தக விமர்சனம்

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)