நல்ல தமிழில் எழுதுவோம் - 1

தமிழில் எழுதும் பொழுது பலருக்கு ஏற்படும் சந்தேகம் மூன்று சுழி "ண்", இரண்டு சுழி "ன்" மற்றும் "ந்" இவற்றில் எதை பயன்படுத்துவது என்பது.

இந்த குழப்பத்துக்கு எளிய தீர்வை நண்பர் ஒருவர் அனுப்பினார்.

"ண்" இதன் பெயர் டண்ணகரம்,
"ன்" இதன் பெயர் றன்னகரம்,
"ந்" இதன் பெயர் தந்நகரம்

அதாவது எப்பொழுதெல்லாம் மூன்று சுழி ண வருகிறதோ அதைத்தொடர்ந்து வரும் எழுத்து ட வரிசையாகத்தான் இருக்கும் (அதனால் தான் டண்ணகரம்).

உதாரணம் - மண்டபம் (கவனிக்க மன்டபம் என்பது தவறு), இரண்டு

அதேபோல் எப்பொழுதெல்லாம் இரண்டு சுழி ன வருகிறதோ அதைத்தொடர்ந்து வரும் எழுத்து றகர வரிசையாகத்தான் இருக்கும்.

உதாரணம் - அன்றாட, இன்றைய

அதேபோல் ந வை தொடர்ந்து த எழுத்துக்களே வரும்

உதாரணம் - இந்தியா (இன்தியா என்பது தவறு)

நல்ல தமிழில் எழுதுவோம் iamvickyav
நல்ல தமிழில் எழுதுவோம் 
- விக்கி 

Comments

  1. Super ..

    Apdiye 'உதாரணம்', 'கவனிக்க', 'அதனால்' pondra vartaigaluku sonnal, sirappu ..

    Continue more like this ..

    ReplyDelete

Post a Comment

Post ur comments and help us to improve

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)