Posts

Showing posts from April, 2018

பாதுகாப்பு + பொருளாதாரம் = வெளியுறவு கொள்கை

நம்மில் பலரும் foreign affairs என்று சொல்லப்படும் வெளியுறவு கொள்கை மற்றும் வெளிநாடுகளுடன் நல்லுறவை வளர்க்க இந்தியா எடுக்கும் நடவடிக்கைகள் எல்லாம் பொழுது போக்கிற்கு செய்யும் வெட்டி வேலை என்றே எண்ணுகிறார்கள். ஆனால் நமது நாட்டின் பாதுகாப்பை மட்டுமல்ல பொருளாதாரத்தையும் வளர்ப்பதில் வெளியுறவு கொள்கை மிக முக்கிய பங்காற்றுகிறது. ஒரு உதாரணம் சொல்கிறேன்.. வெள்ளி போல தோற்றம் அளிக்கும் லித்தியம் (Lithium) உலோகத்தை பேட்டரி தயாரிப்பில் முதன்மை மூலப்பொருளாக பயன்படுத்துகின்றனர். நமது செல்போன் பேட்டரிகள் Lithium Ion என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.  பொலிவியா (Bolivia) என்ற வட அமெரிக்க நாட்டில் லித்தியம் எக்கச்சக்கமாக கிடைக்கிறது. இதே போல் பொலிவியாவை சுற்றி இருக்கும் அர்ஜென்டீனா (Argentina) மற்றும் சிலி நாட்டிலும் அள்ள அள்ள குறையாத லித்தியம் கிடைக்கிறது. இந்த மூன்று நாடுகளை Lithium Triangle Countries என்று செல்லமாக அழைப்பர். இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள் தங்களது பெட்ரோல் மற்றும் டீசல் இறக்குமதியை குறைக்க (இந்தியா ஒவ்வொரு வருடமும் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பெட்ரோலிய