இந்திய செய்தி சேனல் பார்க்க போறிங்களா ? எச்சரிக்கை !

யாகூப் மேமன் குற்றவாளி என பலமுறை தனது தீர்ப்பில் சுட்டிகாட்டிய உச்ச நீதிமன்றம் அவருக்கு எந்த கருணையும் காட்டாமல் தீர்ப்பை உறுதி செய்த பின்னரே யாகூப் மேமன் தூக்கு நிறைவற்றப்பட்டது !

இதை பற்றி செய்தி வெளியிட்ட தமிழ் ஹிந்து நாளிதழின் இணைய தளம், யாகூப் மேமன் தூக்கு நிறைவற்றப்பட்டது என்ற செய்திக்கு கீழேயே யாகூப் மேமன் நல்லவர் என்பது போன்றதொரு கட்டுரையையும் பிரசுரித்தது..

எனில் நீங்கள் நாட்டுமக்களுக்கு என்ன சொல்லவருகிறீர்கள் ? யாகூப் மேமன் என்ற ஒரு நல்லவன் உச்சநீதிமன்றத்தின் தவறான தீர்ப்பால் தூக்கில் இடப்பட்டார் என்றா ?? 



மீடியாவின் TRP பசி TRP வெறியாக மாறிக்கொண்டிருக்கிறது.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியில் கையாளப்பட்ட ஹிந்து முஸ்லிம் பிரிவினை அரசியலை விட மோசமான பிரிவினை அரசியலை இப்பொழுது தங்கள் பிழைப்புக்காக மீடியாக்கள் கையாள்கிறார்கள்.

இந்திய மக்கள் மதங்களை தாண்டி என்றுமே நல்லவர்களை கொண்டாடவே செய்கிறார்கள். அதற்கு திரு. அப்துல் கலாம் ஐயா ஒரு சிறந்த உதாரணம். மீடியா விளையாடும் ஹிந்து முஸ்லிம் விளையாட்டில் நாம் விழுந்து விடக்கூடாது.

மீடியாவின் செய்திகளை எச்சரிக்கையுடனேயே அணுகுவோம் ! 

Comments

Popular posts from this blog

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)

நல்ல தமிழில் எழுதுவோம் - 1

சங்கதாரா புத்தக விமர்சனம்

Download Tamil books free in PDF format - Project Madurai